LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- மலேசியா

40,000 கோடி சொத்தைத் தவிர்த்துவிட்டு புத்தத் துறவியான மலேசியத் தொழிலதிபரின் மகன்


மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் "ஏ.கே" என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன்.


இலங்கைத் தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்குச் சொந்தக்காரரான இவர் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் நவ.28ம் தேதி காலமானார்.

 மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவரது சமூகத் தொண்டு  லட்சக்கணக்கான அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துள்ளது. 

மலேசியாவில் மேக்சிஸ் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஏ.கே கடந்த 2005-ல் இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை 1 பில்லியன் டாலருக்கு வாங்கினார். மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் இவர்  மலேசியாவின் அடையாளமான 88 மாடி இரட்டைக் கோபுரங்களைக் கட்டமைப்பதற்குக் காரணமாக இருந்தவர்.

ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட் பகுதியில் குடியேறினர்.   1938-ம் ஆண்டு பிறந்த ஏ.கே. விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் 
தொடக்கக் கல்வியைத் தொடங்கி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் பட்டப்படிப்பைமுடித்தார்.  இவரது மனைவி மோம்வஜராங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவர்களது மகன் வென் அஜான் சிரிபான்யோ உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர். புத்தமதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிரிபான்யோ தனது தந்தையின் ரூ.40,000 கோடி சாம்ராஜ்யத்தைத் துறந்துவிட்டு புத்தத் துறவியாக மாறியது உலக அளவில் பரபரப்பு செய்தியானது. கடந்த 20 ஆண்டுகளாக சிரிபான்யோ தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் தாவோ டம் புத்த மடாலயத்தில் துறவியாக வாழ்ந்து வருகிறார். .


by hemavathi   on 03 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் 17 மணி நேர திக் திக் பயணம் - பத்திரமாகப் பூமி திரும்பினர் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள்
2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் 2 நாள்களில் பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் காலதாமதம்
நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம் நாசாவில் பணியாற்றிய 23 பேர் பணி நீக்கம்
இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் -  கனடாவின்  புதிய பிரதமர்  மார்க் கார்னி இந்தியா உடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவோம் - கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர்   மார்ச் 19  அல்லது  20 -ல்  பூமிக்குத் திரும்புகிறார்கள்  - நாசா அறிவிப்பு சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 19 அல்லது 20 -ல் பூமிக்குத் திரும்புகிறார்கள் - நாசா அறிவிப்பு
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான  தங்கப் படிமம் பாகிஸ்தானின் சிந்து நதிப் பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கப் படிமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.