|
|||||
1500 பாடல்கள் எழுதிய கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா! |
|||||
![]() கவிஞர் முத்துலிங்கம் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1500 பாடல்கள் எழுதியவர். காதல், தத்துவம், பக்தி, கொண்டாட்டம் என்று எல்லா வகைப் பாடல்களும் எழுதியவர்.குறிப்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நிறையப் பாடல்கள் எழுதி அவரின் அன்பைப் பெற்று அரசவைக் கவிஞராக இருந்தவர். நான்கு புத்தகங்களும் எழுதியிருக்கிறார். தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கணபதி நெய் நிறுவனம் இணைந்து நேற்று கவிஞர் முத்துலிங்கத்துக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நாரத கான சபாவில் நடந்த விழாவில் அத்தனை இருக்கைகளும் நிரம்பியிருந்தன. தமிழ் சினிமா உலகின் முன்னணித் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பிரபலங்கள்.
கவிஞரும், எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாக,செயற்குழுவினரும் கே.பாக்யராஜ் அவர்கள் வடிவமைப்பு செய்து, ராம்ராஜ் நிறுவனம் தயாரித்துத் தந்த தமிழ் எழுத்துக்கள் அச்சடித்த வேட்டி சட்டையில் இருந்தார்கள்.
மேடையில் எழுத்தாளர் சங்கம் சார்பாகக் கவிஞருக்கு மோதிரம் அணிவித்து, பதக்கம் அணிவிக்கப்பட்டது. அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
|
|||||
by hemavathi on 02 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|