LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..!

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார் George L.Hart. தமிழ்த் துறையை அங்கு நிறுவியதே அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1979 இல், பழந்தமிழ்ப் பாடல்களைத் தொகுத்து, “The Poems of the Tamil Anthologies” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

“புறநானூறு” எனும் தமிழிலக்கியக் கருவூலத்தை ஆங்கிலத்தில், “Four Hundred Songs of War and Wisdom (1999” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

சமஸ்கிருதத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி ஆராய்ந்தவர்,

“”தென் கிழக்கு ஆசியாவில், தமிழைத் தவிர்த்து, மற்ற அனைத்து மொழிகளுமே சமஸ்கிருதத்தையோ அரபியையோ தழுவியுள்ளது. சமஸ்கிருதத் தாக்கம், தமிழ் மொழியில் காணப்பட்டாலும் தமிழ் மொழி அதன் வேரை விட்டு என்றுமே விலகியதில்லை” என்கிறார்.

அவர் எழுதிய நூல்கள்:

The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts

A Rapid Sanskrit Method

The Forest Book of the Ramayana of Kampan

கம்பரின் ராமாயணம், அதன் சமஸ்கிருத மூலங்களை விட பன்முகத் தன்மை கொண்டிருக்கிறது எனவும் பாராட்டியுள்ளார். தமிழின் பெருமையை உலகறியச் செய்ததோடு மட்டுமின்றி, தமிழ் செவ்வியல் மொழியென அறிவிக்கப்பட வேண்டுமென 2000 இல் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்தே, இந்திய அரசு செப்டம்பர் 18, 2004 இல் தமிழ்க்கு செவ்வியல் மொழி அந்தஸ்தினைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களாகிய நாம் இதைக் கொண்டாட வேண்டும் நண்பர்களே! தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவரை, தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள்.

by Swathi   on 03 Feb 2015  0 Comments
Tags: George L.Hart   Padma Shri   American Tamil Scholar   அமெரிக்கா தமிழ் அறிஞர்   பத்ம ஸ்ரீ விருது        
 தொடர்புடையவை-Related Articles
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.