|
||||||||
அந்த வெல்வெட்டுப் பறவை |
||||||||
சா..நெடிய முடத்தென்னை அடியில் நானும் நீயும்
உட்கார்ந்து விரல்நசித்துக் கதைத்துச் சிரிக்கையில்
வருமே,
சொல்லிவைத்தாற்போல கள்ளச் சந்திப்பு அனைத்திலும் பங்கெடுத்து
நாம் பின்புறத்தைத் தட்டிவிட்டு எழும்வரைக்கும்
அந்தக்கால் மாறி இந்தக்கால்
இந்தக்கால் மாறி அந்தக்கால் என்று
ஒற்றைக் காலில் நின்று நமக்காக
ஆட்பார்த்து அறிகுறிகள் சொல்லிடுமே
வெல்வெட்டுப் பறவை
வால் மினுங்கும் வெல்வெட்டுப் பறவை
அது மூக்குத் தொங்கலில் எச்சம் அடித்தாலும்
அந்நேரம் மணம்தான்.
அது ஒரு காலம்
காதல் கிறுக்கு தலையில் இருந்த
நாம் பெருவிரலில் நடந்த நேரம்.
அப்போது வானம்
எட்டிப் பிடித்தால் கைக்குப் படுகின்ற
ஒரு முழ இரு முழத் தூரத்தில் இருந்தது.
ஏன் உனக்குத் தெரியுமே
அண்ணார்ந்து நீ சிரித்தால்
நிலவிற்குக் கேட்கும்.
வானுக்கும் உச்சியெல்லாம் பூப் பூக்கும்.
நமக்காக அந்தத் தனியிடம் அமைந்தது
ஒரு வரப்பிரசாதம் இல்லையா?
அந்த யாருமறியாத இடுவலுக்குள்ளும்
நமது கள்ளச் சந்திப்பு நிகழ்வதை
அறிந்ததுபார் செங்கண் வெல்வெட்டுப் பறவை.
ஞாபகம் இருக்குமே-
நீ மண்கிள்ளி எறிந்து
"சூய்" என இடைக்கிடை அரட்டுகின்ற
வெல்வெட்டுப் பறவை.
அதற்கும் அப்போது வால்முளைத்த பருவம்
சிறகின் ரெண்டு பொருத்துகளுக்குள்ளும்
சதை பிடிக்கும் வயசு.
வாலுக்குள் இருந்த தூறல் மயிர்கள்
உதிர்ந்ததோ இப்போது உருமாறிப் போனதோ?
"கீச்சென" வரும் என்ன...
ஆனால் நாம் எழும்பும்வரைக்கு
வாய் அசைக்காது.
சே...தின்ற விதையை கக்கித் தரும்
வஞ்சகமே இல்லாத பட்சி.
நம் காதலுக்கு அது ஒரு ஜீவன் போல,
யோசித்துப் பார்த்தால் நெருப்பு நெருப்பாக வருகிறது.
ஒரு செங்கண் குருவிகூட அங்கீகரித்த நமது காதலை
இவர்களேன் பழமாகவும் கொட்டையாகவும்
பிரித்துச் சிதைத்தனர்?
வைத்திருப்பேன்-
உனது கடிதங்கள் அனைத்தையுமே வைத்திருப்பேன்.
தைத்துப் பொருத்தி அவற்றை ஆடையாய்
உடுத்துக்கொண்டு திரிய....
சா..நெடிய முடத்தென்னை அடியில் நானும் நீயும் உட்கார்ந்து விரல்நசித்துக் கதைத்துச் சிரிக்கையில் வருமே, சொல்லிவைத்தாற்போல கள்ளச் சந்திப்பு அனைத்திலும் பங்கெடுத்து நாம் பின்புறத்தைத் தட்டிவிட்டு எழும்வரைக்கும் அந்தக்கால் மாறி இந்தக்கால் இந்தக்கால் மாறி அந்தக்கால் என்று ஒற்றைக் காலில் நின்று நமக்காக ஆட்பார்த்து அறிகுறிகள் சொல்லிடுமே வெல்வெட்டுப் பறவை வால் மினுங்கும் வெல்வெட்டுப் பறவை அது மூக்குத் தொங்கலில் எச்சம் அடித்தாலும் அந்நேரம் மணம்தான்.
அது ஒரு காலம் காதல் கிறுக்கு தலையில் இருந்த நாம் பெருவிரலில் நடந்த நேரம்.
அப்போது வானம் எட்டிப் பிடித்தால் கைக்குப் படுகின்ற ஒரு முழ இரு முழத் தூரத்தில் இருந்தது.
ஏன் உனக்குத் தெரியுமே அண்ணார்ந்து நீ சிரித்தால் நிலவிற்குக் கேட்கும். வானுக்கும் உச்சியெல்லாம் பூப் பூக்கும். நமக்காக அந்தத் தனியிடம் அமைந்தது ஒரு வரப்பிரசாதம் இல்லையா?
அந்த யாருமறியாத இடுவலுக்குள்ளும் நமது கள்ளச் சந்திப்பு நிகழ்வதை அறிந்ததுபார் செங்கண் வெல்வெட்டுப் பறவை. ஞாபகம் இருக்குமே- நீ மண்கிள்ளி எறிந்து "சூய்" என இடைக்கிடை அரட்டுகின்ற வெல்வெட்டுப் பறவை.
அதற்கும் அப்போது வால்முளைத்த பருவம் சிறகின் ரெண்டு பொருத்துகளுக்குள்ளும் சதை பிடிக்கும் வயசு. வாலுக்குள் இருந்த தூறல் மயிர்கள் உதிர்ந்ததோ இப்போது உருமாறிப் போனதோ?
"கீச்சென" வரும் என்ன... ஆனால் நாம் எழும்பும்வரைக்கு வாய் அசைக்காது.
சே...தின்ற விதையை கக்கித் தரும் வஞ்சகமே இல்லாத பட்சி. நம் காதலுக்கு அது ஒரு ஜீவன் போல, யோசித்துப் பார்த்தால் நெருப்பு நெருப்பாக வருகிறது. ஒரு செங்கண் குருவிகூட அங்கீகரித்த நமது காதலை இவர்களேன் பழமாகவும் கொட்டையாகவும் பிரித்துச் சிதைத்தனர்?
வைத்திருப்பேன்- உனது கடிதங்கள் அனைத்தையுமே வைத்திருப்பேன். தைத்துப் பொருத்தி அவற்றை ஆடையாய் உடுத்துக்கொண்டு திரிய....
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|