LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ராகவன்

அவம்பொழுது

 

மரநிழலில் நீண்டிருந்த தெருவில் உதிர்ந்து கிடந்த சருகுகள் அவனின் காலுக்கு கீழே மொரமொரத்து நொறுங்கின. அது காலுக்கு கீழே நொறுங்கியதில் அவனுக்கு கொஞ்சம் கூச்சமாயும், சுவாரசியமாயும் இருந்திருக்க வேண்டும். செருப்பில்லாமல் காலங்காலமாய் நடந்து பாலம்பாலமாய் விரிசல் விட்டிருந்த பாதங்களில் இந்த கூச்சம் அவனுக்கு ஒருவிதமான குதூகலத்தை கொடுத்திருக்க வேண்டும். இதில் சத்தமில்லாமல் நடக்க முயற்சி செய்வது போல பாசாங்கு செய்தவன், பாதகமில்லை என்பது போல குதித்து நடக்கத் தொடங்கினான். கர்ரக், கர்ரக் என்ற சப்தம் இப்போது அவனை மேலும் உற்சாகப்படுத்தத் தொடங்கியது.
இவன் வருகையை யாரோ யாருக்கோ தகவல் சொல்வது போலத் தோன்றியது, சத்தம் போட்டு சிரித்துக் கொண்டான். இவனின் பேயரவம், இருளின் திரைகளை கிழிக்கத் தொடங்கியிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த நாய் மாதிரி இருந்த எதையோ பதற்றத்துடன் எழுப்பியிருக்கவேண்டும். எழுந்தவுடன் ஏதோ விபரீதத்தை எதிர்பார்த்தது போல, அது ஓடிய தினுசில் பன்றிக்குட்டி மாதிரி இருந்தது, நாய்க்குட்டி மாதிரியும் இருந்தது. இது போல சத்தம் போடாமல் ஓடியது என்ன என்று இருட்டில் சரியாகத் தெரியவில்லை.
குனிந்து கீழே பார்த்தவன் கல் எதுவும் தட்டுப்படாமல் போகவே, உடைத்த மரத்தின் கிளையை எடுத்து ஓடிய அதை நோக்கி எறிந்தான். வளைந்த குச்சி நேராக போகவில்லை, இலக்கு தவறிவிட்டது அல்லது ஏய்ப்பு காட்டி ஓடிவிட்டது அது. இப்போதும் அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டான். யாரைப்பற்றியும் கவலை கொள்பவனாய்த் தெரியவில்லை ஆனாலும் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்வது போல சுத்திமுத்தி பார்த்தான். திரும்பவும் சத்தமாக சிரித்தான்.
மேல்சட்டை ஏதும் இல்லை அவன் மேல், ஒரு காவி நிறத்தில் அல்லது அழுக்கேறிய வேஷ்டி சுருட்டி சுருட்டி, தொடைக்கு மேலாய் கட்டியிருந்தான். அதை கட்டியிருந்தான் என்று எப்படி சொல்வது? இடது முழங்காலில் புண் இருந்தன. சுற்றியும் பக்குத் தட்டிப் போய் ஈக்கள் எங்கும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து சாவதானமாக உறிஞ்சி கொள்ளும் போல. குழியாய் இருந்தது காயம். நல்ல உயரமாய், ஒல்லியாய் இருந்தான், புழுதியில் புரண்டது போல இருந்தது அவன் உடம்பு. காட்டு மூங்கில் மாதிரி நீண்டு, மண்ணோடு கலந்து இருந்தது அவனுடைய தோல். நெஞ்சில் கொஞ்சூண்டு மயிரும் இருந்தது. தலை முடி சுருட்டை சுருட்டையாய், கொஞ்ச இடத்தில் பிரிபிரியாய் சடையும் பிடித்திருந்தது. குறுந்தாடி போன்று வளர்ந்த மயிரிலும், மீசையிலும், ஏதோ ஒட்டியிருந்தது போல ஒரே புழுதி பிசுக்குடன் இருந்தது. சிரிக்கும் போது தெரிந்த பற்களில் அழுத்தமான காவிக்கறையும், ஓரங்களில் வெள்ளை பூத்தும் இருந்தது.
