LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் எழுத்தாளர்கள் Print Friendly and PDF
- அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள்

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் -7 ,லாவண்யா,கலிபோர்னியா, அமெரிக்கா

பெயர்: திருமதி. லாவண்யா.
முழுப்பெயர்: முனைவர். லாவண்யா பெருமாள்சாமி சீலன்.
பிறந்த ஊர் : கோயம்புத்தூர்.
வசிப்பது: இர்வைன், கலிபோர்னியா, அமெரிக்கா
படிப்பு: பி.ஹெச்டி. (Cell, Molecular and Developmental Biology)

எழுதிய நூல்கள் மற்றும் சிறுகதைகள்:

இதுவரையில் திருமதி. லாவண்யா என்ற பெயரில் 16 நாவல்கள் அருணோதயம் பதிப்பகத்தாரின் வழியே புத்தகமாக வெளிவந்துள்ளன. அத்துடன் லாவண்யா பெருமாள்சாமி என்ற பெயரில் சில சிறுகதைகள் ஓம் சக்தி, தினமணிக் கதிர், இணையதளம் மற்றும் மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகள் ஒரு தொகுப்பாக அமேசான் கிண்டிலில் இருக்கிறது.

1. காதலின் சாரலிலே (2012)
ஐந்து நண்பர்களைப் பற்றிய கதை. குடும்பப் பின்னணியில் இவர்களின் காதல், நட்பு மற்றும் காதலில் ஏற்படும் இடர்கள், அதை அவர்கள் ஒவ்வொருத்தரின் உதவியுடன் எவ்வாறு கடக்கின்றனர் என உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் கதை.

2. அக்கரைச் சீமையிலே (2012)
நாயகனும் நாயகியும் அமெரிக்காவில் சந்தித்துச் சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து கிழக்குக் கரைக்குச் செல்கிறார்கள். எதையும் இயல்பாக, இலகுவாக எடுத்துக் கொள்ளும் நாயகன். அனைத்தையும் சீரியசாக எடுத்துக் கொள்ளும் நாயகி. இவர்களுக்குள் எப்படிக் காதல் மலர்கிறது என்பது கதை.

3. அன்பென்ற மொழியிலே(2013)
அவசரத்தனத்துடன் செயல்படும் கணவனுக்கும் எதையும் சிந்தித்துச் செயல்படும் மனைவிக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம், காதல் மற்றும் ஊடல் பற்றிய கதை. 

4. உறவுகள் (2014)
ஒரு பெண்ணின் ஆழ் மனதில் உள்ள ஏக்கங்களைத் தொட்டு உளவியல் ரீதியாக அணுக முயன்று எழுதிய கதை, உறவுகள். தன் அன்னையின் மனவேதனையை அறிந்து அதைக் களைய மனநல மருத்துவரான நாயகியை நாடுகிறான் நாயகன். அவள் எவ்வாறு முயன்று வெற்றி பெறுகிறாள் என்பது பற்றிய கதை. உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி மனரீதியாக அலசியுள்ளேன். 

5. வைகறை வெளிச்சம் (2014)
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் காதல் போராட்டத்தில் ஒரே ஒரு தவறான சொல் வெளிவந்துவிட்டால், அது அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் பார்க்கும் வல்லமை கொண்டது. அப்படிப்பட்ட போராட்டத்தை முன்வைத்து இக்கதையைப் பிணைந்திருக்கிறேன். 

6. தீயில்லை புகையில்லை (2015)
இக்கதையில் வரும் கதாநாயகன் ஆனந்த், உறவுகள் என்ற என் நான்காவது கதையில், நாயகியின் கல்லூரியில் படிக்கும் தம்பியாக வருவான். கேலியும், கிண்டலுமாக வளர்ந்திருப்பவனுக்குப் பொறுப்புணர்வும், சமூக அக்கறையும் அதிகம் இருக்கிறது என்ற கருத்தைக் கேலியும், கலாட்டாவும் சேர்த்து எழுதியது இக்கதை

7. நேசம் கொண்ட நெஞ்சங்கள்(2015)
இக்கதையின் நாயகி, அபிநயா தன் காதல் கதையைப் பற்றிக் கூறுவது போன்று எழுதியுள்ளேன். திருக்குறளில் வரும் நெஞ்சோடு கிளத்தல் அதிகாரத்தை மேற்கோள் காட்டி எழுதியது.

8. மூடுபனி நெஞ்சம் (2016)
போலீஸ் நாயகன் சிறுவயதில் சொன்ன பொய்யால் நாயகியின் மனம் அலைக்கழிக்கப்பட்டுப் பின்னாளில் எவ்வாறு தவறு செய்ய முனைகிறாள், அதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என அறிந்து கொள்ளும் நாயகன் அதை எப்படிச் சரி செய்ய முயல்கிறான் எனச் சொல்லும் கதை.

9. அத்திப் பூ புன்னகை (2016)
வாழ்க்கையில் சிரிப்பை மட்டும் குத்தகைக்கு எடுக்கும் நாயகன் கதிர், நாயகி எழில்மலர். நாயகனின் வாழ்க்கையில் நடந்த தவிர்க்க முடியாத, வேண்டாத சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் தன் குணத்தால் அதை எப்படி நேர்மறையாக மாற்றிக் கொள்கிறான். அத்திப் பூத்தாற் போல் சிரிப்பவர்களையும் அவ்வாறு இருக்க வைக்கப் போராடுகிறான் என்பதைப் பற்றிய கதை.

