LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

அப்புசாமிக்கு ஆயில் தண்டனை

 

அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.
முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார் என்று வீசினார். பலனில்லை.
இரண்டாம் சுற்றில் சின்னஞ்சிறு தரமான கற்களைப் பொறுக்கி ஏவினார். ஊஹ¥ம். இலக்கை அவை அடையவில்லை.
மூன்றாவது சுற்றில் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து வந்து காருக்கடியில் கொடுத்து நாலா திசைகளிலும் லொட லொட செய்தார்.
காருக்கடியில் இருந்து ‘உர்ர்ர்’ என்று ஓர் உறுமல் மட்டுமே வந்தது.
கை எட்டின மட்டும் விட்டு வாக்கிங் ஸ்டிக்கை ‘உர்ர்’ வந்த திசையில் ஓங்கிக் குத்தினார்.
அடுத்த நிமிடம் பெரும் அலறல்.
“ஐயையோ பாவி! குச்சியாலே குத்தறானே! படக்கூடாத இடத்திலேல்லாம் படறதே! ஆ! ஊ! ஐயோ அப்பா, கொல்றானே. அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா?” (நாய் மொழியில் இந்தப் பாராவை மொழிபெயர்த்துக் கொள்க).
“பார்த்து… பார்த்து…” என்று எச்சரித்தாள் சீதாப்பாட்டி, பத்திரமான இடத்தில் நின்று கொண்டு.
“முதலிலே கேட்டை நல்லா வய்ட் ஓபனா திறந்து வெச்சிடுங்க, சனியன் ஏதாவது பிடுங்கி வைச்சுடப் போகிறது.”
அப்புசாமி விரட்டலில் தீவிரமாக இருந்தார். “ஏண்டி, என்கிட்டயா உன் வேலையைக் காட்டற…”என்று வாக்கிங் ஸ்டிக்கால் குத்தினார். ஆனால் அதற்குள் உள்ளிருந்த நாய் சாமர்த்திய சந்தன வீரப்பனைப் போல் தன் இடத்தை மாற்றிக் கொண்டுவிட்டது.
குறிப்பிட்ட நாய் காருக்கடியில் குறிப்பிட்ட எந்த இடத்துல படுத்திருக்கிறது? நாயா, நாய்களா? குட்டியா, வாலிபமா, கிழமா? ஆணா, பெண்ணா, அரவாணியா?
இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தரையோடு தரையாகக் கவிழ்ந்து படுத்துவிட்டார்.
காருக்கடியில் நட்ட நடுப் பாகத்தில் நிழலுருவமாகப் பிடிவாதக்கார நாய் படுத்திருந்தது.
“சீதே! ஒரே ஒரு வழிதான்!” என்று அப்புசாமி எழுந்தார். “கொதிக்கக் கொதிக்க வென்னீர் காய்ச்சிட்டு வந்து சலார்னு உத்தறேன் பாரு… சரியான சண்டிராணியாயிருக்குது! எது எதுகளுக்கு என்னென்ன வைத்தியம் பண்ணணுமோ அது அதுகளுக்கு அப்பபடித்தான் பண்ணணும்.”
“நெவர்! நெவர்!” என்று பதறினாள் சீதாப்பாட்டி. “ஐ வோன்ட் அலவ்! எஸ்.பி.ஸி.ஏக்கு ·போன் பண்ணிடுவேன்… இங்கே ஒரு அனிமலுக்கு க்ரூயல்ட்டி நடக்கிறதுன்னு…”
“அடியே பாவி! உனக்காகத்தாண்டி விரட்டறேன். முதலிலே வென்னீரைக் காய்ச்சி உன் மேலே ஊத்தணும்” என்றவாறு குறிபார்த்துக் குச்சியைக் குத்தினார்.
அடுத்த நிமிஷம் ஒரே கத்தல்.
“வாள் வாள்… வாளுளு வாளுளு… வாளேளு… வாளேளு… வள்வள் வள் வாள்…” (படு வேகமாக அது உச்சரித்ததால் மொழிபெயர்ப்புத் தர இயலவில்லை.)
அப்புசாமிக்கு மாபெரும் வெற்றி.
விருட்டென்று நாய் வெளியே வந்து எடுத்தது ஓட்டம்.
“க்விக்! க்விக்! கேட்டைச் சாத்தித் தொலையுங்க. வந்துடப் போறது மறுபடியும். உங்கள் ‘ஆபரேஷன் டாக் டிரைவ்’ அபாரம்! கன்கிராட்ஸ்! தாங்க்யூ ஸோமச்!” என்று சிரித்தாள் சீதாப்பாட்டி.
அப்புசாமி செருமினார். “உன் வெறும் பாராட்டு யாருக்கு வேணும். இங்கே, ஓட்டலிலே ஒரு மசால்தோசை பத்தொன்பது ரூபாய்! ஸிங்கிள் சாம்பார் வடை ஒன்பது ரூபாய். நாஷ்டாவுக்கு எதுனாப் பாத்துக் குடுத்துட்டுப் போம்மே… தரையிலேல்லாம் உருள்தண்டம் போட்டு அந்தப் பீடையை விரட்டியிருக்கேன்.”
“ஓ! மை குட்னஸ்” சீதாப்பாட்டி தன் சின்ன மோவாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள். “இன்ன விஷயத்துக்குத்தான் சர்வீஸ் சார்ஜ் கேட்கிறது என்கிற டிஸ்கிரிமினேஷனே உங்ககிட்டே இல்லையா? ராத்திரி கேட்டைச் சரியாப் பூட்டாதது உங்க தப்பு.”
வெறுமே ஒரு பத்து ரூபாய் கூடத் தராமல் காரை எடுத்துக் கொண்டு சீதாப்பாட்டி கழகத்துக்குப் புறப்பட்டுவிட்டாள்.
அப்புசாமிக்கு வாழ்க்கையே ‘சே’! என்றாகிவிட்டது. “கஞ்சப் பிசாசுடி நீ” என்று புறப்பட்டுப்போன மனைவியைத் தைரியமாக விமரிசித்தவாறு வெறுப்படிக்க கைத்தடியை வீசி எறிந்தார். அது இரண்டு ஒலிம்பிக் பல்ட்டி அடித்துவிட்டு விழுந்தது.
அவரது இந்த நடவடிக்கையை அவரால் சற்று முன் துரத்தப்பட்டு எதிர்ச் சாரியிலிருந்த பால் பூத்தின் அருகே நின்று கொண்டிருந்த சண்டிராணி கவனித்துக் கொண்டிருந்து, “லுள்!” என்று ஒற்றைக் குரைப்பு செய்தது. அவர் வெறுப்பில் வீசி எறிந்த தடி தன் மீது பட்டுவிடப் போகிறதென்ற பயத்தில் எழுந்த குரல் அது.
ஆனால் அப்புசாமியோ அதை வேறுவிதமாக பாஷ்யப் படுத்திக் கொண்டார்.
அந்த ‘லுள்’ளுக்கு என்ன அர்த்தமென்றால்.
‘அட பெரிசு! என்னை அத்தனை சிரமப்பட்டு விரட்டி நாயே! என் மீது நீர் வீசி நாயே! குச்சியால் குத்தி நாயே! ஒரு அஞ்சு ரூபாக் காசு ஒரு கப் சாயா அடிக்க உனக்குக் கிடைச்சதா? உன் மூஞ்சியிலே கரியைப் பூசிட்டு உன் பொண்டாட்டி போயிட்டாளே.’
நாயைத் தன் வீட்டுக் கேட்டிலிருந்து அப்புசாமி முறைத்தார். அவர் தன்னைப் பார்க்கிறார் என்றதும், பால்பூத் மறைவுக்காகச் சில அங்குலம் உள்வாங்கிக் கொண்டு அவரைக் கவனித்தது, கழுத்தைச் சாய்த்து முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு..
அவர் மனசு ரொம்பக் கஷ்டப்பட்டது. சீதேக் கிழவிக்காக அந்த ஜீவனைக் கோலால் குத்தி, நீர் வீசி அடிச்சு… கடைசியிலே ஒரு அஞ்சு ரூபா அழுக்கு நோட்டுக்கூடக் கிழவி தராமல் டபாய்ச்சிட்டாள்.’
சண்டிராணி என்று அப்புசாமியால் பெயர் சூட்டப்பட்ட அந்தக் குட்டி நாய்க்குப் பருவ வயது. இன்னும் கல்யாணமாகவில்லை. ‘அனேகமாக இந்த ஸீஸனில் தன் கற்பழிப்பு நிச்சயம்’ என்று அந்தக் குட்டிக்குத் தோன்றிவிட்டிருக்க வேண்டும்.
சுயம்வரம் அது இது என்று அதனுடைய பெற்றோர் அறிவிக்காமல் போனாலும், ராத்திரியானால், அதைப் பார்க்க, அதன் பின்னே தொடர, எட்டு ஊர் நாய்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்துவிடும்.
சண்டிக்குச் சில சமயம் பெருமை பிடிபடாது. அத்தனை நாய்களும் பின் தொடர, எந்த இலக்குமில்லாமலே தெருவை ஊர்வலமாக வரும். ‘எனக்கு எத்தனை காதலர்கள் பார்த்தீர்களா?’ என்று அது தெருக்காரர்களுக்குத் தெரிவிக்க நினைக்குமோ என்னவோ.
ஆனால் காதலர்கள் அதனிடம் கட்டுப்பாடு மீறி நடந்து கொள்ளத் தொடங்கினால் பல சமயம் பயப்பட்டு ஒளிந்துகொள்ள எந்தப் பங்களாவுக்குள்ளாவது ஓடிக் காருக்கடியிலோ, மாடிப்படிக்கட்டு அடியிலோ ஒளிந்து கொண்டுவிடும்.
முந்தையை இரவு காமக் கொடூரன்களான இரண்டு முரட்டு நாய்கள் அதைத் துரத்தி வந்ததால்தான் சீதாப்பாட்டியின் காருக்கடியில் தஞ்சம் அடைந்தது. ஒரு ராப்பொழுது தங்கிவிட்டு விடிந்ததும் புறப்பட்டு விடலாம் என்ற நன்னோக்குடன்தான் ஒளிந்துகொண்டது. அசதியில் தூங்கிவிட்டது. அலாரமா வைத்துக் கொள்ள முடியும். காருக்கடி நாயின் முன் கதைச் சுருக்கம் இவ்வளவுதான்.
சீதாப்பாட்டிக்குக் கழக விஷயமாகப் பகல்பூரா ஏராளமாக வேலை. பெங்களூரிலுள்ள பா.மு. கழகக்கிளையிடமிருந்து சில தமிழ்ப்பாட்டிகள் ஈ மெயிலில் அலறியிருந்தார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கு கலைஞர் முதல் ஏதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். ‘கன்னட ரக்ஷ¢க வேதிகே’ என்ற தீவிரவாதக் கன்னட அமைப்பு, ராஜ்குமார் காட்டிலிருந்து திரும்பியதும் தமிழர்களை விரட்டி அடிப்போம் என்று அறிக்கை விட்டிருந்ததே கவலைக்குக் காரணம்.
அது விஷயமாக ஸிஎம்மின் காரியதரிசியைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அதற்கே அரை நாள் சரியாகிவிட்டது.
கழகத்திலுள்ள பாட்டிமிண்ட்டன் கோர்ட்டில் சுனந்தா அனந்தராமன் என்ற புதிய உறுப்பினர் புடவை தடுக்கி விழுந்துவிட்டாள். அதனால் சீதாப்பாட்டியின் எதிரியான பொன்னம்மா டேவிட், பாட்டிமிண்ட்டன் கோர்ட்டைச் சரியாகப் பராமரிக்காமல் அது குண்டும் குழியுமாக இருந்ததுதான் அதற்குக் காரணம் என்றும், பொறுப்பற்ற தன்மைக்காகப் புதிய உறுப்பினரிடம் சீதாப்பாட்டி மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஆர்ப்பாட்ம் செய்து கொண்டிருந்தாள்.
ஒரு வேலியத்தைப் போட்டுக் கொண்டு சீதாப்பாட்டி ஆழ்ந்து தூங்கிவிட்டாள். ஏதோ கனவுகள், பொன்னம்மா டேவிட் தன்னுடைய அல்சேஷனைப் பிடித்துக் கொண்டு பாட்டிமிண்ட்டன் கோர்ட்டுக்கு வருகிறாள். அது வரக் வரக்கென்று தரையைச் சுரண்டுகிறது. சீதாப்பாட்டி பொன்னம்மாவைக் கண்டிக்கிறாள். அவளோ நாயை சீதாப்பாட்டி மீது ஏவி விடுகிறாள். ஒரு நாயல்ல. ஏழெட்டு நாய்கள். வள் வள்… வாள்… வாளு வாளு… வாளு… பயங்கரக் குரைப்பு.
பாட்டி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ‘நல்ல வேளை எல்லாம் கனவு’ என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. கனவில் வீடியோப் பகுதி மட்டும் கனவு. ஆடியோப் பகுதி நிஜம் போலும்.
நிஜமாகவே நாய்கள் சத்தம். போர்டிகோவிலிருந்து உர்ர்…ர்… வள்… வள்வள்… வாளு. வாளு… வாளுளு வாளுளு… ஏழெட்டு நாய்கள் சேர்ந்துகொண்டு ஒரு நாயைக் கொலை செய்வது போலவும் அது அலறுவது போலவும் சத்தம்.
கோபமும், எரிச்சலும் அவசரமுமாக விளக்கைப் போட்டாள். போர்ட்டிகோ விளக்கையும் போட்டாள். ஜன்னல் கர்ட்டனை விலக்கி எட்டிப் பார்த்தாள். 
 
