LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!

செப்டெம்பர் 7-ஆம் நாள் சனிக்கிழமை தலைநகரின் பெரும்பாலான சாலைகள் வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டு சைக்கிள் ஒட்டிகளுக்காக அனுமதிக்கப்பட்டது. DC சைக்கிள் ரைட் என்ற தொண்டு நிறுவனம்  ஆண்டுதோறும்  இந்த 20 மைல்கள் சைக்கிள் ஓட்ட நிகழ்வை நடத்துகிறார்கள். நாட்டின் தலைநகரை சைக்கிள் ஒட்டிகளுக்காகத் தனித்துவமாக அனுமதிப்பதன் மூலம் சைக்கிள் ஓட்டுதலின் மகிழ்ச்சியை மக்கள்  கொண்டாட வழிவகுக்கிறது.

இந்நிகழ்வின்போது, ​​வாசிங்டன் டி.சி.யின் பல தெருக்கள் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டு, அனைத்து வயதினருக்கும்  சைக்கிள் ஓட்டுவதற்கான பாதுகாப்பான எந்த இடையூறும்  இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் சைக்கிள் பயணத்தை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. யு.எஸ். கேபிடல் கட்டிடம், வாசிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் மெமோரியல், பொட்டோமேக் நதி போன்ற புகழ்பெற்ற அடையாளங்களின் அற்புதமான காட்சிகளை இந்தப் பாதையில் சைக்கிள் ஓட்டிகள்  கண்டு களிப்பர். முக்கிய சாலைகளை மூடுவதன் மூலம், வழக்கமான போக்குவரத்து நெருக்கடி கவலைகள் இல்லாமல் தலைநகரின் அழகைப் பார்த்தவாறு ஒரு சுவாரஸ்யமான மன அழுத்தமில்லாத இன்பச் சூழலை இந்த நிகழ்வு உருவாக்குகிறது.

இந்த ஓட்ட நிகழ்வு  என்பது ஒரு சைக்கிள் பந்தயம் அல்ல, இது சாதாரணமாகச் சைக்கிள் ஓட்டுபவர்கள் முதல் தேர்ந்த சைக்கிள் ஓட்டும் வல்லுநர்கள்வரை பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு குடும்ப நட்பு மனநிறைவு சைக்கிள் ஓட்டமாகும். இது சுமார் 20 மைல்கள் வரை தலைநகரின் பெரும்பாலான சாலைகளையும் மேம்பாலங்களையும் சைக்கிளில் கடந்து செல்லக்கூடிய ஒரு அறிய வாய்ப்பாகும். குழந்தைகள், குடும்பங்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுப் பாதுகாப்பான முறையில் இது செயல்படுத்தப்படுகிறது. மக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழவும்,  சுற்றுச்சூழலைப்  பேணிக்காக்கவும்,  சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வில் இந்தியர்களால் நிறுவப்பட்டுச் செயல்படும் Fun Cycle Riders, https://funcleriders.org/ சைக்கிள் ஒட்டிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், Fun Cycle Riders அமைப்பு செப்டெம்பர் 22-ஆம் நாளன்று பென்சில்வேனியா மாகாணத்தில் சைக்கிள் விழிப்புணர்வு பாதுகாப்பு  முகாம் நடத்தவும், செப்டெம்பர் 29-ஆம் நாளன்று நியூஜெர்ஸி மாகாணத்தில் அங்குள்ள தொண்டு நிறுவனத்தோடு  இணைந்து அனைவருக்குமான சைக்கிள் ஓட்டம் நடத்தி மக்களிடையே சைக்கிள் விழிப்புணர்வையும் அதன் அவசியத்தையும் பரப்பும் விதமாக நிகழ்வு ஒன்றை நடத்த உள்ளது. அனைவரும் சைக்கிள் ஓட்டுவோம் புத்துணர்வு பெறுவோம்!

 

– முருகவேலு வைத்தியநாதன்

by Swathi   on 16 Sep 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை  நேர்காணல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை நேர்காணல்
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா
வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி   புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது
அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் அவர்களின்  முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா! அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா!
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது.
அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம் அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம்
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா
“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில்  நிதி திரட்டும் கருத்தரங்கங்கள் “தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.