LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -5 , அகிலா கண்ணன் ,விர்ஜினியா

பெயர்: திரு.அகிலா கண்ணன்
பிறந்த ஊர்: திருநெல்வேலி
வசிக்கும் ஊர்: ஹர்ண்டன் (விர்ஜினியா, வட அமெரிக்கா)

 

கவிதை, சிறுகதை எனக் கல்லூரியில் தொடங்கிய அகிலாவின் எழுத்துப்பயணம் இன்று சமுதாயச் சிந்தனைகளைத் தொட்டுச் செல்லும் குடும்ப நாவல்களாகத் தொடர்கிறது. இதுவரை 14 நாவல்களையும் 10 சிறுகதைகளையும் எழுதியுள்ள அகிலாவின் படைப்புகள் இணைய, அச்சு இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன. அவருடைய நூல்கள் பற்றிய சிறு அறிமுகம் இங்கே. அகிலா கண்ணன் எழுதிய சிறுகதைகளைப் பற்றிய சிறு குறிப்பு:இ-விகடனில் வெளியான சிறுகதை:


1. யார் பைத்தியம்? ஒரு மனிதனின் கவனமின்மை ஒரு சிறுமியின் வாழ்வை எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறும் சம்பவம். முரசு சங்கமம் இதழில் வெளியான சிறுகதை.

2. கருப்பன்: ஆண்களின் குடிப்பழக்கத்தால் பெண்கள் படும் அவலத்தை எடுத்துரைக்கும் கதை. 

3. வெற்றிப் புன்னகை: பெண்களுக்குப் படிப்பின் அவசியத்தைக் கூறி பெண்கள் முகத்தில் புன்னகை நிலைக்க வழிவகுக்கும் கதை. அமேசான் கிண்டில் இல் (Amazon Kindle)  வெளியிட்டுள்ள சிறுகதை:

4. உறவென்னும் ஊஞ்சல்: உறவுகளின் அவசியத்தைப் பேசும் உணர்வுகளின் வெளிப்பாடு. 

5. தமிழா தமிழா கண்கள் கலங்காதே: ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எழுதிய சிறுகதை. 

6. தண்ணீர் தண்ணீர்: தண்ணீரின் அவசியத்தைப் பேசும் அறிவியல் புனைவு கதை.

7. உப்புமா உரைக்கும் உண்மை: வெற்றி தோல்விகளைக் கடக்க வாழ்வின் எதார்த்தத்தைப் பேசும் சம்பவம்.

8. போதையில் கொரோனாவா மனிதனா? கொரோனாவின் தாக்குதலை மையமாக வைத்துப் புனையப்பட்ட சிறுகதை.

9. சங்க இலக்கியப் பாடலைத் தழுவிய சிறுகதைகள்: சங்க இலக்கியப் பாடல்களை மையமாக வைத்து

இன்றைய காலக்கட்டத்திற்கு ஏதுவாகச் சில சிறுகதைகள் எழுதியுள்ளார். 

நாவல்களுடனான அவர் பயணம்:
2018 ஆம் ஆண்டு, எஸ்.எம் வலைத்தளத்தில் தேடல் மூலமாக முதல் நாவலை எழுத ஆரம்பித்த அவர் தற்பொழுது தன் பதினான்காவது நாவலை எழுதிக்
கொண்டிருக்கிறார்.

எம். எஸ் பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிடப்பட்ட நாவல்:
1. கட்டங்கள்: சூழ்நிலைகள் மாறுபட்டுத் திருமணமாகும் பெண், எப்படித் தன் புகுந்த வீட்டில் தன் வாழ்வை எதிர்நோக்குகிறாள் என்றெடுத்துரைக்கும் நாவல். 

2. இரண்டல்ல ஒன்று: ரோபோட் பற்றிய தொழில் நுட்பத் தகவல்கள் இழையோட, திருமணத்திற்குப் பின் இருசகோதரிகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நாவல்.

3. கண்ணாடி மாளிகை: காதலில் தோற்றால் என்ன? ஜெயித்தால் என்ன? காதல் சுகமா? வலியா? என்று இன்றைய இளைஞர்களின் காதலை நயம்படக்
காட்டும் நாவல்.