பல்வேறு சைஸ்களில் ஏறக்குறைய டஜன் நாய்கள். ஒரு நாய் அவளைக் கவனியாமேலே காரின் வலது சக்கரப் பகுதியை அலட்சியமாக நனைத்துவிட்டு ப·ப் ப·ப் என்றது. என்ன அர்த்தமோ? யாரிடம் விட்ட சவாலோ? என்னாலா முடியாது என்றாய் – மறுபடியும் கூடப் பண்ணுவேன் என்று மறு சவால் விட்ட மாதிரி இரண்டாம் தடவையும் நனைத்தது.
அந்தக் கண்ணராவிக் காட்சியைக் காணச் சகியாதவளாக மனம் கொதித்த பாட்டி அப்புசாமி மீது பாய்ந்தாள்.
இத்தனை சத்தமும் ஒரு துளிக்கூடக் காதில் விழாதவராக நிம்மதியாகத் தரையில், சோழ மண்டல் நவீன ஓவியர் வரைந்த கோணா மாணா கோட்டுச் சித்திரம் மாதிரி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
“உங்களைத்தானே? எழுந்து தொலையுங்கள், ஹெள த ஹெல் யு ஆர் ஸ்லீப்பிங் அன்பெர்டர்ப்ட்?” என்று அவர் மீது ஆத்திரத்துடன் தலையணையை விசிறி அடித்தாள்.
அலறி அடித்துக்கொண்டு அப்புசாமி எழுந்தார். “திருடன்! திருடன்!” என்று கூவினார்.
“ஷட் அப் ஐ ஸே!” பாட்டி வெடித்தாள். “கீழே நாயிங்க ரகளை காதுலே விழலையா?”
அப்புசாமி சுய உணர்வு வரப்பெற்று நாய்களின் ரகளை காதில் விழுந்ததும், “நான் கேட்டை நல்லாப் பூட்டினேனே. இத்தனைப் பீடைங்க எப்படி நுழைஞ்சது உள்ளே?” என்று ஆச்சரியப்பட்டார்.
“ஸில்லி! என்னைக் கேட்கறிங்களா? டூ ஸம்திங் ஐ ஸே. தடியைத் தூக்கிட்டுப் போங்க. க்விக்! கெட் லாஸ்ட்! பூட்டினாராம் பூட்டி…”
அப்புசாமி ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை. உடம்பு பூரா ஒரு விறைப்பு பரவிப் படர மனைவியை முறைப்போடு ஏறிட்டார். “தடியைத் தூக்கிட்டு நான் போகணுமா?”
ரேஷன் கடையில் எடை குறைவாகப் போடுகிறவனைக் கோபக்காரர் முறைப்பதுபோல முறைத்தார். “உத்தரவு போடறியா உத்தரவு?”
சீதாப்பாட்டி அவர் முறைப்பை லட்சியம் செய்யாமல், “கேட்டை ராத்திரி நீங்கதானே பூட்டினீங்க? ஆன்ஸர் மை க்வெஸ்ச்சன்” என்று அதட்டினாள்.
“மூடுமே வாயை!” என்று பதில் அதட்டல் கொடுத்தார் அப்புசாமி. “போய்ப்பாரு கேட்டை பூட்டியிருக்கேனா இல்லையான்னு! உன் முட்டைக் குருட்டுக் கண்ணுக்குத் தெரியலைனா டார்ச் அடிச்சுக் காட்டறேன். நல்லாப் பாரு.”
ஜன்னல் வழியே கேட்டுக்கு டார்ச் லைட் அடித்தார். சங்கிலி போட்டுப் பக்காவாக கேட் பூட்டியிருந்தது.
பாட்டியின் ஸ்வரம் தணிந்தது. “பின்னே எந்தப் பக்கமிருந்து வந்திருக்கும்… ஐ கான்ட் அண்டர்ஸ்டான்ட்…”
“எல்லாம் பாராசூட்டுலே வந்து குதிச்சிருக்குமோ என்னவோ…”
“ஆல்ரைட்! நீங்க கேட்டைப் பூட்டலைன்னு நான் சொன்னதை வித்ட்ரா பண்ணிக்கிறேன்… வெரி ஸாரி… முதலிலே அதுங்களை எப்படியாவது க்ளீயரவுட் பண்ணுங்க.”
அப்புசாமி தெனாவட்டாக ஒரு சிரிப்புச் சிரித்தார். “காத்தாலே விரட்டியடிச்சதுக்கே நீ தங்க மோதிரம் பண்ணிப் போட்டுட்டே… இப்போ என்ன தில்லிருந்தால் ராத்திரியிலே எழுப்பி நாய் விரட்டுப் பண்ணச் சொல்லுவே? முழுசாக நூறு ரூபா இப்பவே கை மேலே வெச்சியானா அதுங்களை விரட்டிட்டு வர்ரேன். வெறும் வீணருக்கு உழைத்து உடலம் சாயமாட்டோம். ‘பாரதி’ படம் ரிலீஸாயிருக்குது. போய்ப் பாரு.”
“ப்ளீஸ்!” என்றாள் சீதாப்பாட்டி. “பேமெண்ட் விஷயம் காத்தாலே ஸெட்டில் பண்ணிக்கலாம். முதலிலே நாயிங்களை விரட்டிட்டு வாங்க…”
“கை மேலே காசு, வாய் மேலே தோசை. ஒரு டஜன் நாய் இருக்கும் போலிருக்கு. ஒரு நாய்க்குப் பத்து ரூபாய் கணக்குன்னாக்கூட நூற்றி இருபது ரூபாயாச்சு. லாட்டா நூறு குடுத்துடு போதும், நான் நியாயமாத்தான் கேட்கறேன்.”
சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டு பர்ஸைத் திறந்து நூறு ரூபாய்த் தாள் ஒன்று எடுத்துத் தந்தாள்.
அப்புசாமி பிரத்தியேகமான நீளத் தடியுடன் நாய்க் களத்தில் இறங்கினார்.
ஐந்தே நிமிடங்களில் அதிரடி செய்து, தனக்குத் தெரிந்த, தெரியாத சிலம்ப வேலையெல்லாம் செய்து நாய்ப் பட்டாளத்தை வெளியேற்றிவிட்டு, “நல்லாப் பாத்துக்கோம்மே… ஒரு நாய்க் குஞ்சு குளுவான்கூடக் கிடையாது” என்று போர்ட்டிகோவை எடுத்து உதறாத குறையாகச் சொல்லிவிட்டு கேட்டைப் பூட்டிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார்.
ஆனால் சீதாப்பாட்டிக்குப் போன தூக்கம் போனதுதான்.
இரும்புக் கேட்டை இறுகப் பூட்டியிருந்து ஒரு டஜன் நாய் நடு நிசியில் பாகிஸ்தான் பயங்கரவாதக் கும்பல் மாதிரி உள்ளே வந்து அட்டகாசம் பண்ணறது என்றால்… இது ஒரு இன்ஸல்ட் டு த ஹ்யுமானிடி.
பின் பக்கத்துக்கு காம்பவுண்டுச் சுவர் உடைந்திருக்கிறதே அது வழியாகத்தான் வந்திருக்க வேண்டும். அந்தப் பின் பக்கத்துச் சுவர் பக்கத்து வீட்டு முதலியாருடையது.
முதலியாருக்குக் காலையில் எட்டரை மணிக்கு ·போன் அடித்தாள். ‘நீங்கள் டயல் செய்யும் எண் உபயோகத்தில் இல்லை’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு யந்திரம் இரண்டு பொய்களைச் சொன்னது. (நாட்டில் இப்போது மனிதர்களைக் காட்டிலும் டெலிபோன் பதிவு யந்திரங்களே அதிகம் பொய் பேசுகின்றன.)
சீதாப்பாட்டிக்கு லயன் கிடைத்துவிட்டது. ஆனால் முதலியார் கிடைக்கவில்லை. புதிதாகத் துவங்கப் போகும் ‘முதலியார் கட்சி’ வேலைக்காக ராத்திரியெல்லாம் அலைந்துவிட்டுத் துகிக் கொண்டிருக்கிறார் என்று மிஸஸ் முதலியார் கூறினாள். “என்ன விஷயம் சொல்லுங்கம்மா. பக்கத்துக்கு வீட்டுப் பாட்டியம்மாதானே?”
“ஆமாம். உங்க காம்பவுண்டுச் சுவர் உடைஞ்சி போயிருக்கில்லையா… ஐ திங்க் ·பார் த பாஸ்ட் ஸிக்ஸ் மன்த்ஸாவே டேமேஜ்டாகத்தானிருக்கு. அது வழியாக ராத்திரியிலே ஏகப்பட்ட நாய்கள் உள்ளே வந்து டிஸ்டர்பிங்காக இருக்கு. நானும் ஸோமெனி டைம் சொல்லிவிட்டேன்.”
முதலியார் வூட்டம்மாவுக்கு அய்யிரு வூட்டம்மாவின் பேச்சு எரிச்சலைத் தந்தது. “அவராண்டை சொல்றேன்” என்று ·போனை வைத்துவிட்டாள். ‘சுவராண்டை சொல்றேன்’ என்கிற மாதிரி சீதாப்பாட்டியின் காதில் விழுந்தது.
 அப்புசாமியை வைத்துத்தான் வேலையை முடிக்க வேண்டும் என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றியது.
“உங்களைத்தானே? நீங்க மனசு வெச்சால்தான் நாய்கள் கிட்டேயிருந்து நமக்கு ரிலீ·ப் கிடைக்கும்” என்றாள் மிகவும் இதமாக. “ராத்திரியை நினைத்தாலே ஒரே நைட்மேரிஷாக இருக்கிறது. பின் பக்கம் உடைஞ்ச காம்பவுண்டுக்கு ஒரு ஷீட்டோ, பலகையோ வெச்சு டெம்பரரியாகவாவது பிளாக் பண்ணி வையுங்கோ. பழைய அஸ்பஸ்டாஸ் ஷீட்டுகள் மோட்டர் ஷெட் மேலே ரெண்டொண்ணு இருக்குன்னு ஞாபகம்.”
“ஓ! செய்துடறேன்” என்ற அப்புசாமி உற்சாகமாக டர்ரென்று அருகிலிருந்த தினக் காலண்டரில் ஒரு தேதியைக் கிழித்து அதில் வேகமாக என்னவோ எழுதிப் பாட்டியிடம் நீட்டினார்.
வாங்கிப் படித்துத் திடுக்கிட்டாள் பாட்டி. “என்னது, சர்வீஸ் சார்ஜ் பதினைந்து ரூபாயா! அட்ரோஷியஸ். எப்பப் பார்த்தாலும் பணம், பணம், பணம்! ஆல்வேஸ் பணம்! பண மேனியக்!”
