LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF
- மற்றவை

மிக நுட்பமான உறவுச் சிக்கல்களில் ஒன்று முன்னாள் காதல் பிரச்சினை.

உங்கள் புதிய காதல் அல்லது திருமணத்தை உங்கள் முன்னாள் காதல் அழிக்க அனுமதிக்காதீர்கள்.
 
நீங்கள் வேறொரு உறவைத் தொடங்கியிருந்தால், உங்கள் முன்னாள் காதலுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பது நல்லதல்ல. மேலும் நீங்கள் எவ்வளவு முதிர்ச்சியாக(maturity) இருந்தாலும், முன்னாள் காதலுடனான நட்பு திருமணத்திற்கு பிறகு தொடர முடியாது. அவர்கள் ஏன் உங்கள் காதலில் இருந்து வெளியேறினார்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் உங்களை உண்மையாக நேசித்து, அன்பு செலுத்தியிருந்தால், அவர்கள் உங்களைக் கைவிட்டிருக்கவோ, தூக்கி எறிந்திருக்கவோ கூடாது, அவர்கள் உங்களைத் திருமணம் செய்திருப்பார்கள் அல்லது பரஸ்பரம் புரிய வைத்து பிரிந்திருப்பார்கள்.
 
எனது அன்பான நண்பர்களே, உங்கள் முன்னாள் காதலுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள், உங்கள் முன்னாள் காதல் உடனான உறவை பற்றி, புதிய உறவுடன் ஒருபோதும் விவாதிக்க வேண்டாம். இது எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை விளைவிக்கலாம். உங்கள் கடந்த காலத்தை பற்றி ஆர்வமுடன் கேட்டு, நம்பத்தகுந்த வகையில் பேசி, நீங்கள் நம்பி சொன்ன பிறகு, பின்னர் அதை வாழ்நாள் முழுவதும் சொல்லிக்காட்டும் அபாயம் இங்கு 99% உண்டு.
 
நீங்கள் ஒரு புதிய உறவைத் தொடங்கியிருந்தால் அல்லது நீங்கள் திருமணமானவராக இருந்தால், தயவு செய்து உங்கள் கடந்த கால காதலை தூரத்தில் வைத்திருங்கள். உங்கள் புதிய உறவு, அல்லது திருமண வாழ்க்கையில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது அவர்கள் புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
 
இந்த கசப்பான உண்மையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள், சில முன்னாள் காதலர்கள் மிகவும் தந்திரமானவர்கள், புத்திசாலிகள், பொல்லாதவர்கள், பிடிவாதமானவர்கள், அவர்களின் தேவைக்கு உங்களை அச்சுறுத்தும் அபாயம் உண்டு. பணிவாக பேசியோ, சோகமாக நடித்தோ மீண்டும் உறவை தொடர அச்சுறுத்தும் சம்பவங்கள் பல உண்டு.
 
அதில் முக்கியமான ஒன்று "நான் புதிய வாழ்க்கையில் சந்தோசமாக இல்லை. உன் நினைவாக இருக்கிறேன். உன்னைப்போல் அவன்/அவள் இல்லை." இப்படி பேசினாலும் உதறிவிட்டு செல்லுங்கள். அவர்கள் மிகவும் அவநம்பிக்கையானவர்களாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.
 
பெரும்பாலான சமயங்களில் அவர்கள் திடீரென்று, "மீண்டும் பேச வேண்டும், ஒருமுறை பார்க்க வேண்டும், நான் நிம்மதியாக இல்லை" என்ற பல போர்வையில் உங்களை வேட்டையாடத் தொடங்கலாம், "நீதான் என் உயிர், நான் உன்னை விட்டுப் பிரிந்ததில் இருந்து, எனக்கு அமைதி இல்லை, இது மற்றவர்கள் செய்த வேலை, எனக்கு தெரியாது. நான் ஏன் இப்படி நடந்துகொண்டேன் என்று தெரியவில்லை, எனக்கு நீ திரும்பவும் வேண்டும், தயவுசெய்து எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடு."
 
உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு புதிய உறவை நீங்கள் கண்டுபிடித்திருந்தால் அல்லது உங்களுக்கு திருமணம் நடந்து முடிந்திருந்தால், முன்னாள் காதலுடைய முட்டாள்தனத்திற்கு அப்பாவியாக உங்கள் வாழ்க்கையை பலி கொடுத்து விடாதீர்கள்.
 
முன்னாள் காதலர்கள் எப்போதும் இதயத்தைத் தொடும் போலி கதைகளுடன் வருகிறார்கள், எனவே இடம் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் மகிழ்ச்சியை இரண்டாவது முறையும் நிச்சயம் அழிக்கக்கூடும். ஒரு முறை தவறு செய்து விட்டிருந்தாலும், பின்னால் நேர்மையாக இருக்க விரும்பிய பலரை, பல முன்னாள் காதல்கள், விரக்தியிலும் நிரந்தர வேதனையிலும் ஆழ்த்திய பல கதைகள் இங்கு உண்டு. நீங்கள் அந்த "முன்னாள் காதல்" பொறியில் மாட்டினால் என்றுமே மகிழ்ச்சி என்பது உங்கள் வாழ்க்கையில் இருக்காது.
 
-படித்ததில் பிடித்தது
by Swathi   on 05 Nov 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல் சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல்
சித்திரையா? தையா? தமிழ் புத்தாண்டு சிக்கல்கள்! சித்திரையா? தையா? தமிழ் புத்தாண்டு சிக்கல்கள்!
*ஏன் திருமணம் தாமதமாகிறது?* *ஏன் திருமணம் தாமதமாகிறது?*
பண்டைத் தமிழன் வேளாண்மை செய்யத் தொடங்கியபோதே பருவச்சுழற்சியைக் கணிக்கக் கற்றுக் கொண்டான் பண்டைத் தமிழன் வேளாண்மை செய்யத் தொடங்கியபோதே பருவச்சுழற்சியைக் கணிக்கக் கற்றுக் கொண்டான்
தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு-பிபிசி தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்த வரலாறு-பிபிசி
தமிழர் வேளாண் மரபு!! சித்திரைப் புத்தாண்டில் பொன்னேர் பூட்டி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, கார்த்திகையில் களையெடுத்து, தையில் அறுவடை செய்வத் தொடங்குவது!! தமிழர் வேளாண் மரபு!! சித்திரைப் புத்தாண்டில் பொன்னேர் பூட்டி, ஆடிப்பட்டம் தேடி விதைத்து, கார்த்திகையில் களையெடுத்து, தையில் அறுவடை செய்வத் தொடங்குவது!!
தொட்டதற்கெல்லாம் விவாகரத்து  - குடும்ப அமைப்பு என்னவாகும்? தொட்டதற்கெல்லாம் விவாகரத்து - குடும்ப அமைப்பு என்னவாகும்?
புத்தாண்டு வாழ்த்துகள் புத்தாண்டு வாழ்த்துகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.