LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- பாக்கியம் ராமசாமி

அப்புசாமியின் ஜு ஜு ஜி ஜீ!

 

அப்புசாமி தெற்காசிய நாடுகளால் சூழப்பட்டிருந்தார். அவரது இந்திய ரத்தம் ஜிவுஜிவென்று சூடேறிக் கொண்டிருந்தது.
இடம் : வேளச்சேரி பப்பள பளபள புதிய நீச்சல் குளம். நேரம் : மண்டை பிளக்கும் வெய்யில். அப்புசாமியின் கைகள் பரபரத்தன. வலப்பக்கம் பாகிஸ்தானை முறைத்தார். இடப்பக்கமிருந்த ஸ்ரீலங்காவை உறுத்து நோக்கினார். நேப்பாள், பூட்டான் ஆகியவற்றின் மீதும் கடுமையான பார்வையை ஏவினார். பங்களாதேஷையும் மாலத்தீவையும் கறாராகக் கவனித்தார்.
அவனவன் என்னமாக ஆட்டிக் கொண்டிருக்கிறான். வண்ண வண்ணத் தொளதொள சட்டைகளென்ன, கொடிகளென்ன, கத்தல் என்ன, கூவல் என்ன.
நம்ம இந்தியாவுக்கு மட்டும் வெறும் கத்தலுக்கும் வந்தது இந்தப் பஞ்சமோ? மற்ற நாடுகளைப் போல இந்தியாக்காரங்க தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தாமல் இருக்காங்களோன்னு அப்புசாமிக்கு அழுத்தமாகத் தோன்றிவிட்டது.
ஸ்ரீலங்காக்காரர் அவரது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது போல பட்டு ஜமுக்காளம் போல ஒரு மெகா ஸைஸ் சிம்மக்கொடியை ஆட்டியவாறு, “ஹாய் உஹீ ஹீ ஹீ!” என்று தமது நாட்டு நீச்சல் வீரரை ஊக்குவித்தார்.
இத்தனைக்கும் இன்னும் அந்தப் பேர்வழி அரங்கத்துக்குள் நுழையவே இல்லை.
மனுஷனுக்கு – அதுவும் ரசிகர்களுக்கு – உற்சாகம் வேணும். உற்சாகம் வேணும்னா கொடி வேணும்.
வந்தேமாதரம்னு கொடியைக் கையில் வைச்சுக் கத்திகிட்டே நூற்றுக் கணக்கான அடியை வாங்கிக் கொண்டு உயிரை விட்டான் திருப்பூர் குமரன். எப்படி முடிஞ்சது?
கொடி கையிலிருந்தாலே ஒரு வீரம், தைரியம், தெம்பு!
 