“அடியே கியவி!” அப்புசாமி சிரித்தார். “உங்கிட்டே போராடிப் போராடி நான் பணம் வாங்கி லட்சாதிபதியாகி விட்டேனா, குரோராதிபதி ஆகிவிட்டேனா? இந்தப் பிச்சைக் காசைச் சம்பாதிக்க உன் கழுத்திலே அப்பப்ப கத்திவெக்கணுமாயிருக்கு.”
சீதாப்பாட்டி எரிச்சலுடன் பதினைந்து ரூபாயை அவரிடம் தந்தாள்.
வாங்கிக் கொண்டு, செல்ல முத்தம் ஒன்று தந்தார் நோட்டுக்கு.
அவர் எதிரே ஒரு நிமிஷம்கூட நிற்கப் பிடிக்காமல், விருட்டென்று உள்ளே சென்றாள் சீதாப்பாட்டி. முக்கிய ·பைல்களை எடுத்துக் கொண்டு, தானே சென்று கேட்டைத் திறந்தாள்.
அப்புசாமி விரைந்து வந்து, “அடடே! உனக்கு ஏம்மே கேட் திறக்கிற வேலையெல்லாம். அதற்குத்தான் மாசாமாசம் அலவன்ஸ் தர்றியே?” என்று தானே திறக்க முயன்றார்.
“ப்ளீஸ்! நோ மோர் சர்வீஸஸ் ·ப்ரம் யூ ஹியர் ஆ·ப்டர்” என்று கோபமாகச் சீதாப்பாட்டி கூறியவாறே தானே கேட்டைத் திறந்தாள்.
கேட், வழக்கமாக ஒரு சரணிவரிசை பாடும்… இப்போது சத்தமே இல்லை. திறந்தது.
இன்னொரு விஷயத்தையும் பாட்டி கவனித்தாள். வரிசை வரிசையாக எறும்புகள் கேட் கம்பி மீது சுறுசுறுப்பாகப் பயணித்துக் கொண்டிருந்தன.
கேட்டின் கீலுக்கு எண்ணெய் போடப்பட்ருந்தது.
யார் இவ்வளவு அக்கறையாக எண்ணெய் விட்டிருப்பார்கள், கணவர்தான் போட்டிருக்க வேண்டும். அவருக்கு இவ்வளவு பொறுப்பா?
என்னவோ ஒரு ஸ்பார்க் அடித்தது. சில கம்ப்யூட்டர் கிரா·பிக்ஸ் மூளைக்குள் குறுக்கும் நெடுக்கும் சென்றன.
முகத்தை மலர வைத்துக் கொண்டாள்.
“கையை முதலிலே இப்படிக் குடுங்கோ” என்றாள் கணவரிடம். “ஐ வான்ட் டு கன்கிராஜுலேட் யூ.”
சீதாப்பாட்டி தானாக அப்புசாமியின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.
“எனக்கா கை குடுக்கறே! என்னாச்சிடி உனக்கு?” அப்புசாமி ஆச்சரியப்பட்டார்.
“எதுக்கு இந்த ஹாண்ட் ஷேக்னு உங்களுக்குப் புரியலையா?” சீதாப்பாட்டி கேட்டாள்.
“நாய் விரட்டினதுக்குத்தானே?”
“நோ. நோ. நீங்க உடம்பு வளைஞ்ச… வீட்டுக்குன்னு ஒரு காரியம் நான் சொல்லாமலே பண்ணியிருக்கீங்களே… அதுக்காக…”
அப்புசாமி குழப்பமாக. “நீ சொல்லாமலே நான் ஒரு காரியம் பண்ணியிருக்கேனா…”
“இதோ. கேட்டுக்கு ஆயில் விட்டிருக்கீங்களே. அதைச் சொல்றேன். நாராசமாச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. நானே சொல்லணும்னு நினைச்சிட்டிருந்தேன். விச் ஆயில் டிட் யு புட்? நான் தடவிக்கிற ஹேர் ஆயில் ஸ்மெல் வந்தது.”
“ஐயையோ! உன் ஹேர் ஆயிலை இதுக்கெல்லாம் போடுவேனா? என் தலைக்குத் தடவிக்கவே பயப்படுவேன்.”
“இவ்வளவு பொறுப்பு உங்களுக்கு வந்துட்டுதேன்னு ஐ’ம் ஸோ மச் ப்ளீஸ்ட். நேற்று கொடுத்த நூறு ரூபாயையும், இப்ப கொடுத்த பதினைஞ்சு ரூபாயையும் குடுங்க. உங்களுக்கு ·பைவ் ஹண்ட்ரட் ருபீ நோட்டா ஒண்ணு ப்ரசென்ட் பண்ணப் போறேன்.”
அப்புசாமி நெகிழ்ந்து போனார்.
“சீதே! உயிரை விட்டுகிட்டு அத்தினி நாயை விரட்டியதுக்கு நூறு ரூபாதான் தந்தே. வெறுமே கேட்டுக்கு ரெண்டு சொட்டு எண்ணெய் விட்டதுக்கு ஐந்நூறு ரூவா தர்ரேன்கிறே? உன் மனசு ஆழத்தையும் பர்ஸ் ஆழத்தையும் புரிஞ்சிக்கவே முடியலேடி” என்று வியந்தார்.
“மை டியர் சார். நாய் விரட்டியது நான் சொல்லி, நீங்க செய்தது. ஆனால் கேட்டுக்கு ஆயில் போட்டது உங்களுக்கே தோணி, வாலன்டியராக நீங்களே செய்தது.”
அப்புசாமி நூற்றுப் பதினைஞ்சு ரூபாயை எடுத்துச் சீதாப்பாட்டியிடம் தந்தார். “சீதேய்! அந்தச் சண்டிராணி வந்து படுத்த வேளை… அமிதாப் பச்சனாட்டம் அள்ளித் தரேன் என்கிறே…”
“அவசரப்படாதீங்க ப்ளீஸ்…” என்றாள் சீதாப்பாட்டி. இன்னும் நான் தரலை. அதற்குள் என்னைப் பாராட்ட வேண்டாம்.” சீதாப்பாட்டி அவர் தந்த ரூபாயை வாங்கி பர்ஸ¤க்குள் போட்டு, பர்ஸை ஹாண்ட் பேக்குக்குள் போட்டு ஜிப்பைச் சரக்கென்று இழுத்து மூடினாள். பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதி தடா கைதியைப் பார்ப்பது போலக் கணவன் மீது கடும் பார்வை ஒன்றை வீசினாள். “ஸோ… நீங்கதான் கேட்டுக்கு ஆயில் போட்டீங்க.”
“ஆமாண்டி, ஆமாம். அதுக்குத்தானே பாராட்டினே. அதுக்குத்தானே ஐந்நூறு ரூபா தர்ரேன்னே. எடும்மே பணத்தைப் பர்ஸிலிருந்து. பையை மூடி வெச்சிட்டே.”
சீதாப்பாட்டி அலட்சியமாகச் சிரித்தாள். “நீங்க பொய்யை மூடினீங்க. நான் பையை மூடிட்டேன். தட்ஸ் ஆல்.”
“என்னடி உளர்ரே?”
“டூ ப்ளஸ் டூ, ·போர். எலிமென்ட்டரி அரித்மடிக்.”
இனம் தெரியாத கலவரம் அப்புசாமியின் வயிற்றில் பரோட்டா அடித்தது. “என்ன சொல்றே நீ?”
“மிஸ்டர் கிரிமினல் ப்ரெய்ன்!” என்ற சீதாப்பாட்டி திடுமென ரம்யா கிருஷ்ணனாகி விட்டாள். முகத்திலும் குரலிலும் கடுமை பரவ. “ஆன்ஸ்ர் மை க்வெஸ்ச்சன். நோ பங்லிங்! வாட் மேட் யூ டு புட் ஆயில் தேர்? தட் டூ பர்ட்டிகுலர் நைட்டில்…”
“சீதே… வந்து… வந்து…” அப்புசாமி தடுமாறினார். “ஏன், எனக்குப் பொறுப்பு இல்லையா? பொறுபோடு நான் செஞ்சேன்னுதானே ஐந்நூறு ரூபா தர்ரேன்னே?”
“யூ வோன்ட் கெட் ஈவன் ·பைவ் பைஸே. அன்டர்ஸ்டாண்ட்? உங்க மூளை சரியான கிரிமினல் ப்ரெய்ன். சொல்லுங்க நிஜத்தை. ஏன் போட்டீங்க ஆயில்?”
“வந்து… வந்து… சீதே, கேட் சத்தம் போட்டால் கண்ணராவியா, காதுராவியா இருக்குன்னுதான்.”
“நோ. என் காதுலே பூ சுத்த வேண்டாம். வாட் இஸ் த எக்ஸாக்ட் மோடிவ் பிஹைண்ட் இட்… கமான். அவுட் வித் இட் மை டியர் சார்…”
“வந்து… வந்து… சீதே நீ ஒரு பிசாசு.”
“பிசாசோ… போயோ. நாய்களுக்காக நீங்களே ராத்திரி கேட்டைத் திறந்து விட்டிருக்கீங்க. கேட் திறக்கற சத்தம் கேட்டு நான் முழிச்சிக் கொண்டுடப் போறேன்னு கேட்டுக்கு எண்ணெய் போட்டிருக்கீங்க.”
அப்புசாமி கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட எலி, கம்பியைச் சுரண்டிக்கொண்டு தடுமாறுவதைப் போலத் தடுமாறினார். “நான்… நான்… நான் ஒண்ணும் திறந்து விடவில்லை.”
“டெ·பனெட்டாக நீங்களேதான். எத்தனை நாயிங்க உள்ளே வருதோ அத்தனை நாய்களுக்குக் கணக்குப் பண்ணி அலவன்ஸ் வாங்கறது உங்க மீன் மைன்ட்லே உதித்த வொர்ஸ்ட் பிளான். மரியாதையா ஒப்புக்குங்க.”
“சீதே… அந்தச் சண்டிராணியின் கற்பைக் காக்கணும்னு கடமை உணர்ச்சியோடுதான் கதவை அதுக்கு மட்டும் திறந்து வெச்சேன். ஒரு புறாவைக் காப்பாத்தறதுக்காகச் சிபிச் சக்கரவர்த்தி தன் தொடையையே பப்பாளிப் பழம் சீவற மாதிரி சீவிச் சீவித் தந்தான். நான் ஒரு இந்தியன். அந்த ரத்தம்தான் என் உடம்பிலே ஓடுது.”
சிரித்தாள் சீதாப்பாட்டி. “உங்க உடம்பிலே சிபி ரத்தம் ஓடலே, மசால்தோசை ரத்தம்தான் ஓடறது.”
சீதாப்பாட்டி காரைக் கிளப்பி விட்டாள்.
“அடியே கியவி! ஒரு அஞ்சு ரூபாயாவது குடுத்துட்டுப் போடி. ஸிங்கள் டீக்காவது ஆகும்.” காரின் பின்னாலேயே சிறிது தூரம் வீணே விரைந்தார் அப்புசாமி.
சண்டிராணி எதிர்ப் பக்கத்து பால் பூத் நிழலில் இருந்துக்கொண்டு ‘லுள்!” என்றது.
அதன் விரிவுரையாவது: “பெரிசு! என்னை வெச்சு சம்பாதிக்கப் பார்த்தீங்க… முடியலியே. கெடுவான் கேடு நினைப்பான்.”.