நடந்து கொண்டே வந்தவனுக்கு, பிள்ளையார் கோயில் திண்டில் உட்காரவேண்டும் என்று தோன்றியதும், திடீரென்று நின்றான். இடது பக்கம் திரும்பி பிள்ளையார் கோயில் இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினான். பிள்ளையார் கோயில் என்று நினைத்ததும் அவனுக்கு பசிக்கிற மாதிரி தோன்றியது. பிள்ளையார் கோயில் அரசமரத்துக்கு பின்னால் இருக்கும் நாகர் சிலைகளுக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தான். அங்கு முட்டை வைத்திருப்பார்கள் அல்லது யாராவது கொட்டாங்குச்சியில் பால் ஊத்தி வைத்திருப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். வயித்தை தொட்டுக் கொண்டான். உடனே அதிகம் பசிக்கத் தொடங்கியது மாதிரி இருந்தது. கொள்ளைக்கு போகவேண்டும் போலவும் இருந்தது, இது அவனுக்கு அவ்வளவாய் புரியவில்லை.
பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இருக்கும் சாக்கடையில் வேட்டியைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டான். வெளிக்கு வரவில்லை. எழுந்தவன் சாக்கடைக்கு அருகில் கிடந்த கல்லை எடுத்து சாக்கடைக்குள் எறிந்தான், க்ளக் என்று சத்தத்தில் முழுகியது கல். தண்ணி ஏதும் தெறிக்கவில்லை. அந்த சத்தம் அவனுக்கு கிளர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும். அந்த சத்தத்தை மேலும் கேட்க ஆசைப்பட்டு, இன்னும் ஏதாவது போடலாம் என்று யோசித்துக் கொண்டே கற்களைத் தேடினான். நாலு அடி தாண்டி இருந்த கல்லை எடுத்தவன், அங்கிருந்து பார்த்தபோது இன்னொரு கல் தெரிய அப்படியே நகர்ந்து நகர்ந்து கற்களை பொறுக்கினான். கையில் பிடிக்கமுடியாததால், வேட்டியில் கட்டிக் கொண்டான். இன்னும் கற்கள் அங்கங்கே தெரிய எடுத்துக் கொண்டே போனான்.
திரும்பி பார்த்தபோது எதுக்கு இங்கே வந்தோம் என்று அவனுக்கு சரியாக புரிபடவில்லை. திரும்பவும் மேற்கொண்டு நடந்தான். ரயில் வந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. கூ கூ என்று, அவனும் ரயில் மாதிரியே சுப்பிரமணியபுரம் ரயில்வே கிராஸ் நோக்கி ஓடினான். மடியில் கட்டி வைத்திருந்த கற்கள் ந்டொர ந்டொர என்று கனமாய் ஆடியது. நின்றவன் ரயிலைப் பார்த்ததும் கூவென கத்தியவன்.
கற்கள் உராயும் சப்தத்தில் குஷியாகி, மடியில் கட்டியிருந்த வேட்டியை பிரிக்க ஆரம்பித்தான். ரயில் தடதடவென ஓடியது, பக்கத்தில் நின்றவனுக்கு அந்த அதிர்வு பிடித்திருக்க வேண்டும். இன்னும் பக்கமாய் உடைந்த ரயில்வே தண்டவாளத்தில் நட்டிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு ஒரு வலது கையில் கற்களை எடுத்து எறிய ஆரம்பித்தான். இலக்கில்லாமல் எறிந்த கற்கள் ஒன்றிரண்டு தெறித்து அவன் இடது முழங்கால் புண்ணில் பட்டு, ரத்தம் கொட்டியது. ஆ வென்று கத்தியவன், துடைக்க துடைக்க ரத்தம் வழிந்தது. மடியில் இருந்த பெரிய கற்களை கீழே விட்டான், சின்ன கற்களை திரும்பவும் கட்டிக் கொண்டான்.
