LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விக்ரமின் நடிப்பை பாராட்டிய அர்னால்டு !!

தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று, ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் ஐ. 


இந்த படத்தில் விக்ரம், கதாநாயகனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரிக்கிறார். 


கடந்த இரண்டு வருட காலமாக தயாரிப்பில் இருந்து வரும் ஐ படத்திற்காக, இயக்குனர் ஷங்கர் ரொம்பவே மெனக்கெட்டிருப்பதாகவும், பல புதிய அம்சங்களையும் தொழில்நுட்பங்களையும் கையாண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றன. கூடவே விக்ரமும் தன் பங்கிற்கு நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் அசத்தியிருக்கிறாராம்.


இந்த படம் அனேகமாக தீபாவளி அன்று ரிலீசாகும் என எதிர்பாக்கப்படுகிறது. 


ஐ படத்தின் இசை வெளியீட்டை வரும் செப்டம்பர் 15ம் தேதி அன்று சென்னையில் பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.


இரண்டு நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு, ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அர்னால்டுவை அழைப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். 


விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்த அர்னால்டு ‘ஐ’ படம் பற்றி வியந்து பேசினாராம். குறிப்பாக கதாநாயகன் விக்ரம் இப்படத்திற்காக 120 கிலோ, 70 கிலோ, 50 கிலோ என தன்னை உருமாற்றி நடித்திருப்பதைப் பற்றியும் ஆச்சரியமாக கூறினாராம்.

by Swathi   on 29 Aug 2014  0 Comments
Tags: Arnold Schwarzenegger   Ai Movie   Ai Audio Launch      அர்னால்டு        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.