         அப்புசாமி சீதாப்பாட்டியின் தூதுவராக மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.முதல் தடவை பச்சைத் தண்ணீரைப் பல திக்குகளிலிருந்து ஜல்ஜலார் என்று வீசினார். பலனில்லை.இரண்டாம் சுற்றில் சின்னஞ்சிறு தரமான கற்களைப் பொறுக்கி ஏவினார். ஊஹ¥ம். இலக்கை அவை அடையவில்லை.மூன்றாவது சுற்றில் வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து வந்து காருக்கடியில் கொடுத்து நாலா திசைகளிலும் லொட லொட செய்தார்.காருக்கடியில் இருந்து ‘உர்ர்ர்’ என்று ஓர் உறுமல் மட்டுமே வந்தது.கை எட்டின மட்டும் விட்டு வாக்கிங் ஸ்டிக்கை ‘உர்ர்’ வந்த திசையில் ஓங்கிக் குத்தினார்.அடுத்த நிமிடம் பெரும் அலறல்.“ஐயையோ பாவி! குச்சியாலே குத்தறானே! படக்கூடாத இடத்திலேல்லாம் படறதே! ஆ! ஊ! ஐயோ அப்பா, கொல்றானே. அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா?” (நாய் மொழியில் இந்தப் பாராவை மொழிபெயர்த்துக் கொள்க).“பார்த்து… பார்த்து…” என்று எச்சரித்தாள் சீதாப்பாட்டி, பத்திரமான இடத்தில் நின்று கொண்டு.“முதலிலே கேட்டை நல்லா வய்ட் ஓபனா திறந்து வெச்சிடுங்க, சனியன் ஏதாவது பிடுங்கி வைச்சுடப் போகிறது.”அப்புசாமி விரட்டலில் தீவிரமாக இருந்தார்.

