அரிக்கமேட்டில் ஆரம்பிக்கிறது அகழாய்வு ,அருங்காட்சியகம் அமைக்கவும் புதுவை அரசு திட்டம்
அரிக்கமேடு பகுதியானது புதுவை மாநிலத்தின் அரியாங்குப்பம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அரிக்கமேடு பழமைவாய்ந்த துறைமுக பகுதியாகும். இத்துறைமுகத்திலிருந்து ரோம,கிரேக்க நாடுகளுடன் வர்த்தகம் நடைபெற்று இருப்பது அறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் கி.மு 2 முதல் கி.பி 2 வரையிலான வரலாற்றிற்குரிய இடமாக அரிக்கமேடு அறியப்பட்டுள்ளது. புதுவை அரசு இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தொடர்ந்து அனுமதி வேண்டிய நிலையில் தற்போது மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுவை அரசு அகழாய்வு நடைபெறுவதற்கான முன்களப் பணிகளை துவங்கியுள்ளது.மேலும் கிடைக்கும் வரலாற்று ஆவணங்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கவும் புதுவை அரசு திட்டமிட்டுள்ளது.
|