LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -2 , ராம்பிரசாத், அட்லாண்டா

பெயர்: ராம்பிரசாத்
பிறந்த ஊர்: மயிலாடுதுறை
வசிக்கும் ஊர்: அட்லாண்டா, அமெரிக்கா.,
பணி / தொழில்: கணினி மென்பொருள்

இதுவரை ஏழு தமிழ் நாவல்களையும் இரண்டு ஆங்கில நாவல்களையும் எழுதி இருக்கும் ராம்பிராசாத்தின்
நூல்கள் பற்றிய சிறு அறிமுகம் இங்கே..

நூல்: ஒப்பனைகள் கலைவதற்கே - நாவல்
‘ஒப்பனைகள் கலைவதற்கே’ ஒரு சமூக நாவல். இது என் முதல் நாவலும் கூட. பொதுவாகக் காதல் என்பது உணர்ச்சிகள் சார்ந்தது என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. காதல் என்பது உணர்ச்சிகள் சார்ந்தது என்றால் உணர்ச்சிகள் என்பது புரிதல்களால் தூண்டப்படுவது. ஆகையால், காதல் என்பது புரிதல்களின் பக்கவிளைவு என்கிற கருத்தாக்கத்தினைப் பதிவு செய்யும் நாவல்

நூல்: உங்கள் எண் என்ன? - நாவல்
இது தமிழின் முதல் கணித நாவல் ஆகும். எண்களாலானது பிரபஞ்சம். காலம், பேரண்டம், பெருவெளி என எல்லாமே எண்களாலானது. மனித உறவுகளையும் கூட எண்களும், அவைகளுக்கிடையேயான சமன்பாடுகளும், அவற்றை உள்ளடக்கிய கோட்பாடுகளுமே நிர்ணயிக்கின்றன. பிரபஞ்சத்தையும், பேரண்டத்தையும், காலத்தையும் மானிட உறவுகளோடு இணைத்துப்பார்ப்பதே பேரறிவு என்பதைத் தீவிரமாக நம்புகிறேன் நான். குருட்டுத்தனமாக எதையும் சொல்லிவிட எண்களாலான உலகம் அனுமதிக்காது. சமன்பாடுகள் கேட்கும். காரணங்கள் கேட்கும். அது எப்படி எண்களுடன் பொருந்துகிறது என்று கேட்கும். அதை நிரூபிக்கச்சொல்லும். அதன் விளைவுகளைச் சரிபார்க்கும். இந்த நாவலில் மனித உறவுகளை இயக்கும் எண்கள் குறித்தும் அவற்றினிடையே உள்ள சமன்பாடுகள் குறித்தும் அவை உணர்த்தும் கோட்பாடுகள் குறித்தும் எண்கள் வழி பேசியிருக்கிறேன். எண்கள் வழி நிரூபிக்க முயன்றிருக்கிறேன். இவ்வகையான நாவல் கட்டுமானம் மற்றும் எழுத்துமுறை என் சிந்தனை ஓட்டத்துக்கு முற்றிலும் அணுக்கமானது. நான் சிந்தித்ததை அப்படியே வரிமாறாமல் நாவலாக்கியிருக்கிறேன்.

நூல்: இரண்டு விரல்கள் - நாவல்
இரண்டே இரண்டு விரல்களில் தான் ஐடி கம்பெனி வாழ்க்கை என்பது. ஒரு முழு வாழ்க்கையை இரண்டே இரண்டு விரல்களை முதலீடாக வைத்துத் துவங்குவதன் விளைவுகள் குறித்துப் பேசும் நாவல் “இரண்டு விரல்கள்”. தகுதி உடைய வாழ்வனுபவம் சரியானவர்களிடத்தே போய்ச் சேரவைக்க ஒரு குற்றத்தால் தான் முடியும் என்பது இக்காலகட்டத்தின் நிர்பந்தமாக இருப்பதைக் குறித்து இந்தக் குறுநாவல் பேசுகிறது.

நூல்: அட்சயபாத்திரா - நாவல்
இந்த நாவலின் கதை இனி நிஜத்தில் நடக்கச் சாத்தியங்கள் அனேகம். ஆங்கிலத்தில் Salami Slicing என்பார்கள். Penny Shaving என்பார்கள்.அந்தவகையில் சிற்சில நிகழ்வுகள் நடந்திருப்பதாக, செய்தி அல்ல, வதந்திதான் உலவுகிறது. அந்தப்படியாக வங்கிக்கொள்ளைகள் குறித்து எழுதப்பட்டிருக்கின்றன. ஆனாலும், ‘அட்சயபாத்திரா’ நாவலில் வரும் வங்கிக் கொள்ளை சற்று வித்தியாசமானது. அந்தக் காரணத்திற்காகவே அதை ஹாலிவுட் கதைகள் வரிசையில் கூடச் சேர்க்கலாம் என்பது என் பரிந்துரை. என் அனுபவத்தில் இந்த விதமாக வங்கிப்பணத்தைக் கொள்ளை அடித்து ஒரு படம் நான் பார்த்ததில்லை. ஒரு நூல் வாசித்ததில்லை. ஆக அந்த வகையில் இந்த நூல் அதன் தன்மையில் முதலாவது என்றே நினைக்கிறேன்.