‘தாயின் மணிக்கொடி பாரீர்’னு டி.கே. பட்டம்மாப் பாட்டி அந்த நாளில் கம்பீரமாகப் பாடியது இன்றைக்கும் அவரது காதில் பாய்கிற மாதிரி இருந்தது.
அட அட! ‘நாமிருவரி’லே பேபி கமலா என்னமாக் கொடியைப் பிடிச்சுகிட்டு “மக்கான்.. மக்கான்… காந்திமக்கான்..” என்ற பிஞ்சு வெள்ளரிக்காய் மாதிரி ஆடுவாளே.
இந்தத் தெற்காசிய நீச்சல் போட்டியிலே இந்தியா ஜெயிக்கணும்னா, முதல்லே ஆட்டறதுக்குப் பெரீய கொடி வேணும்…
துத்துளியூண்டு தீவுக்காரங்களும் நாட்டுக்காரங்களும் இன்னா மாதிரி பெரீய பெரீய படுதாவைக் கொண்டு வந்து ஆட்டறாங்க…
அப்புசாமிக்கு இருப்பு  கொள்ளவில்லை.
“இந்தியாக்காரங்க சட்டையிலே குத்திக்கிற மாதிரி தம்மாத்தூண்டுக் கொடியை வெச்சுகிட்டு ஆட்டறாங்களே… ஏன் தம்பி, நம்ம நாடு ஜெயிக்கும்கிறியா?”
அருகிலிருந்த வாலிபனான பிரஸ் ரிப்போர்ட்டரிடம் அப்புசாமி அங்கலாய்த்தார்.
“நாம்ப ஷ்யூரா வருவோம்! சார்… ஸ்ரீலங்கா ஒண்ணுதான் கொஞ்சம் ·பைட் கொடுக்கும்” என்றார் ரிப்போர்ட்டர், காமெராவைச் சரி செய்துகொண்டே.
“உங்ககிட்டே எதுனாக் கொடி இருக்குமா?” என்று கவலையுடன் விசாரித்தார் அப்புசாமி.
“நீங்க வேணும்னா ஸ்டேடியத்து காரியதரிசியைக் கேட்டுப் பாருங்களேன்.”
‘நகர்ந்தால் இடம் போயிடுமே’ என்ற அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பன்னாட்டு நீச்சல் வீரர்களும் கபகபவென்று வந்து அழகிய குளத்தின் முன் நீந்தத் தயாராக நின்றார்கள். சங்கீதக்காரர் கதியுடன் சேரச் சிறு சதி செய்வது போல், சில நீச்சல்கள் குளத்தில் இறங்கித் தண்ணியை மேலே தெளித்துக் கொண்டனர். முழுகி எழுந்தனர். 
அப்புசாமியின் இடப்புறமிருந்த ஸ்ரீலங்காக்காரர்கள் மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டனர். நீரில் வீரர்கள் குதிப்பதற்குள்ளேயே அவர்களுக்குக் கோப்பை கிடைத்துவிட்டது போன்ற உற்சாகம்.
“ஹாய்… குக்குகுகூகூ…” என்று கொடியை ஆட்டியவாறு கூக்குரலிட்டனர்.
அப்புசாமிக்கு ரோஷம் வந்து விட்டது.
அவர்களுடைய குரலுக்கு எதிர்க் குரலில் பாடாவிட்டால் ‘எசப்பாட்டு புகழ்’ பாரதிராஜா பிறந்த இந்தத் தமிழ் மண்ணில் பிறந்து என்ன பிரயோசனம்?
தேசபக்தியும், தொண்டை சக்தியும் மேலிட்டு உணர்ச்சி வசப்பட்டவராக அருகிலிருந்த பிரஸ் போட்டோகிராபரிடம், “தம்பி! நாம்பளும் எதிர்க்கத்துத் கத்தணும்.. என்னப்பா கண்ராவி! ஒரு விசில் சத்தம்கூட ஜோரா வரலையே. நம்மகிட்டே நாலு பட்டாசு வெடிகூட இல்லையே. வாயாலே கத்தப் போறேன். நீயும் சேர்ந்து கத்துறியா?” என்று கூட்டணி சேர்க்கப் பார்த்தார்.
ஏதோ ஒரு பைத்தியத்துக்கு அருகே, தான் வந்து உட்கார்ந்துவிட்டதாக அந்தப் பத்திரிகையாளர் பயந்து, தனது நலத்தையும், தனது காமெராவின் நலத்தையும் கருதி விரைவாக வேறு வரிசைக்குப் போய் விட்டார்.
அதோ.. நீச்சல் வீரர்களை ஓரம் கட்டிப் பரிசோதிக்கிறார்கள்.
பங்களாதேஷ¤ம், மாலத்தீவும், இந்தியாவும், ஸ்ரீலங்காவும், நேப்பாளும், பூட்டானும், பாகிஸ்தானும் ஏதேதோ நம்பர்களில் வந்து நின்றாயிற்று.
ரசிகப் பெருமக்களில் 99.5 சதவிகிதத்தினருக்கு எந்த நம்பர் எந்தத் தேசம் என்று சாமி சத்தியமாகத் தெரியாது.
எல்லாரும் வந்து குவிந்ததற்குக் காரணம் – என்னவோ ரொம்ப நல்லா நீச்சல் குளம் கட்டியிருக்காங்களாமே, புச்சா இருக்கப்பவே பார்த்துடலாம் என்பதற்குத்தான் என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.
சில எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இந்த மாபெரும் பணியில் யார் யார் என்ன பலன் அடைந்திருப்பார்கள் என்று கணக்கிட்டனர்.
நானூறு மீட்டர் ரிலே பந்தயமாதலால் வீரர்கள் கரையைத் தொட்டுத் திரும்புவதும் மாற்று வீரர் உடனே பாய்ந்து புறப்படுவதாக நீச்சல் குளம் அமர்க்களப்பட்டது.
அப்புசாமியால் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.
“அதோ.. அஞ்சாம் நம்பர்தான் இந்தியா?” – யாரோ ஒருத்தர் கூவினார்.
ஸ்ரீலங்கா வீரர் ஐந்தாம் நம்பரை விஞ்சப் பார்த்தார். அப்புசாமியின் அருகிலிருந்த ஸ்ரீலங்கா ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய், “அப்! அப்! கமான்! கமான்! ப்ரேவோ! கெ கெ கெ கெ… கி கி கி கி கி! ஹ¤ரா.. ஹ¤ரா” என்று பெரீய கொடியை ஆட்டி ஆர்ப்பரித்தனர். 
அப்புசாமி தேசபக்தி பொங்கியவராக சடாரென்று ஒரு காரியம் செய்தார். கபாலென்று எழுந்தார். தான் கட்டியிருந்த வேட்டியை உருவிக் கொண்டார். அருகில் பாதை வழிக்காக நட்டிருந்த நீண்ட கழியைப் பறித்தார்.
வேட்டியைக் கழியில் கட்டிக் கொண்டார்.
தான் சகிக்க முடியாத அண்டர்வேருடன் இருக்கிறோம் என்பதையே மறந்தார்.
அப்புசாமி ஒரு நாற்காலிமீது ஜிங்கென்று தாவி ஏறினார்.
கைக்கு வேண்டியது ஒரு கொடி!
அப்புசாமி கொடியைப் பற்றியவாறு ஐந்தாம் நம்பரைப் பார்த்தார்.
நிஜமாகவே மேலும் கொஞ்சம் பின்னடைந்திருந்தார் ஐந்தாம் நம்பர்.
ஸ்ரீலங்கா வீரரோ சில அடிகள் முன்னேறிவிட்டார். கடைசிக் கட்டம். ·பினிஷ் செய்ய இன்னும் சில மீட்டர் தூரமே இருந்தது.
ஸ்ரீலங்கா விசிறிகள், “ஹோ ஹோ ஹோ! கமான். கெலு கெலு கிகே! தொலு தொலு பிகே” என்று என்னவோ கத்திக் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தினர்.
