LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்ற உறுப்பினர் செயலராக பேராசிரியர் மு.இராமசாமி நியமனம்

தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்ற உறுப்பினர் செயலராக பேராசிரியர் மு.இராமசாமி நியமனம்

தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கம் என்ற பெயரில் 1955-ல் உருவான அமைப்பானது, இயல் இசை,நாடகம் என்ற முத்தமிழுக்குமான அமைப்பாக 1973-ஆம் ஆண்டு உருவானது.தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் இந்திய மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் மத்திய சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதாக அமைந்துள்ளது.
தமிழக அரசு வழங்கும் நிதியுதவிகளைக் கொண்டு கலைப் பணிகளை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம்.கலைமாமணி விருது வழங்குதல், கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், புகழ்பெற்ற மறைந்த கலைஞர்களுடைய குடும்பங்களுக்கான நிதியுதவி வழங்குவது, தமிழகத்தின் கலைச் செல்வங்களை ஆவணப்படுத்துவது போன்ற பணிகள் தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முந்தைய மாதம் (ஆகஸ்ட்) இம்மன்றத்தின் புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் நியமனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். தற்போது உறுப்பினர் செயலாளராக பேராசிரியர்  மு.இராமசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் மு.இராமசாமி தமிழ் உலகின் மிகச் சிறந்த நாடக ஆளுமை ஆவார். நிஜ நாடக இயக்கம் என்பது இவரது நாடகக்குழு.இவர் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். தோற்பாவை, நிழற்கூத்து கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நவீன நாடகக் கலையை தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருப்பவர்.தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான 'கேடி என்கிற கருப்புதுரை' திரைப்படத்தில் கருப்பு துரை கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர் பேராசிரியர் மு. இராமசாமி.

by R.Gnanajothi   on 11 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துடன் விருது தமிழ் சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துடன் விருது
கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை,சிவப்பு பாசி மணிகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பச்சை,சிவப்பு பாசி மணிகள்
தமிழர்கள் மொழிக்காக முதலில் வருபவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தமிழர்கள் மொழிக்காக முதலில் வருபவர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா
'ஒரு நாகரித்தின் மொழி தமிழ்'~ஆர்.பாலகிருஷ்ணன் 'ஒரு நாகரித்தின் மொழி தமிழ்'~ஆர்.பாலகிருஷ்ணன்
'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' பாரதிதாசன் வரிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள தமிழணங்கு ஓவியம் 'இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்' பாரதிதாசன் வரிகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள தமிழணங்கு ஓவியம்
'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாப்பாத்திரங்களை கொடுங்கள்,'தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து 'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாப்பாத்திரங்களை கொடுங்கள்,'தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து
கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைகள் கோயில் திருவிழாக்களில் பாரம்பரிய கலைகள்
பத்ம விருது பெரும் சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள்,இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு பத்ம விருது பெரும் சிற்பி பாலசுப்ரமணியம் மற்றும் ஏழு தமிழர்கள்,இரு தமிழ் வம்சாவளியினரும் பத்ம விருது பட்டியலில் இடம்பிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.