LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF

சிக்கலான் பிரசவத்தை கூட எளிதாக்க கூடிய புதிய கருவி - அர்ஜென்டினா கார் மெக்கானிக் கண்டுபிடிப்பு !!

சிக்கலான பிரசவத்தை கூட எளிதாக்கும் நவீன கருவியை அர்ஜென்டினாவை சேர்ந்த, கார் மெக்கானிக் ஜார்ஜ் ஓ டன் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது. 

 

அர்ஜென்டினாவை சேர்ந்த 59 வயது கார் மெக்கானிக், ஜார்ஜ் ஓடன். இவர் தனது நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது ஒயின் பாட்டிலின் உள்ளே கார்க் போய்விட்டது. பாட்டிலின் உள்ள சென்ற கார்க்கை, பாட்டில் உடையாமல் வெளியில் எடுப்பதாக ஜார்ஜ் ஓடன் நண்பர்களிடம் பந்தயம் ஒன்றை கட்டினர். சிறிது நேர சிந்தனைக்கு பிறகு, பாட்டிலின் உள்ளே பிளாஸ்டிக் பையை நுழைத்த ஓ டன், பின் ஊதிப் பெரிதாக்கியதில் கார்க் பிளாஸ்டிக் பைக்குள் மாட்டிக் கொண்டு, இழுத்ததும் அழகாக வெளியில் வந்துவிட்டது. இதனால் பந்தயத்தில் வெற்றியும் கண்டார். அன்று இரவு தூக்கத்திலிருந்து விழித்த ஜார்ஜ் தனது மனைவியிடம் சம்பவத்தை விவரித்த பின் குழந்தையை இந்த பிளாஸ்டிக் பை முறையில் வெளியில் எடுப்பது எளிதான பிரசவ முறையாக இருக்கும் என்று கூறினார். அடுத்தநாள் ஜார்ஜ், தனது நண்பருடன் ஒரு மகப்பேறு மருத்துவரை சந்தித்து புதிய கருவியை பற்றி கூறினார். அந்த மருத்துவர் ஜார்ஜின் புதிய கருவி செயல்பாட்டை தனது மருத்துவமனையில் சோதனை செய்துபார்க்க உதவினார்.

 

இந்த கருவியின் வெற்றிகரமான செயல்பாட்டை அடுத்து, அந்த மருத்துவர் யூடியூப் இணையதளத்தில் சோதனையை வெளியிட்டு பின் ஜார்ஜை 2008ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் மரியோ மரியால்டி யை சந்தித்து பேச வைத்தார். காப்பி குடிக்கும் நேரத்தில் 10 நமிடங்கள் தன்னை சந்திக்க அனுமதி அளித்த டாக்டர் மரியோ கண்டுபிடிப்பை பார்த்து இரண்டு மணிநேரம் ஜார்ஜ் உடன் பேசினார். இதுகுறித்து டாக்டர் மரியோ கூறியதாவது, மகப்பேறு காலங்களில் பெண்கள் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்று பிரசவ நேரத்தில் குழந்தை கருப்பைக்குள் சிக்கிக்கொள்வது. இதனால் குழந்தை அறுவை சிகிச்சை மூலமாக வெளியில் எடுக்கப்படுகிறது. இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவர் என்ன பிரச்னை, அதை எப்படி சரிசெய்வது என்று சரியாக முடிவெடுக்கவில்லை என்றால், தாயும் சேயும் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 

 

சிக்கலான பிரசவ நேரத்தில் உபயோகப்படுத்தும் வகையில் எளிய கருவி இருந்தால் மருத்துவர்கள் பிரசவங்களை எளிதாகவும், சீக்கிரமாகவும் செய்யமுடியும். ஓடன் கருவி(Odón Device) என்று பெயரிடப்பட்ட இந்த கருவி அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் ஓ டன் என்ற கார் மெக்கானிக் கண்டுபிடித்தது. இதன்மூலம் எளிதாக பிரசவம் நடக்க கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவர்கள் உதவ முடியும்.  இதில் கையால் பிடிக்கும் வகையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பை உள்ளது. உராய்வை குறைக்க லூப்ரிகன்ட் செலுத்தப்பட்ட இந்த பை காற்று நிரப்பும் வகையில் உள்ளது. இதன்மூலம்  சிக்கலான பிரசவத்தில் குழந்தை வெளிவராத போது குழந்தையின் தலையை சுற்றி இந்த பிளாஸ்டிக் பையை வைத்து காற்றால் நிரப்பவேண்டும். இதனால் தலையை சுற்றி பிளாஸ்டிக் பை கெட்டியாக பிடித்துக்கொள்ளும், பின்னர் மெதுவாக வெளியில் இழுத்தால் குழந்தை பத்திரமாக பிரசவிக்கப்படும். 

 

இதன்மூலம் மிக சிக்கலான பிரசவங்கள் கூட எளிதாக நடைபெறுகிறது. இந்த கருவியை உலக சுகாதார நிறுவனம் அர்ஜென்டினா கர்ப்பிணி பெண்களிடம் சோதித்துப் பார்த்ததில், சுகமான பிரசவம் நடந்துள்ளது. இதனால் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் குறைந்தன. விரைவில் இந்த ஓடன் கருவி இந்தியா, சீனா, அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.  

by Swathi   on 18 Nov 2013  0 Comments
Tags: Birthing Tool   Odón Device   சிக்கலான் பிரசவம்   சுக பிரசவம்   ஓடன் கருவி        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.