இக்கோயிலில் சரஸ்வதி, லட்சுமி, சக்தி என முத்தேவியர் அருள்பாலித்திருப்பது சிறப்பு வாய்ந்தது.வலது புறத்தில் உள்ள அம்பாள், வெள்ளை நிறத்தில் சுயம்பு வடிவமாக இருப்பது வித்தியாசமான அம்சம்.மைசூரை ஆண்ட திப்புசுல்தான் இவ்விடத்தில் தன் படை வீரர்கள் ஓய்வெடுக்க கோட்டை அமைத் துள்ளான்.
இதனால், இத்தலத்து அம்பாள் "கோட்டை மாரியம்மன்' என்றழைக்கப்படுகிறாள். இவளுக்கு, "கோடீஸ்வரிமாரி' எனவும் பெயர் உண்டு.சுயம்புவாக எழுந்தருளிய மாரியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளுக்கு வலப் புறத்திலும், இடப் புறத்திலும் இன்னும் இரண்டு அம்பாள்கள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது விசேஷமான தரிசனம். |