|
||||||||
அப்பா நான் வேண்டுதல் -வள்ளலார் (திருவருட்பா) |
||||||||
![]() பாடல் : அப்பா, நான் வேண்டுதல் -வள்ளலார் (திருவருட்பா) இயற்றியவர் : வள்ளலார் (திருவருட்பா-2) ராகம் : தாளம் : இசையாசிரியர் : திருபுவனம் குரு.ஆத்மநாதன்
பாடல் வரிகள்:
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
(அப்பா)
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
(அப்பா)
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
(அப்பா)
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் (அப்பா)
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் (அப்பா)
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
(அப்பா)
(கீழ்காணும் கானொளியில் மூன்றாவது பாடலாக 9 மணித்துளிகளில் இந்தப் பாடலின் காணொளியை பார்க்கவும்... )
|
||||||||
by Swathi on 24 Aug 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|