ரத்தம் வழிவது நின்ற மாதிரி இருந்தது. கையில் இருந்த ஒரு கல்லை எடுத்து தண்டவாள துண்டில் தட்டினான். இப்போது ரயில் போயிருந்தது. அந்த சத்தம் நல்லாயிருந்தது. தட்டிக் கொண்டே இருந்தான் சிறிது நேரம், அப்புறம் என்ன நினைத்தானோ, ரயில்வே லைனைத் தாண்டி நேராக கிரைம் பிராஞ்ச் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.
தமிழக எண்ணெய் பலகாரக்கடையைத் தாண்டும் போது பலகார வாசனை வெளியே அடித்திருக்க வேண்டும். கொஞ்சம் ஏதோ யோசிப்பது போல நின்றான். மூடியிருந்த கதவைப் போய் பார்த்தவன் இரண்டு மூன்று முறை தட்டினான். கடையை ஒட்டியிருந்த சந்தை மூடியிருக்கும் தகரக்கதவு. பெரிதாக சத்தம் போட்டது, சத்தத்தை கேட்டதும் சிரித்தான். ஒன்றும் சலனமில்லாமல் போகவே.. மூடிய கதவைப் பார்த்து ஏதோ கெட்டவார்த்தையில் சத்தம் போட்டுவிட்டு திரும்பவும் நடந்தான்.கிரைம் பிராஞ்ச் பஸ் ஸடாப்பை ஒட்டியிருந்த அரசமரத்தினடியில் போய் உட்கார்ந்தான்.
உட்கார்ந்த இடத்தில் ஒரு பிள்ளையாரும், சில நாக தெய்வங்களின் சிலைகள் அங்கும் இருந்தன. அதைப் பார்த்ததும், அவனுக்கு சுப்பிரமணியபுரம் பிள்ளையார் கோயில் ஞாபகம் வந்தது. அந்த பிள்ளையார் கோயிலில் இருப்பது போல, முட்டைகளும், பாலும் இருக்கும் என்று தோணவே அதைத் தேடினான். எதுவும் கிடைக்கவில்லை. பசி அவனுக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக விடியத் தொடங்கியிருந்தது. பஸ் ஸ்டாண்டிற்கு ஆட்கள் வர ஆரம்பித்தனர். பஸ் ஸ்டாண்ட் பட்டியக்கல் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு காலை நீட்டிக் கொண்டான். விலகிய சருகின் பின்னால் இருந்த பீடித்துண்டு அவனுக்கு திடீரென்று பீடி குடிக்கும் இச்சையைத் தூண்டியிருக்க வேண்டும். மண்ணில் பதிந்து போயிருந்த பீடியை, மெதுவாய் எடுத்து, மண்ணைத் தட்டினான். பற்றவைக்க என்ன செய்வது என்பது போல பார்த்தவன், பஸ் ஸ்டாப்பில் நின்றவரைப் பார்த்தான். அவரிடம் கை நீட்டினான், அவர் பேண்ட் பையில் துழாவி, ஒரு ரூபாயைக் கொடுத்தார். பக்கத்தில் இருந்த அம்மாள், ஒரு வயர்கூடை வைத்திருந்தாள், இவனைப் பார்த்ததும் கொஞ்சம் பின்னால் சென்றாள். அவனுக்கு சிரிப்பு வந்து, அவளை கை நீட்டி ஏதோ சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டான்.
ரோட்டை கிராஸ் செய்து மெடிக்கல் ஷாப்பின் அருகே இருந்த பெட்டிக்கடையில் இருந்த சிமினி விளக்கில், வெட்டிய சிகரெட் அட்டையில் ஒன்றை எடுத்து பற்ற வைக்க முயன்றான். ஈரமாய் இருந்த பீடி, பற்றிக் கொள்ளவில்லை. அதை எடுத்து வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டான்.
