|
||||||||
சித்திரையில் புத்தாண்டு -ஆடியில் ஆடிப் பெருக்கு -கார்த்திகையில் விளக்குத் திருவிழா -தையில் பொங்கல் |
||||||||
![]() தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்
தமிழர் தொடர் ஆண்டுக் கணக்குப் படி 5125 தொடர் ஆண்டு இன்று பிறந்தது.
இன்று பிறந்த தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று,
எப்படிக் கொண்டாடுவது?
சித்திரை 1
தமிழ்தொடர்ஆண்டு-5125
சமுதாயம் விழாமல் இருப்பதற்கு விழா என்று நம் தமிழ் முன்னோர் பல விழாக்களைக் கட்டமைத்தார்கள்.
தமிழர் விழாக்களுக்கு, இயற்கைவளம், குடும்ப மகிழ்ச்சி, சமூக ஒற்றுமை, வணிகம், ஆகிய காரணங்கள் முதன்மையானவை.
சித்திரையில் புத்தாண்டையும்,
ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவையும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவையும்,
தையில் பொங்கல் திருவிழாவையும் இயற்கை காரணம் பற்றி தமிழர் கொண்டாடினார்கள்.
தமிழர் நாள் தொடக்கம்- காலை கதிரவன் உதயம்.
ஆரியர் நாள் தொடக்கம்- நண்பகல்.
ஐரோப்பியர் நாள் தொடக்கம்- நள்ளிரவு.
இருளுக்கும் ஒளிக்கும் மையப்பகுதி கதிரவன் உதயம்.
பழந்தமிழர் 'இருவேறு உலகத்தியற்கை' என்று கண்டுணர்ந்தவர்கள்.
அதன் பொருட்டே தமிழர் இருப்புக்கும்(ஒளி) இல்லாநிலை(இருள்)க்கும் மையமான கதிரவன் உதயத்தை தொடக்கமாகக் கொண்டனர்.
ஆரியர் இருப்பை போற்றிக் கொள்பவர் அதன் பொருட்டு அவர்கள் நண்பகலைத் தொடக்கமாகவும்....,
இல்லாநிலையிலிருந்து இருப்புநிலை தோன்றயதாக ஐராேப்பியர் நள்ளிரவை தொடக்கமாகக் கொண்டது இயல்பாக பொருந்திவிட்ட அடிப்படையே.
தமிழர் நாள் தொடக்கமாக இருளுக்கும் ஒளிக்கும் மையமான காலை நேரத்தை நாள் தொடக்கமாக கொண்டது போலவே...,
ஆண்டு தொடக்கத்திற்கும்,
பின்பனி முடிந்து வெயிலின் தொடக்க காலமான இளவேனிற் காலம் தொடங்கும் சிததிரையை ஆண்டு தொடக்கமாகக் கொண்டனர்.
தமிழ்ப் புத்தாண்டு ....
தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
ஆரியர் நுழைவிற்கு முந்தைய பழந்தமிழர் இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் ஓரை என்ற தமிழர் புத்தாண்டுக்கான குறிப்பு காணப்படுகிறது.
சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும்.
மலைபடுகடாம்
'தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை' என்றும்...,
பழமொழி நானூறு
'கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்'
என்றும் பாடுவதால் இளவேனில் தொடக்க சித்திரை புத்தாண்டாய் கொண்டாடப் பட்டது என அறியலாம்.
இலங்கையில் தமிழரைப் போல சிங்களவருக்கு தனி ஆண்டுக் கணக்கு இல்லாததால், சித்திரை ஒன்றையே அவர்களும் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்.
போகியை போல,
புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை தூய்மை செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவளிப்பர்.
மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான விளை பொருட்களை வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது நன்னிமித்தமாகக் கருதப்படுகின்றது.
புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.
வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும்.
தமிழர்க்குத் தொடர் ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு.
மா.மாரிராஜன்... ஏன் சித்திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளீர்கள் என ஒரு நண்பர் கேள்வி கேட்கிறார்.? கேள்விக்குப் பதில். வரலாற்று நிகழ்வுகளின் காலக் கணிப்பை உறுதி செய்யும் வானியல்த் தரவுகள் அனைத்தும் சித்திரை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டுதான் துவங்கும். கடந்தகால கல்வெட்டு சாசனங்களில் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. சக , கலி வருடம், மாதம், நாள், நட்சத்திரம், திதி, அமாவாஸை, பௌர்ணமி, சூரியகிரகணம் , மற்றும் பல விபரங்கள் ஒன்றோ இரண்டோ அனைத்துமோ இருக்கும். இதைக்கொண்டு வரலாற்றுக் காலத்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். துல்லியமான தமிழர்களின் வானவியல் கணக்கீடு இது. இந்த கணக்கீடு முறையைக் கொண்டுதான் 1500 ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகளை கணித்து ஆவணப்படுத்தியுள்ளனர்.. இராஜராஜனின் கல்வெட்டு சாசனம் .. சகம் வருடம் மற்றும் சில வானியல் குறிப்புகள். இதை பார்த்திப என்னும் தமிழ் தொடராண்டாக மாற்றி மேலும் சில சாசனங்களுடன் ஒப்பீடு செய்து.. இராஜராஜன் பதவியேற்ற நாள்.. 985 ஆம் வருடம் ஜூலை மாதம் 18 ஆம் தேதி புனர்வசு நட்சத்திரம் என்று கணித்துள்ளார்கள். சக , கலி வருடம் இல்லாத வானியல் குறிப்புகளைக் கொண்டு தஞ்சைப் பெரியகோவில் குடமுழுக்கு நடைபெற்ற நாள்... 1010 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 நாள் சனிக்கிழமை என்று ஆவணப்படுத்தியுள்ளார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை .. வருடம், மாதம், நாள், கிழமை, நட்சத்திரம்.l என்று துல்லியமாகக் கொண்டு கணிக்கப்பட்டது தமிழர்களின் வரலாற்று திகழ்வுகள் மட்டுமே. இந்த கணக்கீடு முறையில் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் முக்கிய குறிப்பு.... " Chittrai .. Which is the first month of the tamil solar year." ஆகவேதான் சித்திரையை தமிழர்களின் ஆண்டுத் துவக்க மாதம் என்கிறோம். இதில் மாற்றம் கண்டால் ஒட்டு மொத்த வரலாறும் பிழையாகும்.
|
||||||||
![]() |
||||||||
by Swathi on 14 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|