LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மீட்கப்பட்டத் தமிழ் கல்வெட்டுகள்." ஒரு நீண்ட காலப்போராட்டம்... வெற்றி..

" மீட்கப்பட்டத் தமிழ் கல்வெட்டுகள்."
ஒரு நீண்ட காலப்போராட்டம்...
" வெற்றி.."
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டு மைப்படிகள் சென்னை வருகை..
சுருக்கமாய் ..
கடந்து வந்த பாதை..
இது தொடர்பான விபரங்களை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்..
ஒரு இனத்தின் வரலாறு.. பண்பாடு..கலாச்சாரம்..
பெருமை.. இவைகள் அனைத்தும் அவ்வினத்தின் தொல்லியல் சான்றுகளைக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது.
தொல்லியல் சான்றுகளில் முதன்மையானது கல்வெட்டுகள்.
இந்தியளவில் அதிகளவு தொல்லியல் சான்றுகள் உள்ள ஓர் இனம் தமிழ் இனம். இந்திய அளவில் தமிழ் மொழியில்தான் அதிகளவு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
இதன் வரலாற்றை சுருக்கமாக அறியச் சற்று பின்னோக்கிச் செல்வோம்.
ஆங்கிலேயர் ஆட்சியில் கி.பி. 1860 ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை என்றழைக்கப்படும் Archaeological survey of india( Asi) அமைப்பு உருவானது. அலெக்ஸாண்டர் கன்னிங்காம் என்பவர்தான் Asi யின் முதல் இயக்குனர்.
தொல்லியல் சார்ந்த நிகழ்வுகளை ஆவணமாக பதிவு செய்யும் பணி தொடங்கியது.
Asi இன் கல்வெட்டியல் பிரிவு ( Epigraphy branch) கி.பி.1886 இல் பெங்களூரில் துவங்கப்பட்டது. டாக்டர் ஹூல்ஸ் தலமையேற்றார். இவர்தான் இந்தியாவின் முதல் கல்வெட்டியல் ஆய்வாளர்.
கி.பி.1887 ஆம் ஆண்டு சென்னைக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.
தட்பவெப்பநிலை காரணமாக அலுவலகம் 1911 ஆம் ஆண்டில் ஊட்டிக்கு மாற்றப்பட்டது.
கோவில்களில் உள்ள கல்வெட்டின்மேல் மைபூசி அதை ஒரு காகிதத்தில் படியெடுப்பார்கள். இதை மைப்படி என்பார்கள். ( Estampage). மைப்படியை கையெழுத்துப்படியாக எழுதுவார்கள். அதன்பிறகு அச்சு நூல்களாக வெளியிடுவார்கள்.
அசோகர் கால கல்வெட்டுகள் ( 1871 - 1885) என்னும் முதல் கல்வெட்டியல் நூலை அலெக்ஸாண்டர் கன்னிங்காம் வெளியிட்டார்.
பிறகு தென்னிந்திய கல்வெட்டுகள், வெளியிடப்பட்டது.
ராபர்ட் சீவல், ஹீல் ஹார்ன், ஜான் பிளீட், கோபிநாத்ராவ், வெங்கையா, சுப்ரமணிய ஐயர் போன்ற அறிஞர்களால் கல்வெட்டுத் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன.
மைப்படி எடுக்கப்பட்ட பிரதிகள் அனைத்தும் சென்னையில் உள்ள Asi அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டன.
பிறகு ஊட்டி அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டன.
1961 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. இத்துறையும் கல்வெட்டியல் பணிகளை மேற்கொள்கிறது.
இன்றுவரை 1,00,000 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாகவும் இவற்றில் தமிழ் கல்வெட்டுகள் மட்டும் 65000 என்றும் பெரும்பாலானத் தொல்லியல் ஆய்வாளர்கள் கணிப்பு.
ஆரம்பத்தில் சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட மைப்படிகள், ஊட்டிக்கு மாற்றப்பட்டு அதன் பிறகு ....
1966 இல்..
அலுவலகம்
மைசூருக்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகு படியெடுக்கப்பட்ட மைப்படிகளும் மைசூருக்கே கொண்டு செல்லப்பட்டன.
இங்குதான் பிரச்சனை ஆரம்பம்.
படியெடுக்கப்பட்ட்ட தமிழ் கல்வெட்டுகளின்
நிலை என்ன.? மைப்படிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறதா.? ஏன் அவைகள் அச்சுநூல்களாக வெளியிடப்படவில்லை.? 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டதே.? மைப்படிகள் என்ன ஆயிற்று.? தமிழக வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்படுகிறதா.? புறக்கணிக்கப்படுகிறதா.?
தொடர் கேள்விகள்..
விவாதங்கள்.. வழக்குகள்.. வரலாற்றை மீட்டெடுக்கும் பணிகள் தொடங்கின..
18.06.2006 இல் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் பேராசிரியை திருமதி சாந்தினிபீ அவர்கள்..
" காவிரியும் போச்சு..
கல்வெட்டும் போச்சு "
என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுப் படிகள் அழிக்கப்படுவதாக அக்கட்டுரை குற்றம் சாட்டியது.
தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
2008 ஆம் ஆண்டு மைசூர் அலுவலகம் இட மாற்றம் கண்டது. இம்மாற்றத்திலும் தமிழ் கல்வெட்டுகள் அழிந்தன.