 

        “ஏண்டி, என்கிட்டயா உன் வேலையைக் காட்டற…”என்று வாக்கிங் ஸ்டிக்கால் குத்தினார். ஆனால் அதற்குள் உள்ளிருந்த நாய் சாமர்த்திய சந்தன வீரப்பனைப் போல் தன் இடத்தை மாற்றிக் கொண்டுவிட்டது.குறிப்பிட்ட நாய் காருக்கடியில் குறிப்பிட்ட எந்த இடத்துல படுத்திருக்கிறது? நாயா, நாய்களா? குட்டியா, வாலிபமா, கிழமா? ஆணா, பெண்ணா, அரவாணியா?இந்த விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் தரையோடு தரையாகக் கவிழ்ந்து படுத்துவிட்டார்.காருக்கடியில் நட்ட நடுப் பாகத்தில் நிழலுருவமாகப் பிடிவாதக்கார நாய் படுத்திருந்தது.“சீதே! ஒரே ஒரு வழிதான்!” என்று அப்புசாமி எழுந்தார். “கொதிக்கக் கொதிக்க வென்னீர் காய்ச்சிட்டு வந்து சலார்னு உத்தறேன் பாரு… சரியான சண்டிராணியாயிருக்குது! எது எதுகளுக்கு என்னென்ன வைத்தியம் பண்ணணுமோ அது அதுகளுக்கு அப்பபடித்தான் பண்ணணும்.”“நெவர்! நெவர்!” என்று பதறினாள் சீதாப்பாட்டி. “ஐ வோன்ட் அலவ்! எஸ்.பி.ஸி.ஏக்கு ·போன் பண்ணிடுவேன்… இங்கே ஒரு அனிமலுக்கு க்ரூயல்ட்டி நடக்கிறதுன்னு…”“அடியே பாவி! உனக்காகத்தாண்டி விரட்டறேன். முதலிலே வென்னீரைக் காய்ச்சி உன் மேலே ஊத்தணும்” என்றவாறு குறிபார்த்துக் குச்சியைக் குத்தினார்.அடுத்த நிமிஷம் ஒரே கத்தல்.

 

        “வாள் வாள்… வாளுளு வாளுளு… வாளேளு… வாளேளு… வள்வள் வள் வாள்…” (படு வேகமாக அது உச்சரித்ததால் மொழிபெயர்ப்புத் தர இயலவில்லை.)அப்புசாமிக்கு மாபெரும் வெற்றி.விருட்டென்று நாய் வெளியே வந்து எடுத்தது ஓட்டம்.“க்விக்! க்விக்! கேட்டைச் சாத்தித் தொலையுங்க. வந்துடப் போறது மறுபடியும். உங்கள் ‘ஆபரேஷன் டாக் டிரைவ்’ அபாரம்! கன்கிராட்ஸ்! தாங்க்யூ ஸோமச்!” என்று சிரித்தாள் சீதாப்பாட்டி.அப்புசாமி செருமினார். “உன் வெறும் பாராட்டு யாருக்கு வேணும். இங்கே, ஓட்டலிலே ஒரு மசால்தோசை பத்தொன்பது ரூபாய்! ஸிங்கிள் சாம்பார் வடை ஒன்பது ரூபாய். நாஷ்டாவுக்கு எதுனாப் பாத்துக் குடுத்துட்டுப் போம்மே… தரையிலேல்லாம் உருள்தண்டம் போட்டு அந்தப் பீடையை விரட்டியிருக்கேன்.”“ஓ! மை குட்னஸ்” சீதாப்பாட்டி தன் சின்ன மோவாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டாள். “இன்ன விஷயத்துக்குத்தான் சர்வீஸ் சார்ஜ் கேட்கிறது என்கிற டிஸ்கிரிமினேஷனே உங்ககிட்டே இல்லையா? ராத்திரி கேட்டைச் சரியாப் பூட்டாதது உங்க தப்பு.”வெறுமே ஒரு பத்து ரூபாய் கூடத் தராமல் காரை எடுத்துக் கொண்டு சீதாப்பாட்டி கழகத்துக்குப் புறப்பட்டுவிட்டாள்.அப்புசாமிக்கு வாழ்க்கையே ‘சே’! என்றாகிவிட்டது.

 

       “கஞ்சப் பிசாசுடி நீ” என்று புறப்பட்டுப்போன மனைவியைத் தைரியமாக விமரிசித்தவாறு வெறுப்படிக்க கைத்தடியை வீசி எறிந்தார். அது இரண்டு ஒலிம்பிக் பல்ட்டி அடித்துவிட்டு விழுந்தது.அவரது இந்த நடவடிக்கையை அவரால் சற்று முன் துரத்தப்பட்டு எதிர்ச் சாரியிலிருந்த பால் பூத்தின் அருகே நின்று கொண்டிருந்த சண்டிராணி கவனித்துக் கொண்டிருந்து, “லுள்!” என்று ஒற்றைக் குரைப்பு செய்தது. அவர் வெறுப்பில் வீசி எறிந்த தடி தன் மீது பட்டுவிடப் போகிறதென்ற பயத்தில் எழுந்த குரல் அது.ஆனால் அப்புசாமியோ அதை வேறுவிதமாக பாஷ்யப் படுத்திக் கொண்டார்.அந்த ‘லுள்’ளுக்கு என்ன அர்த்தமென்றால்.‘அட பெரிசு! என்னை அத்தனை சிரமப்பட்டு விரட்டி நாயே! என் மீது நீர் வீசி நாயே! குச்சியால் குத்தி நாயே! ஒரு அஞ்சு ரூபாக் காசு ஒரு கப் சாயா அடிக்க உனக்குக் கிடைச்சதா? உன் மூஞ்சியிலே கரியைப் பூசிட்டு உன் பொண்டாட்டி போயிட்டாளே.’நாயைத் தன் வீட்டுக் கேட்டிலிருந்து அப்புசாமி முறைத்தார். அவர் தன்னைப் பார்க்கிறார் என்றதும், பால்பூத் மறைவுக்காகச் சில அங்குலம் உள்வாங்கிக் கொண்டு அவரைக் கவனித்தது, கழுத்தைச் சாய்த்து முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு..அவர் மனசு ரொம்பக் கஷ்டப்பட்டது.

 

       சீதேக் கிழவிக்காக அந்த ஜீவனைக் கோலால் குத்தி, நீர் வீசி அடிச்சு… கடைசியிலே ஒரு அஞ்சு ரூபா அழுக்கு நோட்டுக்கூடக் கிழவி தராமல் டபாய்ச்சிட்டாள்.’சண்டிராணி என்று அப்புசாமியால் பெயர் சூட்டப்பட்ட அந்தக் குட்டி நாய்க்குப் பருவ வயது. இன்னும் கல்யாணமாகவில்லை. ‘அனேகமாக இந்த ஸீஸனில் தன் கற்பழிப்பு நிச்சயம்’ என்று அந்தக் குட்டிக்குத் தோன்றிவிட்டிருக்க வேண்டும்.சுயம்வரம் அது இது என்று அதனுடைய பெற்றோர் அறிவிக்காமல் போனாலும், ராத்திரியானால், அதைப் பார்க்க, அதன் பின்னே தொடர, எட்டு ஊர் நாய்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்துவிடும்.சண்டிக்குச் சில சமயம் பெருமை பிடிபடாது. அத்தனை நாய்களும் பின் தொடர, எந்த இலக்குமில்லாமலே தெருவை ஊர்வலமாக வரும். ‘எனக்கு எத்தனை காதலர்கள் பார்த்தீர்களா?’ என்று அது தெருக்காரர்களுக்குத் தெரிவிக்க நினைக்குமோ என்னவோ.ஆனால் காதலர்கள் அதனிடம் கட்டுப்பாடு மீறி நடந்து கொள்ளத் தொடங்கினால் பல சமயம் பயப்பட்டு ஒளிந்துகொள்ள எந்தப் பங்களாவுக்குள்ளாவது ஓடிக் காருக்கடியிலோ, மாடிப்படிக்கட்டு அடியிலோ ஒளிந்து கொண்டுவிடும்.முந்தையை இரவு காமக் கொடூரன்களான இரண்டு முரட்டு நாய்கள் அதைத் துரத்தி வந்ததால்தான் சீதாப்பாட்டியின் காருக்கடியில் தஞ்சம் அடைந்தது.