அப்புசாமி “இது பொறுப்பதில்லை தம்பி!” என்று பொங்கினார். பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு, “ஏய் அஞ்சு! அஞ்சு! அஞ்சு! வுடாதே!” என்றவர் ஸ்ரீலங்கா விசிறிகளுக்கு எதிர்க்குரல் எழுப்புபவராக “ஜூஜு ஜிஜீ!” என்று கத்தினார்.
ஸ்ரீலங்கா, “ஹோ ககககா! கமான், ·பினிஷ் இட்! பூலலல லகா!” என்று கூவியது. 
அப்புசாமி, “டாய்! என்கிட்டயாடா மோதறீங்க… ஜூ ஜு ஜி ஜீண ஏய் அஞ்சாம் நம்பர்! ஜூ ஜு ஜி ஜீ! வுடாதே நைனா வுடாதே! ஜூ ஜுஜி ஜீ!” என்று பெருங்குரலில் கூவினார்.
வெள்ளை வேட்டிக் கொடியை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆட்டியவாறு அவர்கூவியது பலரது கவனத்தை – முக்கியமாக இந்திய நீச்சல் வீரரின் கவனத்தைக் கவர்ந்தது. தளர்ந்திருந்த வீரரிடம் திடீரெனப் புத்துணர்ச்சி ஏற்பட்டு, காவேரி திறந்து விடப்பட்டு புதுவெள்ளம் பிரவேசித்தது போன்ற உற்சாகம் உள்ளே பாய்ந்தது.
அப்புசாமியின் “ஜூ ஜு ஜி ஜீ!” கோஷம் எல்லா ரசிகர்களுக்கும் தொற்றிக்கொண்டது!
“அன்டர்வேரோடு ஒரு கிழவன் அட்டகாசம் பண்றானய்யா, வேட்டியை அவுத்துக் கொடிகாட்டிகிட்டு. ஓடுய்யா… ஏதாவது கிறுக்கா இருக்கப் போவுது.” – வி.வி.ஐ.பி. பிரமுகர் பகுதியில் இருந்த காவல் அதிகாரி தனது உதவியாளர்களை விரட்டினார்.
“ஒரு கிழவன்! அட்டகாசம்!”
வி.வி.ஐ.பி.க்களில் ஒருத்தராக அமர்ந்து நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த சீதாப்பாட்டி திடுக்கிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தாள்.
“மைகாட்!” என்று தலையில் கை வைத்துக்கொண்டு கணவரின் கண்ணில்படாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.
“ஹெள கம்? இது இங்கே எப்படி வந்து தொலைந்தது – மானத்தை வாங்க!”
அருகிலிருந்த காரியதரிசி அகல்யா சந்தானத்தை சீதாப்பாட்டி உறுத்தப் பார்த்தாள். “அகல்யா! ஐ டோல்ட் யூ நாட் டு கிவ் எனி டிக்கெட்ஸ் டு ஹிம்!”
அகல்யா குற்றவாளிபோல விழித்தவள், “மன்னிச்சுக்குங்க பிரசிடெண்ட்ஜி! நான் அவருக்கு எந்தப் பாஸ¤ம் தரலை. பொன்னம்மா டேவிட்கிட்டே நம்ம பா.மு.க.வுக்காக வந்த ப்ரெஸ் பாஸ் ஒன்று இருக்கிறது. வேணும்னா முயற்சி பண்ணிப்பாருங்கன்னு தட்டிக் கழித்தேன். எப்படியோ வாங்கிட்டு வந்துட்டார் போலிருக்கு.” 
சீதாப்பாட்டி அதற்கப்புறம் வீடு திரும்பும்வரை காரில் அகல்யாவிடம் ஒரு வார்தையும் பேசவில்லை.
அப்புசாமிக்குப் புதுவிதமாக, ஆயுளுக்கும் அவர் மறக்க முடியாதபடி என்ன தண்டனை கொடுப்பது, அவரது அலவன்சில் அதிகபட்சம் எத்தனை சதவிகிதம் கட் செய்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
சீதாப்பாட்டி வீடு திரும்பியபோது வீடு ஜே ஜேவென்று ஒரே கலகலப்பாக இருந்தது. அப்புசாமி மாலையும் கழுத்துமாக இருந்தார். அவரருகே இன்னொரு மாலையும் இன்னொரு கழுத்துமாக இந்திய நீச்சல் வீரர்!
அப்புசாமி சீதாப்பாட்டியைப் பார்த்ததும், “அதோ எங்க வீட்டுச் சீதேக் கியவி! இப்படி வாம்மே! ஐயாவோட மாலையைப் பார்த்தியா? மாலை மட்டுமில்லே… இந்தக் கேக்கும் கூட எனக்குத்தான்…”
சீதாப்பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை. செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, “ஹார்ட்டி கன்கிராஜுலேஷன்ஸ் டைடியர் யங்மேன்! இந்தியாவுக்குப் பெருமை தேடிக் கொடுத்துட்டீங்க…” என்ற நீச்சல் சாம்பியனைக் கை குலுக்கினாள்.
அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலுமாக, “எல்லாம் உங்கள் கணவரால்தான்! அவர் மட்டும் ஜூ ஜு ஜி ஜீ என்ற மந்திரத்தைச் சொல்லாதிருந்தால் நான் நிச்சயம் தோற்றுத்தான் போயிருப்பேன்!” என்றார்.
“ஓ” 
“ஜுஜிஜீ என் இனிய இளம் மனைவியின் பெயர்! கல்யாணமாகி ஆறு மாசமே ஆகிறது. சதா காலமும் நான் நீச்சல் நீச்சல் என்று நீச்சல் பயிற்சிக்கே என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதால் ஜுஜிஜீக்கு என் மீது மகாக் கோபம். என்னை டைவர்ஸ் செய்துவிடப் போவதாகக் கோபித்துக் கொண்டு தன் பிறந்தகம் போய் விட்டாள். நான் உற்சாகம் இழந்து போய்விட்டேன். உங்கள் கணவர் வெள்ளைக் கொடியைப் பெரிதாக ஆட்டியவாறு என் இனிய மனைவியின் பெயரை உரக்கக் கூவியதும் – அவள் சமாதானமாகி விட்டாள் என்பதை அறிந்தேன். கோபித்துக்கொண்டு போனாளே தவிர அவளும் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து என் நீச்சலைக் கவனித்துக் கொண்டிருந்தது என் அதிர்ஷ்டமே. ப்ளீஸ்… மீட் மை ஒய்·ப்…” என்று தன் கோப மனைவியையும் சீதாப்பாட்டிக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்புசாமியை மேலும் பாராட்டினார்.
“இந்த என் வெற்றிக்குக் காரணம் பூராப் பூரா உங்கள் கணவர்தான். தக்க சமயத்தில் என் மனைவியின் பெயரைக் கூவியவாறு வெள்ளைச் சமாதானக் கொடியை ஆட்டியிராவிட்டால் அவள் சமாதானமானதே எனக்குத் தெரிந்திருக்காது. நானும் உற்சாகமாக நீந்தியிருக்க முடியாது.”
சீதாப்பாட்டி விக்கித்துப் போய் நின்றாள்.
“இன்னாடி கிழவி! கேக் சாப்புடுடி கேக்! பூனை கண்ணை மூடிக்கிட்டாப் பூலோகம் இருண்டு போயிடாதுடி!”
“ஹாட்ஸ் ஆ·ப் டு யூ” என்றாள் சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டு. “சில சமயம் ப்ளைண்ட் காட்ஸ் விட்டத்தில் சரியாகப் பாய்வது உண்டு!”
“போடி பொறாமைப் பிண்டம்!” என்று கொடுத்த கேக்கை மனைவியின் கையிலிருந்து வெடுக்கென்று பறித்துக் கொண்டார் அப்புசாமி.

