|
|||||
ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை |
|||||
சமூக வலைத்தலங்கள் குழந்தைகள் மீது மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறன. அதனால் உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், அதன்மூலம் ஏற்படும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. கனனச்சிதறல், பார்வைக்குறைபாடு, மன அழுத்தம் என குழந்தைகள் மத்தியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாகிக் கொண்டே போகிறது.
சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை மீட்க உலகெங்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நவம்பர் 28-ம் தேதி நிறைவேற்றியுள்ளது.
உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. சிறுவர்கள் லாக் இன் செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அப்படித் தடுக்காத சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர ஓராண்டு ஆகும். ஏற்கெனவே பிரான்ஸிலும் சில அமெரிக்க மாகாணங்களிலும் பெற்றோரின் அனுமதியில்லாமல் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மசோதாவுக்கு 77 % ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
சமூக வலைத்தலங்கள் குழந்தைகள் மீது மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறன. அதனால் உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், அதன்மூலம் ஏற்படும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. கனனச்சிதறல், பார்வைக்குறைபாடு, மன அழுத்தம் என குழந்தைகள் மத்தியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாகிக் கொண்டே போகிறது. சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை மீட்க உலகெங்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நவம்பர் 28-ம் தேதி நிறைவேற்றியுள்ளது.உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. சிறுவர்கள் லாக் இன் செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அப்படித் தடுக்காத சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர ஓராண்டு ஆகும். ஏற்கெனவே பிரான்ஸிலும் சில அமெரிக்க மாகாணங்களிலும் பெற்றோரின் அனுமதியில்லாமல் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மசோதாவுக்கு 77 % ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
|
|||||
by on 01 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|