 

       ஒரு ராப்பொழுது தங்கிவிட்டு விடிந்ததும் புறப்பட்டு விடலாம் என்ற நன்னோக்குடன்தான் ஒளிந்துகொண்டது. அசதியில் தூங்கிவிட்டது. அலாரமா வைத்துக் கொள்ள முடியும். காருக்கடி நாயின் முன் கதைச் சுருக்கம் இவ்வளவுதான்.சீதாப்பாட்டிக்குக் கழக விஷயமாகப் பகல்பூரா ஏராளமாக வேலை. பெங்களூரிலுள்ள பா.மு. கழகக்கிளையிடமிருந்து சில தமிழ்ப்பாட்டிகள் ஈ மெயிலில் அலறியிருந்தார்கள். அவர்களுடைய பாதுகாப்புக்கு கலைஞர் முதல் ஏதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தனர். ‘கன்னட ரக்ஷ¢க வேதிகே’ என்ற தீவிரவாதக் கன்னட அமைப்பு, ராஜ்குமார் காட்டிலிருந்து திரும்பியதும் தமிழர்களை விரட்டி அடிப்போம் என்று அறிக்கை விட்டிருந்ததே கவலைக்குக் காரணம்.அது விஷயமாக ஸிஎம்மின் காரியதரிசியைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தாள். அதற்கே அரை நாள் சரியாகிவிட்டது.கழகத்திலுள்ள பாட்டிமிண்ட்டன் கோர்ட்டில் சுனந்தா அனந்தராமன் என்ற புதிய உறுப்பினர் புடவை தடுக்கி விழுந்துவிட்டாள். அதனால் சீதாப்பாட்டியின் எதிரியான பொன்னம்மா டேவிட், பாட்டிமிண்ட்டன் கோர்ட்டைச் சரியாகப் பராமரிக்காமல் அது குண்டும் குழியுமாக இருந்ததுதான் அதற்குக் காரணம் என்றும், பொறுப்பற்ற தன்மைக்காகப் புதிய உறுப்பினரிடம் சீதாப்பாட்டி மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஆர்ப்பாட்ம் செய்து கொண்டிருந்தாள்.

 

       ஒரு வேலியத்தைப் போட்டுக் கொண்டு சீதாப்பாட்டி ஆழ்ந்து தூங்கிவிட்டாள். ஏதோ கனவுகள், பொன்னம்மா டேவிட் தன்னுடைய அல்சேஷனைப் பிடித்துக் கொண்டு பாட்டிமிண்ட்டன் கோர்ட்டுக்கு வருகிறாள். அது வரக் வரக்கென்று தரையைச் சுரண்டுகிறது. சீதாப்பாட்டி பொன்னம்மாவைக் கண்டிக்கிறாள். அவளோ நாயை சீதாப்பாட்டி மீது ஏவி விடுகிறாள். ஒரு நாயல்ல. ஏழெட்டு நாய்கள். வள் வள்… வாள்… வாளு வாளு… வாளு… பயங்கரக் குரைப்பு.பாட்டி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். ‘நல்ல வேளை எல்லாம் கனவு’ என்று முழுக்கச் சொல்லிவிட முடியாது. கனவில் வீடியோப் பகுதி மட்டும் கனவு. ஆடியோப் பகுதி நிஜம் போலும்.நிஜமாகவே நாய்கள் சத்தம். போர்டிகோவிலிருந்து உர்ர்…ர்… வள்… வள்வள்… வாளு. வாளு… வாளுளு வாளுளு… ஏழெட்டு நாய்கள் சேர்ந்துகொண்டு ஒரு நாயைக் கொலை செய்வது போலவும் அது அலறுவது போலவும் சத்தம்.கோபமும், எரிச்சலும் அவசரமுமாக விளக்கைப் போட்டாள். போர்ட்டிகோ விளக்கையும் போட்டாள். ஜன்னல் கர்ட்டனை விலக்கி எட்டிப் பார்த்தாள்.  பல்வேறு சைஸ்களில் ஏறக்குறைய டஜன் நாய்கள். ஒரு நாய் அவளைக் கவனியாமேலே காரின் வலது சக்கரப் பகுதியை அலட்சியமாக நனைத்துவிட்டு ப·ப் ப·ப் என்றது. என்ன அர்த்தமோ? யாரிடம் விட்ட சவாலோ? என்னாலா முடியாது என்றாய் – மறுபடியும் கூடப் பண்ணுவேன் என்று மறு சவால் விட்ட மாதிரி இரண்டாம் தடவையும் நனைத்தது.அந்தக் கண்ணராவிக் காட்சியைக் காணச் சகியாதவளாக மனம் கொதித்த பாட்டி அப்புசாமி மீது பாய்ந்தாள்.இத்தனை சத்தமும் ஒரு துளிக்கூடக் காதில் விழாதவராக நிம்மதியாகத் தரையில், சோழ மண்டல் நவீன ஓவியர் வரைந்த கோணா மாணா கோட்டுச் சித்திரம் மாதிரி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

 

       “உங்களைத்தானே? எழுந்து தொலையுங்கள், ஹெள த ஹெல் யு ஆர் ஸ்லீப்பிங் அன்பெர்டர்ப்ட்?” என்று அவர் மீது ஆத்திரத்துடன் தலையணையை விசிறி அடித்தாள்.அலறி அடித்துக்கொண்டு அப்புசாமி எழுந்தார். “திருடன்! திருடன்!” என்று கூவினார்.“ஷட் அப் ஐ ஸே!” பாட்டி வெடித்தாள். “கீழே நாயிங்க ரகளை காதுலே விழலையா?”அப்புசாமி சுய உணர்வு வரப்பெற்று நாய்களின் ரகளை காதில் விழுந்ததும், “நான் கேட்டை நல்லாப் பூட்டினேனே. இத்தனைப் பீடைங்க எப்படி நுழைஞ்சது உள்ளே?” என்று ஆச்சரியப்பட்டார்.“ஸில்லி! என்னைக் கேட்கறிங்களா? டூ ஸம்திங் ஐ ஸே. தடியைத் தூக்கிட்டுப் போங்க. க்விக்! கெட் லாஸ்ட்! பூட்டினாராம் பூட்டி…”அப்புசாமி ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை. உடம்பு பூரா ஒரு விறைப்பு பரவிப் படர மனைவியை முறைப்போடு ஏறிட்டார். “தடியைத் தூக்கிட்டு நான் போகணுமா?”ரேஷன் கடையில் எடை குறைவாகப் போடுகிறவனைக் கோபக்காரர் முறைப்பதுபோல முறைத்தார். “உத்தரவு போடறியா உத்தரவு?”சீதாப்பாட்டி அவர் முறைப்பை லட்சியம் செய்யாமல், “கேட்டை ராத்திரி நீங்கதானே பூட்டினீங்க? ஆன்ஸர் மை க்வெஸ்ச்சன்” என்று அதட்டினாள்.“மூடுமே வாயை!” என்று பதில் அதட்டல் கொடுத்தார் அப்புசாமி. “போய்ப்பாரு கேட்டை பூட்டியிருக்கேனா இல்லையான்னு! உன் முட்டைக் குருட்டுக் கண்ணுக்குத் தெரியலைனா டார்ச் அடிச்சுக் காட்டறேன்.

