LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென அமைகிறது தனி வாரியம், தமிழக அரசின் அறிவிப்புகள்

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென அமைகிறது தனி வாரியம்,தமிழக அரசின் அறிவிப்புகள்

பல்வேறு காரணங்களால் தமிழகம் விட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொன்மைமிக்க தமிழினம் பட்டியலிட்டு சொல்லுமளவு பல நாடுகளில் பரவியுள்ளது.உலகின் பெரும்பான்மையான நாடுகளில் வாழும் இனமாக தமிழினம் உள்ளது.பல காரணங்களால் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களை அரவணைப்பது தாய்த்தமிழ் நாட்டின் கடமை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் ரூபாய் 5 கோடி முன்பணம் கொண்டு 13 புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் கொண்ட புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும் இதற்கு மூலதனச் செலவினமாக 1.40 கோடி ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
*புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத்தளம்(Database) ஏற்படுத்தப்படும். இதில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து,ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றிற்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
*குறைந்த வருவாய் பெறும் வெளிநாட்டிற்குச் சென்று இருக்கும் தமிழர் பணியின்போது இருந்தால் அவர் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை வழங்கப்படும்.
*பயணப் புத்தாக்க பயிற்சி சென்னை மட்டுமின்றி இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை,விழுப்புரம் மாவட்டங்களிலும் நடைபெறும்.
*புலம்பெயர்ந்துள்ள தமிழர் ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி வசதி, கைப்பேசி செயலிகள்(Mobile apps) உருவாக்கப்படும்.
*புலம்பெயர் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்று சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
*கொரோனாவால் தாயகம் திரும்பியுள்ள தமிழர்களுக்கு உதவும் நோக்கில் சிறுதொழில் செய்திட இரண்டரை லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படும். இதற்கென அரசால் 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
*வெளிநாடு வாழ் தமிழர் தமிழகத்தில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
*புலம்பெயர்ந்த தமிழர் தன் சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட,பள்ளி மருத்துவமனை, நூலகம் அமைத்திட அழைப்பு விடுக்கப்படும்.
*வெளிநாட்டில் வேலை வாய்ப்பிற்கென சென்று நிரந்தரக் குடியுரிமை பெற்ற தமிழர்களின் வாரிசுகள் தமிழ் கற்க தமிழ் இணையக் கல்விக் கழகம், உருவாக்கப்பட்டு தமிழ் கற்றுத்தரப்படும்.மேலும் கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிக்க ஊக்கத்தொகை,தமிழ் கற்பிக்க பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
*புலம்பெயர் தமிழர் தம் பகுதியில் உருவாக்கியுள்ள நலச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு கலை,இலக்கியம் பண்பாடு பரிமாற்றம் நடைபெற ஏற்பாடு செய்யப்படும். இதற்கென 4 கோடி ரூபாய் செலவிடப்படும்.
*புலம்பெயர் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையிலும்,புலம்பெயர் தமிழர் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், ஜனவரி 12-ஆம் நாள் புலம்பெயர் தமிழர் நாளாகக் கொண்டாடப்படும். 

கருணாநிதி வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு தமிழர் வாழ்வில் ஒளியேற்றும் விளக்காக அவர்களின் உற்ற தோழனாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என முதல்வர் கூறியுள்ளார்.

பல்வேறு தமிழ் அமைப்புகள் புலம்பெயர் தமிழர்களுக்கென தம் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து தற்போது நினைவுகூறத்தக்கது. திமுக அதனை தனது அரசியல் வாக்குறுதியாக்கி, நிறைவேற்றவும் செய்துள்ளது பாராட்டுக்குரியது.

by R.Gnanajothi   on 12 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.