10. வைரமே உன்னைத் தேடி(2016)
தனிமையில் வாடினாலும் எந்நேரமும் கலகலப்பாக இருக்க நினைப்பவள் நாயகி, இதழ்யா. அவள் கண் முன்னால் வைரமாய்த் தோன்றுகிறான் நாயகன்
நிரஞ்சன். ஆனால் அவன் வைரமல்ல என நிஜம் புரிந்ததும் மனம் உடைந்து போகிறாள். அதே சமயத்தில் அவளுக்கு வேறு உறவுகளும் கிடைக்க அவர்களுடன் சென்று விடுகிறாள். இருவரும் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதைப் பற்றிய கதை

11. மின்மினிக் கனவுகள் ( 2017) 
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எதிர்காலம் பற்றிய கனவுகளும், இலட்சியங்களும் ஏராளம். அதை அடைவதற்குத் தடைகளும் தாராளம்! சிலர் இலட்சியப் பாதையில் வெற்றி கொள்வர்... சிலர் தோல்வியைத் தழுவுவர். இதில் நாயகனும், அவன் நண்பனும், நாயகியும் வாழ்க்கையில் அடிபட்டு, எப்படி வெற்றி

12. இதழில் கதை எழுது (2017) 
நாயகி தன் கடந்த கால வாழ்க்கையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும் எவ்வாறு வெளிவருகிறாள், அதற்கு நாயகன்ஸ்ரீராம் தன்கலகலப்பான குணத்தால் எவ்வாறு உதவுகிறான் எனச் சொல்லும் கதை.

13. உயிரோடு உறவாக (2018)
மகிழ்ச்சியுடன் வாழ்வதே மிக முக்கியம் என இருப்பதை வைத்து சுகம் காண்பவள் நாயகி. பணம் சம்பாதித்துப் புகழ்பெறுவதே வாழ்க்கையின் உன்னத
இலட்சியம் என இயங்கிக் கொண்டிருப்பவன் நாயகன். இருவேறு குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் இருவரும் நேரில் சந்திக்க நேர்ந்தால்... ஒருவரை ஒருவர் நிந்தித்துக் கொண்டால்... ஒருவர் இன்னொருவருடனான பந்தத்தில் சிக்கிக் கொண்டால்... என்ன ஆகும் எனச் சொல்லும் கதை.

14. சின்னஞ் சிறு இதயத்திலே(2019)
காதலால் ஏற்படுத்தப்பட்ட வலியுடன் வாழும் ஒருவனைப் பார்த்ததும் பிடித்துப் போக அவன் மேல் விருப்பம் கொள்கிறாள் நாயகி. கடந்த காலத்தில்
ஏற்பட்ட வலியால் இவளை ஏற்க மறுக்கிறான் நாயகன். இருவருக்கும் இடையில் நடக்கும் சீண்டல்களும், சண்டைகளும் இறுதியில் எவ்வாறு
முடிவுக்கு வருகிறது எனச் சொல்லும் கதை.

15. உயிரால் உனையே விரும்புகிறேன்(2020)
இரு வேறு கதைகள் கொண்டு பயணிக்கும் இந்தக் கதை எவ்வாறு, எங்கு ஒரு புள்ளியில் சேர்ந்து ஒரே பாதையில் நகர்கிறது என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பெண் கடந்து வந்த கரடுமுரடான பாதையில் காதல் அவளை எப்படி உயிர்ப்புடனும், நட்பு அவளை எப்படித் தன்னம்பிக்கையுடனும் போராடச் சொல்கிறது என்பதைப் பற்றிய கதை. 

16. தித்திப்புடன் காதல் (2020)
நாயகனுக்கும் நாயகிக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தும் நாயகி ஒரு சில காரணங்களால் காதலை வெளிப்படுத்தத் தயங்குகிறாள். தொடர்ந்து அவர்களின் காதலில் பிரச்சனை வருவதும் அதனால் வரும் மனச்சஞ்சலங்களும் அதை எப்படி இருவரும் களைந்தெடுத்து இணைகிறார்கள் என்பதைச் சொல்லும் கதை. தாய்ப்பால் பற்றிய மகிமையையும் எடுத்துச் சொல்லும் இக்கதை.
17. நிஜமடி பெண்ணே
(பிரசுரத்துக்கு அனுப்பி வைத்திருக்கும் கதை)
நாயகனும், நாயகியும் அடிக்கடி சந்தித்து முட்டிக் கொள்கிறார்கள். இறுதியில் அவர்களுள் காதலும் மலர்கிறது. இதற்கிடையில் இணையதள வழியே நடந்தேறும் குற்றங்கள் எவ்வாறு இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் புரட்டி, அலைக்கழிக்கிறது எனச் சொல்லும் கதை.

புத்தகங்கள் கிடைக்கும் இடம் : udumalai.com; wecanshopping.com, marinabooks.com.
கிண்டிலிலும் வாசிக்கலாம்:
https://www.amazon.in/s?k=lavanya+seelan&ref=nb_sb_noss
https://www.amazon.com/s?k=lavanya+seelan&ref=nb_sb_noss

 

அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின்  நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

by Swathi   on 24 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு. ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக்கு மார்ச் 31-க்குள் நூல்களை அனுப்ப அழைப்பு.
பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர்
பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம் பேனா மன்னன் டி.எஸ்.சொக்கலிங்கம்
சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழ் அறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு அமெரிக்க வாழ் தமிழர் எழுதிய புத்தகம் வெளியீடு
தியா (காண்டீபன் இராசையா) தியா (காண்டீபன் இராசையா)
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா  அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 26, ஸ்ரீதர் நாராயணன், ப்ரைனிக்ஸ்வில், பென்சில்வேனியா 
அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ் அமெரிக்கத் தமிழ் எத்தாளர்கள் - 25, ஷீலா ரமணன், சான் ஆண்டோனியோ, டெக்சாஸ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.