 

       நல்லாப் பாரு.”ஜன்னல் வழியே கேட்டுக்கு டார்ச் லைட் அடித்தார். சங்கிலி போட்டுப் பக்காவாக கேட் பூட்டியிருந்தது.பாட்டியின் ஸ்வரம் தணிந்தது. “பின்னே எந்தப் பக்கமிருந்து வந்திருக்கும்… ஐ கான்ட் அண்டர்ஸ்டான்ட்…”“எல்லாம் பாராசூட்டுலே வந்து குதிச்சிருக்குமோ என்னவோ…”“ஆல்ரைட்! நீங்க கேட்டைப் பூட்டலைன்னு நான் சொன்னதை வித்ட்ரா பண்ணிக்கிறேன்… வெரி ஸாரி… முதலிலே அதுங்களை எப்படியாவது க்ளீயரவுட் பண்ணுங்க.”அப்புசாமி தெனாவட்டாக ஒரு சிரிப்புச் சிரித்தார். “காத்தாலே விரட்டியடிச்சதுக்கே நீ தங்க மோதிரம் பண்ணிப் போட்டுட்டே… இப்போ என்ன தில்லிருந்தால் ராத்திரியிலே எழுப்பி நாய் விரட்டுப் பண்ணச் சொல்லுவே? முழுசாக நூறு ரூபா இப்பவே கை மேலே வெச்சியானா அதுங்களை விரட்டிட்டு வர்ரேன். வெறும் வீணருக்கு உழைத்து உடலம் சாயமாட்டோம். ‘பாரதி’ படம் ரிலீஸாயிருக்குது. போய்ப் பாரு.”“ப்ளீஸ்!” என்றாள் சீதாப்பாட்டி. “பேமெண்ட் விஷயம் காத்தாலே ஸெட்டில் பண்ணிக்கலாம். முதலிலே நாயிங்களை விரட்டிட்டு வாங்க…”“கை மேலே காசு, வாய் மேலே தோசை.

 

      ஒரு டஜன் நாய் இருக்கும் போலிருக்கு. ஒரு நாய்க்குப் பத்து ரூபாய் கணக்குன்னாக்கூட நூற்றி இருபது ரூபாயாச்சு. லாட்டா நூறு குடுத்துடு போதும், நான் நியாயமாத்தான் கேட்கறேன்.”சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டு பர்ஸைத் திறந்து நூறு ரூபாய்த் தாள் ஒன்று எடுத்துத் தந்தாள்.அப்புசாமி பிரத்தியேகமான நீளத் தடியுடன் நாய்க் களத்தில் இறங்கினார்.ஐந்தே நிமிடங்களில் அதிரடி செய்து, தனக்குத் தெரிந்த, தெரியாத சிலம்ப வேலையெல்லாம் செய்து நாய்ப் பட்டாளத்தை வெளியேற்றிவிட்டு, “நல்லாப் பாத்துக்கோம்மே… ஒரு நாய்க் குஞ்சு குளுவான்கூடக் கிடையாது” என்று போர்ட்டிகோவை எடுத்து உதறாத குறையாகச் சொல்லிவிட்டு கேட்டைப் பூட்டிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார்.ஆனால் சீதாப்பாட்டிக்குப் போன தூக்கம் போனதுதான்.இரும்புக் கேட்டை இறுகப் பூட்டியிருந்து ஒரு டஜன் நாய் நடு நிசியில் பாகிஸ்தான் பயங்கரவாதக் கும்பல் மாதிரி உள்ளே வந்து அட்டகாசம் பண்ணறது என்றால்… இது ஒரு இன்ஸல்ட் டு த ஹ்யுமானிடி.பின் பக்கத்துக்கு காம்பவுண்டுச் சுவர் உடைந்திருக்கிறதே அது வழியாகத்தான் வந்திருக்க வேண்டும். அந்தப் பின் பக்கத்துச் சுவர் பக்கத்து வீட்டு முதலியாருடையது.

 

 

      முதலியாருக்குக் காலையில் எட்டரை மணிக்கு ·போன் அடித்தாள். ‘நீங்கள் டயல் செய்யும் எண் உபயோகத்தில் இல்லை’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவு யந்திரம் இரண்டு பொய்களைச் சொன்னது. (நாட்டில் இப்போது மனிதர்களைக் காட்டிலும் டெலிபோன் பதிவு யந்திரங்களே அதிகம் பொய் பேசுகின்றன.)சீதாப்பாட்டிக்கு லயன் கிடைத்துவிட்டது. ஆனால் முதலியார் கிடைக்கவில்லை. புதிதாகத் துவங்கப் போகும் ‘முதலியார் கட்சி’ வேலைக்காக ராத்திரியெல்லாம் அலைந்துவிட்டுத் துகிக் கொண்டிருக்கிறார் என்று மிஸஸ் முதலியார் கூறினாள். “என்ன விஷயம் சொல்லுங்கம்மா. பக்கத்துக்கு வீட்டுப் பாட்டியம்மாதானே?”“ஆமாம். உங்க காம்பவுண்டுச் சுவர் உடைஞ்சி போயிருக்கில்லையா… ஐ திங்க் ·பார் த பாஸ்ட் ஸிக்ஸ் மன்த்ஸாவே டேமேஜ்டாகத்தானிருக்கு. அது வழியாக ராத்திரியிலே ஏகப்பட்ட நாய்கள் உள்ளே வந்து டிஸ்டர்பிங்காக இருக்கு. நானும் ஸோமெனி டைம் சொல்லிவிட்டேன்.”முதலியார் வூட்டம்மாவுக்கு அய்யிரு வூட்டம்மாவின் பேச்சு எரிச்சலைத் தந்தது. “அவராண்டை சொல்றேன்” என்று ·போனை வைத்துவிட்டாள். ‘சுவராண்டை சொல்றேன்’ என்கிற மாதிரி சீதாப்பாட்டியின் காதில் விழுந்தது. அப்புசாமியை வைத்துத்தான் வேலையை முடிக்க வேண்டும் என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றியது.“உங்களைத்தானே? நீங்க மனசு வெச்சால்தான் நாய்கள் கிட்டேயிருந்து நமக்கு ரிலீ·ப் கிடைக்கும்” என்றாள் மிகவும் இதமாக. “ராத்திரியை நினைத்தாலே ஒரே நைட்மேரிஷாக இருக்கிறது. பின் பக்கம் உடைஞ்ச காம்பவுண்டுக்கு ஒரு ஷீட்டோ, பலகையோ வெச்சு டெம்பரரியாகவாவது பிளாக் பண்ணி வையுங்கோ.

 

       பழைய அஸ்பஸ்டாஸ் ஷீட்டுகள் மோட்டர் ஷெட் மேலே ரெண்டொண்ணு இருக்குன்னு ஞாபகம்.”“ஓ! செய்துடறேன்” என்ற அப்புசாமி உற்சாகமாக டர்ரென்று அருகிலிருந்த தினக் காலண்டரில் ஒரு தேதியைக் கிழித்து அதில் வேகமாக என்னவோ எழுதிப் பாட்டியிடம் நீட்டினார்.வாங்கிப் படித்துத் திடுக்கிட்டாள் பாட்டி. “என்னது, சர்வீஸ் சார்ஜ் பதினைந்து ரூபாயா! அட்ரோஷியஸ். எப்பப் பார்த்தாலும் பணம், பணம், பணம்! ஆல்வேஸ் பணம்! பண மேனியக்!”“அடியே கியவி!” அப்புசாமி சிரித்தார். “உங்கிட்டே போராடிப் போராடி நான் பணம் வாங்கி லட்சாதிபதியாகி விட்டேனா, குரோராதிபதி ஆகிவிட்டேனா? இந்தப் பிச்சைக் காசைச் சம்பாதிக்க உன் கழுத்திலே அப்பப்ப கத்திவெக்கணுமாயிருக்கு.”சீதாப்பாட்டி எரிச்சலுடன் பதினைந்து ரூபாயை அவரிடம் தந்தாள்.வாங்கிக் கொண்டு, செல்ல முத்தம் ஒன்று தந்தார் நோட்டுக்கு.அவர் எதிரே ஒரு நிமிஷம்கூட நிற்கப் பிடிக்காமல், விருட்டென்று உள்ளே சென்றாள் சீதாப்பாட்டி. முக்கிய ·பைல்களை எடுத்துக் கொண்டு, தானே சென்று கேட்டைத் திறந்தாள்.அப்புசாமி விரைந்து வந்து, “அடடே! உனக்கு ஏம்மே கேட் திறக்கிற வேலையெல்லாம். அதற்குத்தான் மாசாமாசம் அலவன்ஸ் தர்றியே?” என்று தானே திறக்க முயன்றார்.“ப்ளீஸ்! நோ மோர் சர்வீஸஸ் ·ப்ரம் யூ ஹியர் ஆ·ப்டர்” என்று கோபமாகச் சீதாப்பாட்டி கூறியவாறே தானே கேட்டைத் திறந்தாள்.கேட், வழக்கமாக ஒரு சரணிவரிசை பாடும்… இப்போது சத்தமே இல்லை. திறந்தது.இன்னொரு விஷயத்தையும் பாட்டி கவனித்தாள்.