          அப்புசாமி தெற்காசிய நாடுகளால் சூழப்பட்டிருந்தார். அவரது இந்திய ரத்தம் ஜிவுஜிவென்று சூடேறிக் கொண்டிருந்தது.இடம் : வேளச்சேரி பப்பள பளபள புதிய நீச்சல் குளம். நேரம் : மண்டை பிளக்கும் வெய்யில். அப்புசாமியின் கைகள் பரபரத்தன. வலப்பக்கம் பாகிஸ்தானை முறைத்தார். இடப்பக்கமிருந்த ஸ்ரீலங்காவை உறுத்து நோக்கினார். நேப்பாள், பூட்டான் ஆகியவற்றின் மீதும் கடுமையான பார்வையை ஏவினார். பங்களாதேஷையும் மாலத்தீவையும் கறாராகக் கவனித்தார்.அவனவன் என்னமாக ஆட்டிக் கொண்டிருக்கிறான். வண்ண வண்ணத் தொளதொள சட்டைகளென்ன, கொடிகளென்ன, கத்தல் என்ன, கூவல் என்ன.நம்ம இந்தியாவுக்கு மட்டும் வெறும் கத்தலுக்கும் வந்தது இந்தப் பஞ்சமோ? மற்ற நாடுகளைப் போல இந்தியாக்காரங்க தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தாமல் இருக்காங்களோன்னு அப்புசாமிக்கு அழுத்தமாகத் தோன்றிவிட்டது.