4. வா... அருகே வா! ராணுவ வீரனின் குடும்பத்தின் மனப்போராட்டத்தை எடுத்துரைக்கும் நாவல்.

5. குறும்புப் பார்வையிலே: இன்றைய புதுக் கலாச்சாரமான ப்ரீ வெட்டிங் ஷூட் (pre wedding shoot) இளம் தம்பதியினரின் வாழ்வை எப்படித் திசை திருப்புகிறது என்பதை நயம்பட எடுத்துரைக்கும் நாவல். மாத இதழ் குடும்ப நாவலில் வெளிவந்த நாவல்:

6. 50:50: கணவன் மனைவி திருமணப் பந்தத்தை, விட்டுக்கொடுத்தலை அன்பு வழியப் பேசும் நாவல்.

வலைத்தளத்தில் மற்றும் அமேசான் கிண்டில் இல் (Ama- zon Kindle) உள்ள மற்ற நாவல்கள்:

7. தாகம்: இது அவரின் முதல் படைப்பு. வித்தியாசமான சூழ்நிலையில் வாழும் மக்களும் அவர்களுக்கான தேவையும், தண்ணீர் அவர்கள் வாழ்க்கையை
எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பது தான் கதையின் மையக்கரு.

8. O.M.R : ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்திருக்கும் மென்பொருள் நிறுவனத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு காதல் கதை.

9. லவ்லி லவி: அதீதத் தொழில் நுட்பம், அவசரப்புத்தி நிறைந்த இன்றைய நவீனப் பெண்ணின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்று அவள் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.

10. அந்த மாலைப் பொழுதில்: சில பொழுதுகளில் செய்யும் தவறுகள் ஒரு மனிதனின் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்பதை எடுத்துரைக்கும் நாவல்.

11. இதயம் நனைகிறதே: திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணின் கனவுக்குப் பதில் என்ன? என்பதைக் கொரோனா லாக் டவுனை களமாக வைத்து, கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ஊடல், காதல் என்று வாசகர்களின் இதயத்தை அன்பில் நனைக்கும் படைப்பு.

12. மோகவலை: வெளி அழகிற்கு ஆசைப்பட்டு, நிகழ்கால வாழ்வைத் தொலைக்கும் ஒரு பெண்ணின் கதை.

13. விழியோரத்தில் க்ளிக்: சமூக வலைத்தளங்கள் நம்மைக் கண்காணிக்கும் புகைப்படக் கருவி என்பதை ஓர் இளம் பெண் எப்படி எப்பொழுது உணர்கிறாள் என்று காட்டும் மர்மநாவல்.

14. பிருந்தாவனம்: அவர் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் கதை. தன்னை விரும்பும் ஓர் அரசியல் பெரும் புள்ளியை எதிர்க்கும் துணிச்சல் நிறைந்த சராசரி குடும்பத்துப் பெண்ணின் போராட்டம். அன்பும், பாசமும் நிறைந்த ஒரு குடும்பத்தின் கதை.

 

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின்  நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 24 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -11 ,ப்ரியா பாஸ்கரன்,மிச்சிகன், வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -11 ,ப்ரியா பாஸ்கரன்,மிச்சிகன், வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -10 ,சதுரா,டெக்சாஸ், வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -10 ,சதுரா,டெக்சாஸ், வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -9 ,மேகலா இராமமூர்த்தி,புளோரிடா, வடஅமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -9 ,மேகலா இராமமூர்த்தி,புளோரிடா, வடஅமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -8 ,ராஜி வாஞ்சி,டெக்சாஸ், வட அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -8 ,ராஜி வாஞ்சி,டெக்சாஸ், வட அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -7 ,லாவண்யா,கலிபோர்னியா, அமெரிக்கா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -7 ,லாவண்யா,கலிபோர்னியா, அமெரிக்கா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -6 ,இளங்கோ  ,டொரேண்டோ, கனடா அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -6 ,இளங்கோ ,டொரேண்டோ, கனடா
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -4 , ஸ்ரீனிவாசன்  ,டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -4 , ஸ்ரீனிவாசன் ,டெக்சாஸ்
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -3 , ஹேமா ஜெய்  ,சால்ட்லேக் சிட்டி அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -3 , ஹேமா ஜெய் ,சால்ட்லேக் சிட்டி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.