|
|||||
கொடைக்கானலில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் |
|||||
![]()
கொடைக்கானல் மலைப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. நம் நாட்டில் காஷ்மீர், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. கொடைக்கானல் மலையில் நிலவும் தட்பவெப்ப நிலையில் ஆப்பிள் விளையுமா என்ற சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் ஆப்பிள் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சில ஆண்டுகளில் அவை காய்க்கத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கும் ஆப்பிள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இது தவிர, மேல்மலை கிராமங்களில் விவசாயிகள் சிலர் காஷ்மீரிலிருந்து வாங்கி வந்த ஆப்பிள் மரக்கன்றுகளை நட்டனர். தற்போது சீசனையொட்டி, ஆப்பிள் மரங்களில் காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. அதனை உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஆப்பிளின் நிறத்தை வைத்து அதன் இனிப்புச் சுவை, அறுவடைக்குத் தயாராகி விட்டதா என்பதை அறிய முடியும். ஒரு மரம் 15 அடி வரை வளரும். பயிரிட்ட 6-ஆவது ஆண்டிலிருந்து மகசூல் கிடைக்கும். நன்கு முதிர்ந்த ஒரு மரத்திலிருந்து குறைந்தது 20 கிலோ, அதிகபட்சமாக 40 கிலோ வரை ஆப்பிள் அறுவடை செய்யலாம். ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை கொடைக்கானலில் உள்ளது.
|
|||||
by hemavathi on 27 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|