 

        ஸ்ரீலங்காக்காரர் அவரது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது போல பட்டு ஜமுக்காளம் போல ஒரு மெகா ஸைஸ் சிம்மக்கொடியை ஆட்டியவாறு, “ஹாய் உஹீ ஹீ ஹீ!” என்று தமது நாட்டு நீச்சல் வீரரை ஊக்குவித்தார்.இத்தனைக்கும் இன்னும் அந்தப் பேர்வழி அரங்கத்துக்குள் நுழையவே இல்லை.மனுஷனுக்கு – அதுவும் ரசிகர்களுக்கு – உற்சாகம் வேணும். உற்சாகம் வேணும்னா கொடி வேணும்.வந்தேமாதரம்னு கொடியைக் கையில் வைச்சுக் கத்திகிட்டே நூற்றுக் கணக்கான அடியை வாங்கிக் கொண்டு உயிரை விட்டான் திருப்பூர் குமரன். எப்படி முடிஞ்சது?கொடி கையிலிருந்தாலே ஒரு வீரம், தைரியம், தெம்பு! ‘தாயின் மணிக்கொடி பாரீர்’னு டி.கே. பட்டம்மாப் பாட்டி அந்த நாளில் கம்பீரமாகப் பாடியது இன்றைக்கும் அவரது காதில் பாய்கிற மாதிரி இருந்தது.அட அட! ‘நாமிருவரி’லே பேபி கமலா என்னமாக் கொடியைப் பிடிச்சுகிட்டு “மக்கான்.. மக்கான்… காந்திமக்கான்..” என்ற பிஞ்சு வெள்ளரிக்காய் மாதிரி ஆடுவாளே.இந்தத் தெற்காசிய நீச்சல் போட்டியிலே இந்தியா ஜெயிக்கணும்னா, முதல்லே ஆட்டறதுக்குப் பெரீய கொடி வேணும்…துத்துளியூண்டு தீவுக்காரங்களும் நாட்டுக்காரங்களும் இன்னா மாதிரி பெரீய பெரீய படுதாவைக் கொண்டு வந்து ஆட்டறாங்க…அப்புசாமிக்கு இருப்பு  கொள்ளவில்லை.

 

 

       “இந்தியாக்காரங்க சட்டையிலே குத்திக்கிற மாதிரி தம்மாத்தூண்டுக் கொடியை வெச்சுகிட்டு ஆட்டறாங்களே… ஏன் தம்பி, நம்ம நாடு ஜெயிக்கும்கிறியா?”அருகிலிருந்த வாலிபனான பிரஸ் ரிப்போர்ட்டரிடம் அப்புசாமி அங்கலாய்த்தார்.“நாம்ப ஷ்யூரா வருவோம்! சார்… ஸ்ரீலங்கா ஒண்ணுதான் கொஞ்சம் ·பைட் கொடுக்கும்” என்றார் ரிப்போர்ட்டர், காமெராவைச் சரி செய்துகொண்டே.“உங்ககிட்டே எதுனாக் கொடி இருக்குமா?” என்று கவலையுடன் விசாரித்தார் அப்புசாமி.“நீங்க வேணும்னா ஸ்டேடியத்து காரியதரிசியைக் கேட்டுப் பாருங்களேன்.”‘நகர்ந்தால் இடம் போயிடுமே’ என்ற அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பன்னாட்டு நீச்சல் வீரர்களும் கபகபவென்று வந்து அழகிய குளத்தின் முன் நீந்தத் தயாராக நின்றார்கள். சங்கீதக்காரர் கதியுடன் சேரச் சிறு சதி செய்வது போல், சில நீச்சல்கள் குளத்தில் இறங்கித் தண்ணியை மேலே தெளித்துக் கொண்டனர். முழுகி எழுந்தனர். அப்புசாமியின் இடப்புறமிருந்த ஸ்ரீலங்காக்காரர்கள் மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டனர். நீரில் வீரர்கள் குதிப்பதற்குள்ளேயே அவர்களுக்குக் கோப்பை கிடைத்துவிட்டது போன்ற உற்சாகம்.

