LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- இலங்கை

யாழ்ப்பாணத்தில் விக்கிப்பீடியா விழா நீச்சல்காரன்

சமூகத்தளங்களிலும், கணினி விளையாட்டுகளிலும் நேரத்தைச் செலவிடுவோர் மத்தியில் இணையத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோர்கள் நாடும் முக்கிய இடம் விக்கிப்பீடியா ஆகும். இதில் படிப்பதோடு அல்லாமல் கற்றவற்றை எழுதி பங்களிக்கவும் முடியும். அனைவரும் எழுதக்கூடிய, இலவச இணையக் கலைக்களஞ்சியமாக உலகில் அதிகமாகப் பயன்படும் இணையத்தளங்களில் பத்தாவது இடத்திலுள்ளது விக்கிப்பீடியா. இதில் இணையவாசிகளே எழுதிக் கொண்டும், அதனைச் சரிபார்த்துக் கொண்டும், மேம்படுத்திக் கொண்டும் இருப்பதால் தன்னார்வலர்களால் தன்னிறைவான வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. விக்கிமீடியா அறக்கட்டளை என்று நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இது சர்வதேச அறிவு இயக்கமாகச் செயல்படுகிறது. தமிழ் உட்பட சுமார் முன்னூறு மொழிகளில் விக்கிப்பீடியா செயல்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் இந்த விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்டு, பதினாறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அதனைக் கொண்டாடும் விதமாக தமிழ் விக்கிப்பீடியா 16 வது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் அக்டோபர் 19 மற்றும் 20 நாட்களில் நடைபெற்றது. 

 

பத்தாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதனால் அடுத்த விழா இலங்கையில் நடத்த முடிவுசெய்யப்பட்டு, பொறியாளர் சிவகோசரன், மயூரநாதன், சஞ்சீவி சிவக்குமார் உட்பட இலங்கைப் விக்கிப்பீடியர்களின் ஒருங்கிணைப்பில் திட்டமிடப்பட்டது. இதில் இருபதிற்கும் மேற்பட்ட விக்கிப்பீடியர்கள் இந்தியாவிலிருந்து கலந்து கொண்டனர். முதல் நாள்நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிவிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்றன. விக்கிப்பீடியா கடந்து வந்த பாதைகள் குறித்து கி. மயூரநாதன் குறிப்பிடுகையில் தொடக்கத்தில் ஒன்றிரண்டு நபர்கள் கொண்டு வளர்ந்தாலும் இன்று பலரது உழைப்பால் ஒரு லட்சத்து இருபத்து மூன்று ஆயிரம் கட்டுரைகள் அளவிற்கு வளர்ந்துள்ளதைக் குறிப்பிட்டார்.  விக்கிப்பீடியாவை ஒத்த திட்டமாகத் தொழிற்கலைகள் ஆவணப்படுத்தும் ஆவணகம் டாட் ஆக்(http://aavanaham.org) குறித்து பிரசாத் சொக்கலிங்கம் விளக்கினார். தமிழக அரசுடன் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் குறித்து முனைவர் மா. தமிழ்ப்பரிதி பேசினார். விக்கிப்பீடியாவில் படங்களைக் கொடையாகக் கொடுத்ததன் மூலம் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் குறித்த தனதனுபவத்தை ஏற்காடு இளங்கோ பகிர்ந்து கொண்டார். நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து இரவிசங்கர் அய்யாக்கண்ணுவும், நிகழ்படங்கள் குறித்து தகவலுழவனும், பதிப்புரிமை குறித்து த. சீனிவாசனும், தொழில்நுட்பம் குறித்து நீச்சல்காரனும் உரையாடினர்.

தமிழ் விக்கிப்பீடியா போன்ற தன்னார்வத் திட்டமான நூலகம் டாட் ஆர்க் (www.noolaham.org) அலுவலகத்தில் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு மின்னூலாக்கம் குறித்தும், தமிழ் ஆவணமாக்கம் குறித்து குலசிங்கம் சோமராஜ் விளக்கினார். யாழ்நூலக எரிப்பிற்குப் பின்னர் தமிழ் நூல்களை மின்னூலாக்கிப் பாதுகாக்கும் தேவை தமிழ்ச் சமூகத்திடம் இருந்தது, அந்தப் பணியைச் செம்மையாக நூலகம் அறக்கட்டளை செய்து வருவது குறிப்பிடத் தக்கது

 

தொடர்ச்சியாக மாலை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமுடன் இணைந்து அறிவியல் கருத்தரங்கும் நடந்தது. நிகழ்வில் தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார். மூத்த தமிழ் விக்கிப்பீடியர் இ.மயூரநாதன் விக்கிப்பீடியா குறித்த அறிமுகவுரையை ஆற்றினார். தமிழ்ச் சங்கப் பொருளாளர் தி.வேல்நம்பி நிறைவுரையாற்றினார். இதில் விக்கிப்பீடியாவில் நடந்த போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் "அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஈழத்தவர்களின் பங்களிப்பு" எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் நீண்ட சிறப்புரையாற்றினார். தேனுவரைப்பெருமாள் தொடங்கி அ. முத்துலிங்கம் வரை பாடநூல் ஆக்கம், பதிப்பியல், பத்திரிக்கை, அகராதியியல், வரலாற்றியல், மொழி நடையியல், மொழிபெயர்ப்பியல், கலைக்களஞ்சியம், கலையியல் என அனைத்துத் துறைகளிலும் உள்ள ஈழத்தமிழர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். கணினி யுகத்திலும் ஈழத்தமிழர்களின் விருபா.காம், நூலகம்.ஆர்க் போன்ற திட்டங்களையும் குறிப்பிட்டார். தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடங்கியவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயூரநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்து இலக்கிய பங்களிப்பு சிலநேரங்களில் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.



இரண்டாம் நாள் நிகழ்வுகளாக கலாச்சாரச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்து வரலாற்று இடங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சென்றுவந்தனர். சங்கிலியன் சிலை, நல்லூர் கந்தசுவாமி கோவில், டச்சு கால மந்திரி மனை,  நவுலேஸ்வரம் கோவில் கீரிமலை கடற்கரை, யாழ் நூலகம் மற்றும் போர்க் காலச்சுவடுகள் போன்றவை குறிப்பிடத்தக்க இடங்களாகும். பிற்பகலில் நடந்த கலந்துரையாடலில் வேங்கைத் திட்டம், பெண்கள் பங்களிப்பு, புதுப் பயனர்கள் ஈர்க்கும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் கட்டுரைப் போட்டியான வேங்கைத்திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற உறுதிபூண்டனர். இதில் தலைப்புகளில் ஒவ்வொரு மொழியினரும் அதிகபட்சக் கட்டுரைகள் எழுதவேண்டும். அக்டோபர் மாதம்வரை ஐநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் தமிழ் விக்கிப்பீடியா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுப் பயனர்களுக்குப் பயிற்சியளிக்கவும், விக்கிப்பீடியாவை அனைவருக்கும் கொண்டு செல்லவும் கொள்கை முடிவுசெய்யப்பட்டது. 

by Swathi   on 06 Nov 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.