 

        வரிசை வரிசையாக எறும்புகள் கேட் கம்பி மீது சுறுசுறுப்பாகப் பயணித்துக் கொண்டிருந்தன.கேட்டின் கீலுக்கு எண்ணெய் போடப்பட்ருந்தது.யார் இவ்வளவு அக்கறையாக எண்ணெய் விட்டிருப்பார்கள், கணவர்தான் போட்டிருக்க வேண்டும். அவருக்கு இவ்வளவு பொறுப்பா?என்னவோ ஒரு ஸ்பார்க் அடித்தது. சில கம்ப்யூட்டர் கிரா·பிக்ஸ் மூளைக்குள் குறுக்கும் நெடுக்கும் சென்றன.முகத்தை மலர வைத்துக் கொண்டாள்.“கையை முதலிலே இப்படிக் குடுங்கோ” என்றாள் கணவரிடம். “ஐ வான்ட் டு கன்கிராஜுலேட் யூ.”சீதாப்பாட்டி தானாக அப்புசாமியின் கையைப் பற்றிக் குலுக்கினாள்.“எனக்கா கை குடுக்கறே! என்னாச்சிடி உனக்கு?” அப்புசாமி ஆச்சரியப்பட்டார்.“எதுக்கு இந்த ஹாண்ட் ஷேக்னு உங்களுக்குப் புரியலையா?” சீதாப்பாட்டி கேட்டாள்.“நாய் விரட்டினதுக்குத்தானே?”“நோ. நோ. நீங்க உடம்பு வளைஞ்ச… வீட்டுக்குன்னு ஒரு காரியம் நான் சொல்லாமலே பண்ணியிருக்கீங்களே… அதுக்காக…”அப்புசாமி குழப்பமாக. “நீ சொல்லாமலே நான் ஒரு காரியம் பண்ணியிருக்கேனா…”“இதோ. கேட்டுக்கு ஆயில் விட்டிருக்கீங்களே. அதைச் சொல்றேன். நாராசமாச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. நானே சொல்லணும்னு நினைச்சிட்டிருந்தேன். விச் ஆயில் டிட் யு புட்? நான் தடவிக்கிற ஹேர் ஆயில் ஸ்மெல் வந்தது.”“ஐயையோ! உன் ஹேர் ஆயிலை இதுக்கெல்லாம் போடுவேனா? என் தலைக்குத் தடவிக்கவே பயப்படுவேன்.”“இவ்வளவு பொறுப்பு உங்களுக்கு வந்துட்டுதேன்னு ஐ’ம் ஸோ மச் ப்ளீஸ்ட். நேற்று கொடுத்த நூறு ரூபாயையும், இப்ப கொடுத்த பதினைஞ்சு ரூபாயையும் குடுங்க. உங்களுக்கு ·பைவ் ஹண்ட்ரட் ருபீ நோட்டா ஒண்ணு ப்ரசென்ட் பண்ணப் போறேன்.”அப்புசாமி நெகிழ்ந்து போனார்.

 

        “சீதே! உயிரை விட்டுகிட்டு அத்தினி நாயை விரட்டியதுக்கு நூறு ரூபாதான் தந்தே. வெறுமே கேட்டுக்கு ரெண்டு சொட்டு எண்ணெய் விட்டதுக்கு ஐந்நூறு ரூவா தர்ரேன்கிறே? உன் மனசு ஆழத்தையும் பர்ஸ் ஆழத்தையும் புரிஞ்சிக்கவே முடியலேடி” என்று வியந்தார்.“மை டியர் சார். நாய் விரட்டியது நான் சொல்லி, நீங்க செய்தது. ஆனால் கேட்டுக்கு ஆயில் போட்டது உங்களுக்கே தோணி, வாலன்டியராக நீங்களே செய்தது.”அப்புசாமி நூற்றுப் பதினைஞ்சு ரூபாயை எடுத்துச் சீதாப்பாட்டியிடம் தந்தார். “சீதேய்! அந்தச் சண்டிராணி வந்து படுத்த வேளை… அமிதாப் பச்சனாட்டம் அள்ளித் தரேன் என்கிறே…”“அவசரப்படாதீங்க ப்ளீஸ்…” என்றாள் சீதாப்பாட்டி. இன்னும் நான் தரலை. அதற்குள் என்னைப் பாராட்ட வேண்டாம்.” சீதாப்பாட்டி அவர் தந்த ரூபாயை வாங்கி பர்ஸ¤க்குள் போட்டு, பர்ஸை ஹாண்ட் பேக்குக்குள் போட்டு ஜிப்பைச் சரக்கென்று இழுத்து மூடினாள். பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதி தடா கைதியைப் பார்ப்பது போலக் கணவன் மீது கடும் பார்வை ஒன்றை வீசினாள்.

 

         “ஸோ… நீங்கதான் கேட்டுக்கு ஆயில் போட்டீங்க.”“ஆமாண்டி, ஆமாம். அதுக்குத்தானே பாராட்டினே. அதுக்குத்தானே ஐந்நூறு ரூபா தர்ரேன்னே. எடும்மே பணத்தைப் பர்ஸிலிருந்து. பையை மூடி வெச்சிட்டே.”சீதாப்பாட்டி அலட்சியமாகச் சிரித்தாள். “நீங்க பொய்யை மூடினீங்க. நான் பையை மூடிட்டேன். தட்ஸ் ஆல்.”“என்னடி உளர்ரே?”“டூ ப்ளஸ் டூ, ·போர். எலிமென்ட்டரி அரித்மடிக்.”இனம் தெரியாத கலவரம் அப்புசாமியின் வயிற்றில் பரோட்டா அடித்தது. “என்ன சொல்றே நீ?”“மிஸ்டர் கிரிமினல் ப்ரெய்ன்!” என்ற சீதாப்பாட்டி திடுமென ரம்யா கிருஷ்ணனாகி விட்டாள். முகத்திலும் குரலிலும் கடுமை பரவ. “ஆன்ஸ்ர் மை க்வெஸ்ச்சன். நோ பங்லிங்! வாட் மேட் யூ டு புட் ஆயில் தேர்? தட் டூ பர்ட்டிகுலர் நைட்டில்…”“சீதே… வந்து… வந்து…” அப்புசாமி தடுமாறினார். “ஏன், எனக்குப் பொறுப்பு இல்லையா? பொறுபோடு நான் செஞ்சேன்னுதானே ஐந்நூறு ரூபா தர்ரேன்னே?”“யூ வோன்ட் கெட் ஈவன் ·பைவ் பைஸே. அன்டர்ஸ்டாண்ட்? உங்க மூளை சரியான கிரிமினல் ப்ரெய்ன். சொல்லுங்க நிஜத்தை. ஏன் போட்டீங்க ஆயில்?”“வந்து… வந்து… சீதே, கேட் சத்தம் போட்டால் கண்ணராவியா, காதுராவியா இருக்குன்னுதான்.”“நோ.

 

       என் காதுலே பூ சுத்த வேண்டாம். வாட் இஸ் த எக்ஸாக்ட் மோடிவ் பிஹைண்ட் இட்… கமான். அவுட் வித் இட் மை டியர் சார்…”“வந்து… வந்து… சீதே நீ ஒரு பிசாசு.”“பிசாசோ… போயோ. நாய்களுக்காக நீங்களே ராத்திரி கேட்டைத் திறந்து விட்டிருக்கீங்க. கேட் திறக்கற சத்தம் கேட்டு நான் முழிச்சிக் கொண்டுடப் போறேன்னு கேட்டுக்கு எண்ணெய் போட்டிருக்கீங்க.”அப்புசாமி கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்ட எலி, கம்பியைச் சுரண்டிக்கொண்டு தடுமாறுவதைப் போலத் தடுமாறினார். “நான்… நான்… நான் ஒண்ணும் திறந்து விடவில்லை.”“டெ·பனெட்டாக நீங்களேதான். எத்தனை நாயிங்க உள்ளே வருதோ அத்தனை நாய்களுக்குக் கணக்குப் பண்ணி அலவன்ஸ் வாங்கறது உங்க மீன் மைன்ட்லே உதித்த வொர்ஸ்ட் பிளான். மரியாதையா ஒப்புக்குங்க.”“சீதே… அந்தச் சண்டிராணியின் கற்பைக் காக்கணும்னு கடமை உணர்ச்சியோடுதான் கதவை அதுக்கு மட்டும் திறந்து வெச்சேன்.

 

     ஒரு புறாவைக் காப்பாத்தறதுக்காகச் சிபிச் சக்கரவர்த்தி தன் தொடையையே பப்பாளிப் பழம் சீவற மாதிரி சீவிச் சீவித் தந்தான். நான் ஒரு இந்தியன். அந்த ரத்தம்தான் என் உடம்பிலே ஓடுது.”சிரித்தாள் சீதாப்பாட்டி. “உங்க உடம்பிலே சிபி ரத்தம் ஓடலே, மசால்தோசை ரத்தம்தான் ஓடறது.”சீதாப்பாட்டி காரைக் கிளப்பி விட்டாள்.“அடியே கியவி! ஒரு அஞ்சு ரூபாயாவது குடுத்துட்டுப் போடி. ஸிங்கள் டீக்காவது ஆகும்.” காரின் பின்னாலேயே சிறிது தூரம் வீணே விரைந்தார் அப்புசாமி.சண்டிராணி எதிர்ப் பக்கத்து பால் பூத் நிழலில் இருந்துக்கொண்டு ‘லுள்!” என்றது.அதன் விரிவுரையாவது: “பெரிசு! என்னை வெச்சு சம்பாதிக்கப் பார்த்தீங்க… முடியலியே. கெடுவான் கேடு நினைப்பான்.”.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.