 

     “ஹாய்… குக்குகுகூகூ…” என்று கொடியை ஆட்டியவாறு கூக்குரலிட்டனர்.அப்புசாமிக்கு ரோஷம் வந்து விட்டது.அவர்களுடைய குரலுக்கு எதிர்க் குரலில் பாடாவிட்டால் ‘எசப்பாட்டு புகழ்’ பாரதிராஜா பிறந்த இந்தத் தமிழ் மண்ணில் பிறந்து என்ன பிரயோசனம்?தேசபக்தியும், தொண்டை சக்தியும் மேலிட்டு உணர்ச்சி வசப்பட்டவராக அருகிலிருந்த பிரஸ் போட்டோகிராபரிடம், “தம்பி! நாம்பளும் எதிர்க்கத்துத் கத்தணும்.. என்னப்பா கண்ராவி! ஒரு விசில் சத்தம்கூட ஜோரா வரலையே. நம்மகிட்டே நாலு பட்டாசு வெடிகூட இல்லையே. வாயாலே கத்தப் போறேன். நீயும் சேர்ந்து கத்துறியா?” என்று கூட்டணி சேர்க்கப் பார்த்தார்.ஏதோ ஒரு பைத்தியத்துக்கு அருகே, தான் வந்து உட்கார்ந்துவிட்டதாக அந்தப் பத்திரிகையாளர் பயந்து, தனது நலத்தையும், தனது காமெராவின் நலத்தையும் கருதி விரைவாக வேறு வரிசைக்குப் போய் விட்டார்.அதோ.. நீச்சல் வீரர்களை ஓரம் கட்டிப் பரிசோதிக்கிறார்கள்.பங்களாதேஷ¤ம், மாலத்தீவும், இந்தியாவும், ஸ்ரீலங்காவும், நேப்பாளும், பூட்டானும், பாகிஸ்தானும் ஏதேதோ நம்பர்களில் வந்து நின்றாயிற்று.

 

        ரசிகப் பெருமக்களில் 99.5 சதவிகிதத்தினருக்கு எந்த நம்பர் எந்தத் தேசம் என்று சாமி சத்தியமாகத் தெரியாது.எல்லாரும் வந்து குவிந்ததற்குக் காரணம் – என்னவோ ரொம்ப நல்லா நீச்சல் குளம் கட்டியிருக்காங்களாமே, புச்சா இருக்கப்பவே பார்த்துடலாம் என்பதற்குத்தான் என்று சிலர் பேசிக் கொண்டார்கள்.சில எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இந்த மாபெரும் பணியில் யார் யார் என்ன பலன் அடைந்திருப்பார்கள் என்று கணக்கிட்டனர்.நானூறு மீட்டர் ரிலே பந்தயமாதலால் வீரர்கள் கரையைத் தொட்டுத் திரும்புவதும் மாற்று வீரர் உடனே பாய்ந்து புறப்படுவதாக நீச்சல் குளம் அமர்க்களப்பட்டது.அப்புசாமியால் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.“அதோ.. அஞ்சாம் நம்பர்தான் இந்தியா?” – யாரோ ஒருத்தர் கூவினார்.ஸ்ரீலங்கா வீரர் ஐந்தாம் நம்பரை விஞ்சப் பார்த்தார். அப்புசாமியின் அருகிலிருந்த ஸ்ரீலங்கா ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய், “அப்! அப்! கமான்! கமான்! ப்ரேவோ! கெ கெ கெ கெ… கி கி கி கி கி! ஹ¤ரா.. ஹ¤ரா” என்று பெரீய கொடியை ஆட்டி ஆர்ப்பரித்தனர். 

