LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்றக் குழு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமனம்!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் கொள்கைக் குழுத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார். 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தேசிய பாதுகாப்பு துறையில் சிறுதொழில்களுக்கான வாய்ப்பு குறித்து ஆய்வு செய்யும் குழுத் தலைவராக பணியாற்றினார். பின்னர் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ஜனநாயகக் கட்சி சார்பில் இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 
மேலும் இல்லினாய்ஸ் மாகாண ஊழல் தடுப்பு பிரிவின் அட்டர்னி ஜெனரலாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் அவர் நாடாளுமன்றத்தின் பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் கொள்கைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நாடாளுமன்றத்தின் மேற்பார்வை கமிட்டியின் துணைக் கமிட்டியான பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் கொள்கைக் குழுவின் கீழ் கல்வி, தொழிலாளர் மேம்பாடு, வருமான சமத்துவமின்மை, சுகாதாரம், நுகர்வோர் பாதுகாப்பு, தகவல் தனியுரிமை ஆகியவை இடம் பெறுகின்றன. 
இக்குழுவின் தலைவரானதன் மூலம் மேற்கூறிய துறைகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 
இது குறித்து பேசிய அவர், “நாடாளுமன்ற கொள்கைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் இந்த பதவி கிடைத்த முதல் தெற்காசிய நாட்டவர் என்ற சிறப்பு எனக்கு கிடைத்து உள்ளது. ” என்று கூறினார்.

by Mani Bharathi   on 27 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்.. Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்..
மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா
பேரவையின் 33வது தமிழ் விழா பேரவையின் 33வது தமிழ் விழா
உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..
தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள் தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது
சிகாகோவில் சிகாகோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.