நூல்: வரதட்சணா - நாவல்
வரதட்சணை என்கிற வார்த்தையின் அர்த்தம் ஒரு நிலப்பரப்பின் கலாச்சாரம், அந்த நிலப்பரப்பில் வாழும்
மக்களின்பொதுவானதரம், அவர்களிடையே நிலவும் அற உணர்வு போன்றவற்றால் எப்படியெல்லாம் குறுகி, அனர்த்தமாகவோ அல்லது முற்றிலும் வேறான அர்த்தமாகவோ பாவிக்கப்படுகிறது என்பதே இந்த நாவலின் மையம். இந்த வார்த்தையின் பன்முனைகளுள் ஒன்றை விளக்க ஒரு புனைவு நாவல் தேவைப்படுவதை ஒரு சமூக அவலம் எனலாம். சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பெருவாரியான மனிதர்களால் இருட்டடிக்கப்படும் ஒன்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுவது இந்த நாவலின் நோக்கங்களுள் ஒன்று.

நூல்: ஏஞ்சலின் மற்றும் சிலர் - நாவல்

ஒரு குற்றத்தின் வடிவம் என்ன? குற்றங்களின் வடிவமைப்பு நமக்குச் சொல்ல வருவது என்ன? குற்றவாளி என்பவன் உண்மையில் யார்? ஒரு குற்றத்தில் நிரபராதியின் பங்குதான் என்ன? நிங்கள் செய்ய வேண்டிய குற்றம் எது? தண்டனை என்னும் விடுதலை குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? தெரியாதெனில் இந்த நாவலை வாசித்துப்பாருங்கள்.

நூல்: வதுவை - குறுநாவல்
“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதெனச் சொல்லப்படுகிற பின்னணியில், 1990ல் பிறந்த பெண்ணுக்கான கணவனை எல்லாம் வல்ல இறைவனே 1980ல் பிறக்க வைத்திருந்தால், இரண்டு வயது வித்தியாசத்தில் தான் மணமகன் வேண்டுமென்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் நடக்கும் திருமணம் இறுதியில் என்னவாகும்? அதை நாம் எப்படிப் பார்க்க இருக்கிறோம்? யாரின் மேல் பழி சொல்ல இருக்கிறோம்? யாரைக் குற்றவாளி ஆக்க இருக்கிறோம்?”

நூல்: Those Faulty Journeys - Novel
Marriages are made in heaven. We don’t cross anyone by chance. But what if people glue together by chance? Our social system ensures just that while making us all believe that we are brought together by the great grand design. Meet the two Indian couples who share the same neighborhood. How far are they from the tail of the great grand design? What makes their journeys a faulty one? Read this Mathematical Fiction novel to know we all are part of a huge number system and a system of equations governs us all.

நூல்: Inexhaustible - Novel

Meet Vimal, Varsha, and Arvind, three young software engineers who happened to fall in a love triangle. Arvind - the smartest among the three - formulates a way to find inexhaustible money which tightens their relationship but what intelligence did to them makes a thrilling story to read and cherish.

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின்  நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 23 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3 வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -20 , ஜெயா மாறன்,அட்லாண்டா (ஜியார்ஜியா), வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -20 , ஜெயா மாறன்,அட்லாண்டா (ஜியார்ஜியா), வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -19 , மீ.மணிகண்டன்,ஆஸ்டின் (டெக்சாஸ்), வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -19 , மீ.மணிகண்டன்,ஆஸ்டின் (டெக்சாஸ்), வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -18 , நாகேஸ்வரி அண்ணாமலை,நியூ ஹாம்ஷயர்  ,அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -18 , நாகேஸ்வரி அண்ணாமலை,நியூ ஹாம்ஷயர் ,அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -17 , இரம்யா ரவீந்திரன்,வட கரோலைனா,அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -17 , இரம்யா ரவீந்திரன்,வட கரோலைனா,அமெரிக்கா
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1- சிறப்புரை  திரு. ஸ்டாலின் குணசேகரன் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1- சிறப்புரை திரு. ஸ்டாலின் குணசேகரன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் மற்றும் திருமிகு . த. ச. பிரதிபா பிரேம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  எழுத்தாளர் திரு. ஆரூர் பாஸ்கர் மற்றும் திருமிகு . த. ச. பிரதிபா பிரேம்
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1-அறிமுக உரை -ச.பார்த்தசாரதி வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் 1-அறிமுக உரை -ச.பார்த்தசாரதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.