 

      அப்புசாமி தேசபக்தி பொங்கியவராக சடாரென்று ஒரு காரியம் செய்தார். கபாலென்று எழுந்தார். தான் கட்டியிருந்த வேட்டியை உருவிக் கொண்டார். அருகில் பாதை வழிக்காக நட்டிருந்த நீண்ட கழியைப் பறித்தார்.வேட்டியைக் கழியில் கட்டிக் கொண்டார்.தான் சகிக்க முடியாத அண்டர்வேருடன் இருக்கிறோம் என்பதையே மறந்தார்.அப்புசாமி ஒரு நாற்காலிமீது ஜிங்கென்று தாவி ஏறினார்.கைக்கு வேண்டியது ஒரு கொடி!அப்புசாமி கொடியைப் பற்றியவாறு ஐந்தாம் நம்பரைப் பார்த்தார்.நிஜமாகவே மேலும் கொஞ்சம் பின்னடைந்திருந்தார் ஐந்தாம் நம்பர்.ஸ்ரீலங்கா வீரரோ சில அடிகள் முன்னேறிவிட்டார். கடைசிக் கட்டம். ·பினிஷ் செய்ய இன்னும் சில மீட்டர் தூரமே இருந்தது.ஸ்ரீலங்கா விசிறிகள், “ஹோ ஹோ ஹோ! கமான். கெலு கெலு கிகே! தொலு தொலு பிகே” என்று என்னவோ கத்திக் கூச்சலிட்டு உற்சாகப்படுத்தினர்.அப்புசாமி “இது பொறுப்பதில்லை தம்பி!” என்று பொங்கினார். பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு, “ஏய் அஞ்சு! அஞ்சு! அஞ்சு! வுடாதே!” என்றவர் ஸ்ரீலங்கா விசிறிகளுக்கு எதிர்க்குரல் எழுப்புபவராக “ஜூஜு ஜிஜீ!” என்று கத்தினார்.ஸ்ரீலங்கா, “ஹோ ககககா! கமான், ·பினிஷ் இட்! பூலலல லகா!” என்று கூவியது. அப்புசாமி, “டாய்! என்கிட்டயாடா மோதறீங்க… ஜூ ஜு ஜி ஜீண ஏய் அஞ்சாம் நம்பர்! ஜூ ஜு ஜி ஜீ! வுடாதே நைனா வுடாதே! ஜூ ஜுஜி ஜீ!” என்று பெருங்குரலில் கூவினார்.வெள்ளை வேட்டிக் கொடியை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஆட்டியவாறு அவர்கூவியது பலரது கவனத்தை – முக்கியமாக இந்திய நீச்சல் வீரரின் கவனத்தைக் கவர்ந்தது.

 

       தளர்ந்திருந்த வீரரிடம் திடீரெனப் புத்துணர்ச்சி ஏற்பட்டு, காவேரி திறந்து விடப்பட்டு புதுவெள்ளம் பிரவேசித்தது போன்ற உற்சாகம் உள்ளே பாய்ந்தது.அப்புசாமியின் “ஜூ ஜு ஜி ஜீ!” கோஷம் எல்லா ரசிகர்களுக்கும் தொற்றிக்கொண்டது!“அன்டர்வேரோடு ஒரு கிழவன் அட்டகாசம் பண்றானய்யா, வேட்டியை அவுத்துக் கொடிகாட்டிகிட்டு. ஓடுய்யா… ஏதாவது கிறுக்கா இருக்கப் போவுது.” – வி.வி.ஐ.பி. பிரமுகர் பகுதியில் இருந்த காவல் அதிகாரி தனது உதவியாளர்களை விரட்டினார்.“ஒரு கிழவன்! அட்டகாசம்!”வி.வி.ஐ.பி.க்களில் ஒருத்தராக அமர்ந்து நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த சீதாப்பாட்டி திடுக்கிட்டுப் பின்புறமாகத் திரும்பிப் பார்த்தாள்.“மைகாட்!” என்று தலையில் கை வைத்துக்கொண்டு கணவரின் கண்ணில்படாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.“ஹெள கம்? இது இங்கே எப்படி வந்து தொலைந்தது – மானத்தை வாங்க!”அருகிலிருந்த காரியதரிசி அகல்யா சந்தானத்தை சீதாப்பாட்டி உறுத்தப் பார்த்தாள். “அகல்யா! ஐ டோல்ட் யூ நாட் டு கிவ் எனி டிக்கெட்ஸ் டு ஹிம்!”அகல்யா குற்றவாளிபோல விழித்தவள், “மன்னிச்சுக்குங்க பிரசிடெண்ட்ஜி! நான் அவருக்கு எந்தப் பாஸ¤ம் தரலை.

