கீழடி அகழாய்வில் கிடைத்த வெள்ளிக்காசு
கீழடி அகழாய்வில் சந்திரன்,சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக்காசு கிடைத்தது. இதனை ஆய்வு செய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா அது மௌரியர் காலத்திற்கு முற்பட்டது என்று ஆய்வு செய்து கூறியுள்ளார். இதன் மூலமாக வட இந்தியப் பகுதிகளுடன் கீழடி பகுதி மக்களுக்கு வணிகத் தொடர்பு இருந்துள்ளதை உறுதி செய்யமுடிகிறது. இதுபோன்ற பல நாணயங்கள் அகழாய்வுப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|