இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார்.அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் பெரும்பழனம்' என்றும் பெரும்பழனாபுரி' என்றும் வழங்கப்பட்டது.காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டது. சோழமண்டலத்தைச் சேர்ந்த பொன்னம்பலக்கூத்தன் என்பவர் இத்தலத்தையும், இங்குள்ள விநாயகர் கோயிலையும் புதுப்பிக்க தானம் செய்துள்ளார். அவரது பெயரால் இவ்வூர் கூத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனின் சிறந்த பக்தரான சுந்தரரும், அவரது நண்பர் சேரமானும் இணைந்து வந்து இவ்விடத்தில் சுவாமியை பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.
இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார்.அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் பெரும்பழனம்' என்றும் பெரும்பழனாபுரி' என்றும் வழங்கப்பட்டது.காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சோழமண்டலத்தைச் சேர்ந்த பொன்னம்பலக்கூத்தன் என்பவர் இத்தலத்தையும், இங்குள்ள விநாயகர் கோயிலையும் புதுப்பிக்க தானம் செய்துள்ளார். அவரது பெயரால் இவ்வூர் கூத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது.சிவனின் சிறந்த பக்தரான சுந்தரரும், அவரது நண்பர் சேரமானும் இணைந்து வந்து இவ்விடத்தில் சுவாமியை பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர். |