 

         பொன்னம்மா டேவிட்கிட்டே நம்ம பா.மு.க.வுக்காக வந்த ப்ரெஸ் பாஸ் ஒன்று இருக்கிறது. வேணும்னா முயற்சி பண்ணிப்பாருங்கன்னு தட்டிக் கழித்தேன். எப்படியோ வாங்கிட்டு வந்துட்டார் போலிருக்கு.” சீதாப்பாட்டி அதற்கப்புறம் வீடு திரும்பும்வரை காரில் அகல்யாவிடம் ஒரு வார்தையும் பேசவில்லை.அப்புசாமிக்குப் புதுவிதமாக, ஆயுளுக்கும் அவர் மறக்க முடியாதபடி என்ன தண்டனை கொடுப்பது, அவரது அலவன்சில் அதிகபட்சம் எத்தனை சதவிகிதம் கட் செய்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.சீதாப்பாட்டி வீடு திரும்பியபோது வீடு ஜே ஜேவென்று ஒரே கலகலப்பாக இருந்தது. அப்புசாமி மாலையும் கழுத்துமாக இருந்தார். அவரருகே இன்னொரு மாலையும் இன்னொரு கழுத்துமாக இந்திய நீச்சல் வீரர்!அப்புசாமி சீதாப்பாட்டியைப் பார்த்ததும், “அதோ எங்க வீட்டுச் சீதேக் கியவி! இப்படி வாம்மே! ஐயாவோட மாலையைப் பார்த்தியா? மாலை மட்டுமில்லே… இந்தக் கேக்கும் கூட எனக்குத்தான்…”சீதாப்பாட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

       செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, “ஹார்ட்டி கன்கிராஜுலேஷன்ஸ் டைடியர் யங்மேன்! இந்தியாவுக்குப் பெருமை தேடிக் கொடுத்துட்டீங்க…” என்ற நீச்சல் சாம்பியனைக் கை குலுக்கினாள்.அவர் இந்தியிலும் ஆங்கிலத்திலுமாக, “எல்லாம் உங்கள் கணவரால்தான்! அவர் மட்டும் ஜூ ஜு ஜி ஜீ என்ற மந்திரத்தைச் சொல்லாதிருந்தால் நான் நிச்சயம் தோற்றுத்தான் போயிருப்பேன்!” என்றார்.“ஓ” “ஜுஜிஜீ என் இனிய இளம் மனைவியின் பெயர்! கல்யாணமாகி ஆறு மாசமே ஆகிறது. சதா காலமும் நான் நீச்சல் நீச்சல் என்று நீச்சல் பயிற்சிக்கே என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டதால் ஜுஜிஜீக்கு என் மீது மகாக் கோபம். என்னை டைவர்ஸ் செய்துவிடப் போவதாகக் கோபித்துக் கொண்டு தன் பிறந்தகம் போய் விட்டாள். நான் உற்சாகம் இழந்து போய்விட்டேன். உங்கள் கணவர் வெள்ளைக் கொடியைப் பெரிதாக ஆட்டியவாறு என் இனிய மனைவியின் பெயரை உரக்கக் கூவியதும் – அவள் சமாதானமாகி விட்டாள் என்பதை அறிந்தேன்.

 

        கோபித்துக்கொண்டு போனாளே தவிர அவளும் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து என் நீச்சலைக் கவனித்துக் கொண்டிருந்தது என் அதிர்ஷ்டமே. ப்ளீஸ்… மீட் மை ஒய்·ப்…” என்று தன் கோப மனைவியையும் சீதாப்பாட்டிக்கு அறிமுகப்படுத்திவிட்டு அப்புசாமியை மேலும் பாராட்டினார்.“இந்த என் வெற்றிக்குக் காரணம் பூராப் பூரா உங்கள் கணவர்தான். தக்க சமயத்தில் என் மனைவியின் பெயரைக் கூவியவாறு வெள்ளைச் சமாதானக் கொடியை ஆட்டியிராவிட்டால் அவள் சமாதானமானதே எனக்குத் தெரிந்திருக்காது. நானும் உற்சாகமாக நீந்தியிருக்க முடியாது.”சீதாப்பாட்டி விக்கித்துப் போய் நின்றாள்.“இன்னாடி கிழவி! கேக் சாப்புடுடி கேக்! பூனை கண்ணை மூடிக்கிட்டாப் பூலோகம் இருண்டு போயிடாதுடி!”“ஹாட்ஸ் ஆ·ப் டு யூ” என்றாள் சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டு. “சில சமயம் ப்ளைண்ட் காட்ஸ் விட்டத்தில் சரியாகப் பாய்வது உண்டு!”“போடி பொறாமைப் பிண்டம்!” என்று கொடுத்த கேக்கை மனைவியின் கையிலிருந்து வெடுக்கென்று பறித்துக் கொண்டார் அப்புசாமி.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.