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் தமிழகத்திற்கு இடமாற்றம் செய்யவேண்டும்..
தொடர் விவாதங்கள்..
கோரிக்கைகள்..
போராட்டங்கள்..
தமிழ் கல்வெட்டுக்களை வெளியிடுங்கள் என்ற நிலைப்பாடு.
சுமார் 60000 கல்வெட்டுப் படிகளில் ..
மிகக் குறைந்த அளவே வெளியிடப்பட்டது ..
மீதமுள்ள தமிழ் கல்வெட்டுகளை வெளியிடவேண்டும் என்பது பல வருட கோரிக்கை..
இந்த சூழலில் மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுப்படிகள் போதிய பராமரிப்பின்றி அழிந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழும்பியது..
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முயற்சி மேற்கொள்ளப்பட்டது..
இதற்கான முதல் முயற்சியை தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டது..
தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அறக்கட்டளையின் நிறுனர் சுபாஷிணி , செயலார், தேமொழி,
வழக்கறிஞர் கௌதமசன்னா, வழக்கறிஞர் காந்தி பாலசுப்ரமணியன்..
குழுவினர் கூட்டத்தில்
வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது..
உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.N.r.இளங்கோ அவர்கள் எந்தக் கட்டணமும் பெறாமல் ஆஜராக முன்வந்தார்.
திரு.கௌதமசன்னா மற்றும்
திரு.P.மணிமாறன்
இருவரையும் மனுதாராகக் கொண்டு வழக்குத் தொடரப்பட்டது..
வழக்கு எண்...
W.p.(md) no 20678 / 2019.
இவ்வழக்கில் வாதிட்டவர்..
சீனியர் வழக்கறிஞர்
திரு.N.r. இளங்கோ...
இதே கோரிக்கையை கொண்டு மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்தவர்..
திரு. இளஞ்செழியன்.
17399 / 2020
வாதிட்டவர்..
சீனியர் வழக்கறிஞர்
திரு.சித்தார்த்த விஷ்ணு..
தமிழகரசு சார்பில்
வழக்கறிஞர்
திரு.வீரகதிரவன் மற்றும் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
தொல்லியல் துறை சார்பில்..
மூத்த வழக்கறிஞர்
திருமதி. விக்டோரியா கௌரி ஆஜரானார்.
கடந்த2020 டிசம்பர் 21 ஆம் தேதி, மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
மைசூர் கல்வெட்டியல் அலுவலகத்தில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் நிலையை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ..
தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்களான..
ராஜவேலு , பத்மாவதி, மார்க்கஸியா காந்தி, சாந்தலிங்கம், மற்றும் தமிழகத் தொல்லியல் அலுவலர் ஒருவர் கொண்ட ஐவர் குழுவை அமைத்தது.
குழுவினரும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்..
பரபரப்பாய் இரு தரப்பு வாதம்...
மனுதாரர்கள் இருவர் சார்பாக நிறைவு வாதத்தை மூத்த வழக்கறிஞர்
திரு.N.r.இளங்கோ எடுத்துரைத்தார்..
ஏறக்குறைய 266 பக்க வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாதம் செய்தார் இளங்கோ..
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகம் கொண்டுவருவதன் அவசியத்தை மிகத் தெளிவாக சான்றுகளுடன் எடுத்துரைத்தார்..
வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வழக்கறிஞர் திரு.காந்தி பாலசுப்ரமணியன் அவர்கள் சேகரித்துக் கொடுத்தார்..
வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை
மா.மாரிராஜன், திருச்சி பார்த்தி, ஆறகளுர் வெங்கடேசன், பத்திரிகையாளர் சஃபிமுன்னா, வழக்கறிஞர்கள் அருண் மற்றும் திலக்குமார் ஆகியோர் கொடுத்தனர்..
தீர்ப்பும் சாதகமாகவே வந்தது...
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுப்படிகள் அனைத்தையும் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது..
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதியரசர்கள்..
திரு.கிருபாகரன் மற்றும் திரு.துரைச்சாமி
அமர்வு வழங்கியது..
இத்தீர்ப்பின் படி..
மைசூர் உள்ள தமிழ் கல்வெட்டு மைப்படிகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய இந்தியத் தொல்லியல் துறை அதிகாரப்பூர்வ உத்திரவுப் பிறப்பித்தது.
இன்று (06.01.2022)
தேதியிட்டு இந்தியத் தொல்லியல் துறை பிறப்பித்த உத்திரவு..
இதுவரை துணைக்கல்வெட்டு கண்காணிப்பாளர் அலுவலகம் (தென்சரகம்) என்று அழைக்கப்பட்டு வந்த அலுவலகம் இன்று முதல்....
" துணைக்கல்வெட்டு கண்காணிப்பாளர் அலுவலகம்..
தமிழ்க்கல்வெட்டுகள்"
என்று அழைக்கப்படும்.
தமிழ் சார்ந்த கல்வெட்டு மைப்படிகள் அனைத்தும் தமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தொல்லியல்துறை ஆணை பிறப்பித்தது.
வாழ்த்தும்.. வரவேற்பும்..
அன்புடன்..
மா.மாரிராஜன்..
by Swathi   on 07 Jan 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.