LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது.

மறைந்த அப்துல் கலாம் அவர்களின் வயது 84. அப்துல் கலாம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம்.(இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில்) மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மயங்கி விழுந்தார். தொடர்ந்து உடனடியாக ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்ததாக 7.45 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   

அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.

இந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.

இந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.

2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.

ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கக்கூடிய கலாம் அறிவியல் தொழில்நுட்பத்தையே காதலித்தார். தமிழ் இலக்கியத்திலும் வீணை மீட்டுவதிலும் ஈடுபாடுடைய இவர், திருமணமே செய்து கொள்ளவில்லை. சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்.

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.

84 வயதிலும் துவண்டு போகாமல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து இயற்கையின் அவசியத்தையும், மரங்களின் முக்கியத்துவத்தையும் விதைத்தவர்.

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1997ல் அப்துல் கலாம் பெற்றார்.

அப்துல் கலாம் மறைவிற்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்

ஆனால்,

இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்

- டாக்டர் அப்துல் கலாம்

by Swathi   on 27 Jul 2015  1 Comments
Tags: APJ Abdul Kalam   APJ Abdul Kalam Death   APJ Abdul Kalam Passed Away   APJ Abdul Kalam Died   ஏவுகணை நாயகன்   அப்துல் கலாம்   அப்துல் கலாம் காலமானார்  
 தொடர்புடையவை-Related Articles
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன் அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !! ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !! தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !!
உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்)
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !! கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !!
பாம்பன் பாலம் இந்திய பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - அப்துல்கலாம் !! பாம்பன் பாலம் இந்திய பொறியியல் துறையின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - அப்துல்கலாம் !!
கருத்துகள்
27-Jul-2015 23:59:24 A.Aravindhan said : Report Abuse
மிஸ்ஸிங் டு பெஸ்ட் ஓனே ஒப் தி ச்இஎண்டிச்ட் in இந்திய .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.