பெருகி வரும் தொழிற்சாலைகளின் காரணமாகவும், அசுத்தம் அடையும் சுற்று புறத்தின் காரணமாகவும் பல்கிப்பெருகியுள்ள நோய்களில், இன்றைய நிலையில் ஆஸ்துமாதான் முக்கியமான இடத்தில் உள்ளது.
ஆஸ்துமா நோய் வருவதற்கான காரணங்களையும், வராமல் தடுக்கும் வழிமுறைகளையும், அறிகுறிகளையும் பற்றி இப்போது பார்ப்போம்.
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.
ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் :
1. சிகரட் பிடித்தல்.
2. கயிறு துகள், மரத்தூள்
3. செல்லப் பிராணிகளின் முடி
4. சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு
5. அடிக்கடி மாறும் காலநிலை
6. மன அழுத்தம்
7. வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை
8. சளித்தொல்லை
9. தும்மல் பிரச்னை
10. பரம்பரை காரணம் (குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரலாம்).
அறிகுறிகள்...
1. மூச்சு இளைத்தல் (வீசிங் பிரச்னை)
2. அடிக்கடி இருமுவது, தும்முவது போன்ற பிரச்னைகள்
3. முகம், உதடு ஊதா நிறத்தில் மாறுவது
4. அடிக்கடி, திடீரென ஏற்படும் சுவாசக் கோளாறு
5. பயம், பதட்டம் காரணமாக அடிக்கடி வியர்த்தல்
6. நெஞ்சுவலி
7. சீரற்ற இதயத் துடிப்பு
தீர்வு...
1. சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
2. மருத்துவர் அறிவுரையோடு 'இன்ஹேலர் தெரப்பி' மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.
4. சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
5. தூசி இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும்.
6. குளிர்பானங்கள், ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
7. தொடர்ந்து அடிக்கடி உடல் நிலையைப் பரிசோதனை செய்து, மருத்துவரின் அறிவுரையை பின்பற்ற வேண்டும்.
தடுக்கும் வழிமுறைகள்...
1. படுக்கை அறையை சுத்தமாக வைத்துகொள்ளுங்கள். குறிப்பாக தலையணை உறை, பெட் ஷீட் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்.
2. வீட்டில் தூசி படியவிடாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தூசிகளை அகற்றும்போது முகத்தில் மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.
3. ஏசி அளவை நார்மலாக வைத்திருக்க வேண்டும். அறைக்கு வெளியே உள்ள வெப்ப நிலையைவிட, அறையில் அதீத குளிரில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
4. சுத்தமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வீட்டில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மூக்கை மறைத்தவாறு முழுமையாக ஹெல்மெட் அணிய வேண்டும், அல்லது மாஸ்க் கட்டிக்கொள்ள வேண்டும்.
6. தொழிற்சாலை அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தூசு அதிகம் இருந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
7. சிகரெட் பிடிக்கவும் கூடாது; சிகரெட் புகைப்பவர்கள் அருகில் நிற்கவும் கூடாது.
8. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் ஒவ்வாமை இருந்தால் அந்த பிராணியை முடிந்த வரையில் தனி அறையில் வைத்திருக்க வேண்டும் அதன் அருகில் செல்ல கூடாது.
9. வருடம் ஒருமுறை சுவாச பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
10. எந்த பொருளால் அலர்ஜி ஏற்பட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஆஸ்துமா பிரச்னை வராமல் தடுக்கலாம். ஏற்கெனவே இருப்பவர்கள், அது தீவிரம் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
-பு.விவேக் ஆனந்த்
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |