LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!!

அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி எடிசன், நியூ ஜெர்செயில் உள்ள மிராஜ் பங்க்விட் ஹாலில்  விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் இருநூறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ATEA வின் துணை நிர்வாகி மற்றும் வடகிழக்கு பிரிவின் தலைவரான திரு. ராம் நாகப்பன் மற்றும் நிர்வாகிகள் திரு வெங்கி சடகோபன், திரு. கிருஷ்ணா சாரி ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் இவ்விழாவை நிகழ்த்தினார். பிரபல நடிகர்,தயாரிப்பாளர் மற்றும் அகரம்  கல்வி அறக்கட்டளையின் அறங்காவரலரான திரு. சூர்யா சிவகுமார் இம்மாபெரும் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

திரு. ராம் நாகப்பன் ATEA நோக்கம், குறிக்கோள் மற்றும் முயற்சிகள் பற்றிச் சிறப்புரை ஆற்றினார். வணிக வளர்ச்சியை மையமாக கொண்டு உறுப்பினர்களால் இயங்கும் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பு என்றும் அதன் ஒவ்வொரு செயல்பாடும் நம் சமுதாயம் பயன்பெறும் வண்ணமே அமைந்திருக்கும் என்றும் கூறினார். அந்த வகையில் தொழிலதிபராக வெற்றி பெற்று சமுதாய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தும் திரு. சூர்யாவை முக்கிய விருந்தினராக அழைத்தது மிகப் பொருத்தம். தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு 'கிளிக்கெர்' (Clicker) ஐ அழுத்த திரையில் ATEA வை பற்றி விவரங்கள் காணொளியாக அளித்தது இன்னும் பொருத்தம்.

சுவாரஸ்யமாகவும் இருந்தது!
வணிக்கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள, ஆலோசனை பெற, முதல் உதவி பெற, முதலீடு செய்ய மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்களில் தொழில் ஆர்வல சிந்தனையைத் தூண்ட ஓர் அமைப்பு இருக்க வேண்டும். என்பது தான் ATEA வின் முக்கிய எண்ணம். தமிழருக்கெனத் துவங்கப்பட்டது  என்றாலும், விருப்பமுள்ள பிற மொழினியினர் நிச்சயமாகக் கலந்துகொள்ளலாம், உறுப்பினரும் ஆகலாம். அதற்கு எந்தத் .இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் பயன்பெற வேண்டும் என்பதே இலட்சியம்.
ATEA வின் செயல் திட்டங்களை இவ்வைந்து சொற்களில் விவரிக்கலாம். Educate - தொழில் முனைவோர்களுக்குத் தேவையான கல்வி, பயிற்சி அளிப்பது, Empower - புதிதாய் காலத்தில் இறங்கும் தொழில் ஆர்வலர்களுக்கு ஆலோசனை, செயல்திட்டம் மற்றும் முதயாலீடு செய்யும் தொடர்புகள்  போன்றவை கொடுத்து ஊக்கம் அளிப்பது, Elaborate - வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு வேண்டிய வழித்திட்டங்கள் வகுப்பது, Expand - தங்கள் தொழிலை விரிவுபடுத்த தேவையான ஆராய்ச்சி சாதனங்கள் மற்றும் அறிவுரை வழங்குவது மற்றும் Engage - தங்கள் வளர்ச்சியோடு தங்கள் சமுதாயம் வளர உதவுவது. ATEA வின் எந்த ஒரு பணியும் சமூகத்திற்குக் கைம்மாறு செய்யும் வகையில், சமுதாய முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ATEA வின் கொள்கைகள் என்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்தை சார்ந்தே இருக்கும்.

அமெரிக்காவாழ் தமிழர்களில் தொழில் நிறுவும் ஆலோசனைகள் பரிமாறிக்கொள்ள, முதலீடு செய்ய, தொழில் ஆர்வம், முதலீட்டுத்திட்டம், நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள, தொழில் அறிவுரை பெற, வர்த்தகச் சிந்தனையைத் தூண்டும் சூழல் ஏற்படுத்திக் கொடுக்க ஓர் அற்புதமாக குழுமம் ATEA. கூடிய விரைவில் இது தமிழர்களுக்கு மட்டுமின்றி அனைத்து இந்திய சமூதாயங்களுக்கும் பயன்பெறும் வண்ணம் விரிவாக்கப்படும். சிலிக்கான் வேலியில் வெற்றிகரமாக இயங்கி வரும் ATEA Northeast இல் தொடர்ந்து இன்னும் Mid - West இல் இயங்க பணிகள் தொடக்கி உள்ளன.

ATEA - அகரம் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் அது தங்கள் சமூகத்திற்குச் செய்யும் தொண்டே. துவக்க விழாவிலேயே ஐம்பது ATEA உறுப்பினர்கள் அகரம் அறக்கட்டளைக்குத் தலா 7,100 அமெரிக்க டாலர்களை நன்கொடை அளித்தது வியப்பூட்டும் விஷயம்!.

நிறைவாக, திரு. ராம் நாகப்பன் தமிழ் அன்பர்கள் நிறுவனங்கள் தொடங்க, நடத்த, செழிக்கச்செய்ய Link (தொடர்பு), Learn (கற்க), Lead (வழிகாட்ட) என்ற ATEA தாரகை மந்திரத்தை பின்பற்றி வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

American Tamil Entrepreneurs Association North East Chapter Launch in New Jersey

The North East Chapter of the American Tamil Entrepreneurs Association (ATEA) was successfully launched as a grand event at the Mirage Banquet Hall, Edison, NJ on September 9 th in the presence of over two hundred eminent professionals and successful entrepreneurs. Mr. Ram Nagappan, Co-founder of ATEA (USA) and the chair for the North East Chapter along with ATEA’s key executives Venky Sadagopan and Krishna Chari hosted the event. Actor, Producer and Television host and the Founding president of “Agaram Foundation” Mr. Suriya was the chief guest for the event.

Mr. Ram Nagappan addressed the audience about the vision, mission and charter that constitute ATEA. He said "ATEA is a business focused, non-profit, non-political, membership based organization. And as an institution believing in giving back to the community it was only apt to invite a Philanthropist and Tamil Social Entrepreneur like Mr. Suriya to launch the chapter. The attendees enjoyed the fancy launch with a clicker while a motivating video played on the screen and presenting the mission of ATEA.

ATEA aims at creating a platform for exchanging business ideas, seeking mentorship, Investments, making connections and creating an atmosphere for entrepreneurial thinking among American of Tamil origin and NRIs. However, ATEA will not restrict its activities to serve the Tamil community but will expand to serve the Indian diaspora in the USA. ATEA’s mission is to educate emerging entrepreneurs through ATEA
networking, boot strapping and seed funding mentors, empower early stage entrepreneurs through ATEA product and funding strategy mentors, elaborate later stage startups through Business and Operations strategy mentors, expand company brand through ATEA and engage with the community dedicated to grown with purpose. ATEA is modeled specially to promote youth, encourage women and enabling first-time entrepreneurs and help them collaborate.

As an aspiring entrepreneur, one can expect ATEA to help them make the most informed decisions in their ventures, to ensure their business plans are compliant, efficient, and sustainable, to enable them to discover a new opportunity or a fresh strategy, and most importantly and, to prepare for the future by learning about issues and trends on the horizon. The established entrepreneurs and business owners can benefit from ATEA to seek resources for meaning mentorship and productive investment. Currently, the Silicon Valley Chapter is operating successfully, serving about 600 members. The North East chapter will further expand the spread and the opening of Mid- west chapter is already in progress. We would have Americans across the US have a convenient access to ATEA and its activities.

The synergy between ATEA and AGARAM Foundation comes from their genuine interest to help their community grow to their full potential. Following lunch, Mr. Surya spoke about AGARAM and how one could help sponsor the college education for deserving student. Each sponsorship cost’s about $7,100 and takes care of all educational, food and lodging expenses throughout the entire undergrad. ATEA and its generous members donated heartily to raise an unbelievable 50 such sponsorships right at the event!

Mr. Ram Nagappan concisely summarized ATEA as an organization focused on meaningful networking (Link), learning (Learn) and growth (Lead) making ideas happen by helping the Tamil community start, run and grow businesses!

Visit www.ATEAUSA.ORG to know more!


About ATEA: American Tamil Entrepreneur Association (ATEA) is a business focused non-profit organization with the vision of creating and providing a platform for exchanging business ideas, seeking mentorship, investments, making connections, and creating an atmosphere for entrepreneurial thinking among NRIs and Americans of Tamil origin. However, ATEA will not restrict its activities just to serve the Tamil
community, but will expand to serve the Indian diaspora in the USA.

by Swathi   on 26 Sep 2017  3 Comments
Tags: ATEA   American Tamil Entrepreneur Association launch   North East Chapter of the American Tamil Entrepreneurs Association   அமெரிக்காவாழ் தமிழர்   அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள்   சூர்யா     
 தொடர்புடையவை-Related Articles
செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!! செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!
அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!! அமெரிக்கத்தமிழ் தொழிலதிபர்கள் சங்க வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா - சூர்யா தலைமை தாங்கினார்!!
24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!! 24 இசை வெளியீட்டு விழாவில் நடந்த சில சுவாரசியங்கள்!!
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !! அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !!
ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !! ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !!
கருத்துகள்
31-Dec-2018 02:59:29 Rajalakshmi said : Report Abuse
We do for all type hand Embroidery work in tiruppur. We make for blouse and showroom garment pcs .any one need contact +919894807824
 
06-Oct-2017 04:15:42 அ.பழனிசாமி said : Report Abuse
நல்ல செய்தி. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும். இங்குள்ள தமிழர்களின் வாழ்வு உயர அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.
 
05-Oct-2017 12:53:20 கு.பாரதிமோகன் said : Report Abuse
வாழ்த்துக்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.