LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

அரைத்து விட்ட வெங்காய சாம்பார் (diameter grind onion sambar)

தேவையானவை :


துவரம் பருப்பு - 200 கிராம்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தேங்காய் துருவியது - அரை மூடி

கருப்பு எள் - 2 ஸ்பூன்

தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)

மிளகாய் வற்றல் - 6

புளி - எலுமிச்சை அளவு

வெந்தயம் - அரை ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 3 (கீறியது)

எண்ணெய் - 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 200 கிராம் (உரித்தது)

மஞ்சள் பொடி - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு


செய்முறை:


1.முதலில் ஒரு குக்கரில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.வேக வைத்த பருப்பை மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும்.வெறும் கடாயில் எள்ளை வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். 

2.அதே கடாயில் சிறிது எண்ணெயில் மிளகாய் வற்றல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு வறுத்துக் கொள்ளவும். கடைசியாக தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.எள்ளை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். மற்ற வறுத்த தேங்காய், மிளகாய் வற்றல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.


3.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து சிறிது வதக்கி அரைத்த தேங்காய் மசாலாவைப் போட்டு கிளறவும்.நன்றாகக் கிளறியதும் கரைத்த புளியை விட்டு உப்பு சேர்த்து மேலும் மூடி சிறிது கொதிக்க விட்டு அதனோடு கடைந்த பருப்பையும் சேர்த்து மீண்டும் சிறிது கொதிக்க விட்டு எள்ளு பொடி தூவி இறக்கவும்.


4.மீதி எண்ணெயை கடாயில் விட்டுக் கடுகு, வெந்தயம், 2 மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுவையான அரைத்து விட்ட வெங்காய சாம்பார் தயார். 

diameter grind onion sambar

Ingredients for diameter grind onion sambar:

 

Red Gram-200g

Bengal Gram (Split)-2 tsp

Black Gram-1 Spoon

Grated Coconut-1/2 Cup

Black Sesame-2 tsp

Tomato-100 g (Chopped)

Dry Chilly-6

Tamarind-Lemon Size

Fenugreek-1/2 Spoon

Mustard-1 Spoon

Salt-as Needed

Green Chilly-3 (Peeled)

Oil-4 tsp

Small Onion-200g (Peeled)

Turmeric Powder-Little

Asafoetida-Little

 

Procedure to make diameter grind onion sambar:

 

1. In a cooker, add red gram along with turmeric powder and asafoetida and allow to boil well. Then mash the boiled dhal and keep aside. Fry the sesame in a pan, until get the smell.

2. Heat oil in a pan, add dry chilly,bengal gram, black gram and fry well. Then add coconut and fry till get golden color. Grind the sesame coarsely. Then grind the fried coconut, dry chilly, bengal gram and black gram along with water.

3. Heat oil in a pan, add onion, green chilly and saute well. Then add tomato and fry for a while and then add grinded coconut paste and stir well. Then add tamarind juice and cover the pan and let to boil. Then add mashed dhal and boil for a while. Finally garnish with sesame powder and remove from flame.

4. Heat the remaining oil in another pan, add mustard, fenugreek, 2 dry chilly, curry leaves and let to splutter and then put over the sambar. Finally garnish with coriander leaves and remove from flame. Tasty sambar is ready.

 

 

 

 

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.