மூலவர் சன்னதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருப்பது சிறப்பு.சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் ஆலயத்தில் வழிபாட்டு முறைகள் எப்படி இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதே நடைமுறைகளைக் கொண்டு இந்த பெருங்களத்தூர் ஆலயத்திலும் வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேஷ்டியும் துண்டும் மட்டுமே அணிந்து வர வேண்டும்.
பெண் பக்தர்கள் புடவைதான் அணிந்து வர வேண்டும். இதுபோன்ற சில கட்டுப்பாடுகளும் இந்த ஆலயத்துக்கு உண்டு. ஸ்ரீ மதுரகாளி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள், ஆலய அர்ச்சகர்கள், கோயில் சிப்பந்திகள் மற்றும் உபயதாரர்கள் மட்டும்தான் சந்நிதியின் மேல் பிராகாரத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அம்மனை பிரதட்சிணம் செய்ய விரும்பும் பக்தர்கள் கீழ் பிரகாரத்திலுள்ள வலம் வர வேண்டும்.
மூலவர் சன்னதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். மற்ற தினங்களில் உத்ஸவரைத்தான் தரிசிக்க முடியும். மூல விக்கிரகத்துக்கு சேவார்த்திகளின் அர்ச்சனை கிடையாது. எல்லாமே, உத்ஸவருக்குத்தான். |