|
|||||
ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் அருணாச்சலம் முருகானந்தம் |
|||||
![]() 'டைம்' பட்டியலில் இடம்பிடித்த தமிழர் முருகானந்தம்! அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. டைம் (TIME) சஞ்சிகையின் உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான அணையாடைகளை (sanitary napkins) மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் இடம் பிடித்துள்ளார் . அருணாச்சலம் முருகானந்தம் கோவை ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஓர் கண்டுபிடிப்பாளர் ஆவார். சிற்றூர்களில் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய மலிவான தீர்வைக் காண வேண்டியத் தேவையை வெளிப்படுத்தியவர். வணிகமுறையில் தயாரிக்கப்படும் விடாய்க்கால அணையாடைகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தயாரிக்கக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமை பெற்றவர். ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அணையாடைகளை தயாரித்து வருகிறார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது. அவருக்கு நம் வாழ்த்துகளை தெரிவிப்போம்.
|
|||||
by Swathi on 27 Apr 2014 0 Comments | |||||
Tags: Arunachalam Muruganantham Muruganantham Sanitary Napkin Napkin Napkin Machine Napkin Machine Low Cost அருணாச்சலம் முருகானந்தம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|