மடியில் கட்டி வைத்திருந்த மிச்ச கற்களின் சத்தம் அவனுக்கு கிசுகிசுப்பாய் இருந்தது போல. அந்த சத்தம் கேட்டதும் ஒரு மாதிரி சிரித்தான். பஸ் ஸ்டாண்டில் ஒரு ஆள் கொடுத்த சில்லரையை வாங்கிக் கொண்டு, அவனையே கவனித்துக் கொண்டிருந்த கடைக்காரன் நாலு பீடிகளை எடுத்துக் கொடுத்தான். கடை முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப்பழத்தார் கண்ணில் பார்த்ததும், அவனுக்கு பசி ஞாபகம் வந்தது.
வாழைப்பழத்துக்கு கை நீட்டினான். கடைக்காரன் பீடியைக் கொடு, வாழைப்பழம் தர்றேன் என்றான். அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய வேட்டி மடிப்பைக் காட்டி, சைகை செய்தான். அவன் வேட்டி மடிப்பை பிடித்துக் கொண்டு முடியாது என்று பலமாய் தலையாட்டினான். கடைக்காரன் போறியா உதை வாங்கிறியா? என்று விரட்டுவது போல கையை ஓங்கினான். வாழைப்பழத்தை பார்த்துக் கொண்டு நின்றவன், ஒன்றுமே செய்யமுடியாமல் நின்று கொண்டிருந்தான்.
பசி அவனுக்கு வயித்தை பிசைந்தது. வயிற்றின் சுருக்கங்களை அழுந்த பிடித்துக் கொண்டு நின்றான். கண்களால் இறைஞ்சுவது போல கடைக்காரனைப் பார்த்தான். கடைக்காரனுக்கு இது ஏற்கனவே பழக்கமானது தான் என்பது போல, கடைக்கு வந்து வாரப்பத்திரிக்கை கேட்டவர், இவனை வினோதமாக பார்த்தபடியே சில்லரையை, பாட்டில் மூடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு புத்தகத்தைக் கொடுத்தான் கடைக்காரன்.
அப்போது ஒரு சின்னப்பையன் வந்து வாழைப்பழம் கேட்டான். கடைக்காரன் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே வாழைப்பழத்தை எடுத்து சின்னப் பையனிடம் கொடுத்தான். வாழைப்பழத்தை அவன் கையில் பார்த்ததும், பிடுங்கிக் கொண்டு ஓடத்தொடங்கினான் அவன். கடைக்காரன் அவசரமாக வெளியே வந்து துரத்த முயல முன்னால் வைத்திருந்த சீசா விழுந்தது. உள்ளே இருந்த கடலைமிட்டாய் எல்லாம் பிளாட்பாரத்தில் சிதறி உடைந்து போன சீசாத் துண்டுகள் மத்தியில் கலந்து கிடந்தது.
கையிலிருந்த வாழைப்பழத்தை பிடுங்கிய அதிர்ச்சியில், சின்னப்பையன் அழத்தொடங்கினான்.

        மரநிழலில் நீண்டிருந்த தெருவில் உதிர்ந்து கிடந்த சருகுகள் அவனின் காலுக்கு கீழே மொரமொரத்து நொறுங்கின. அது காலுக்கு கீழே நொறுங்கியதில் அவனுக்கு கொஞ்சம் கூச்சமாயும், சுவாரசியமாயும் இருந்திருக்க வேண்டும். செருப்பில்லாமல் காலங்காலமாய் நடந்து பாலம்பாலமாய் விரிசல் விட்டிருந்த பாதங்களில் இந்த கூச்சம் அவனுக்கு ஒருவிதமான குதூகலத்தை கொடுத்திருக்க வேண்டும். இதில் சத்தமில்லாமல் நடக்க முயற்சி செய்வது போல பாசாங்கு செய்தவன், பாதகமில்லை என்பது போல குதித்து நடக்கத் தொடங்கினான். கர்ரக், கர்ரக் என்ற சப்தம் இப்போது அவனை மேலும் உற்சாகப்படுத்தத் தொடங்கியது.இவன் வருகையை யாரோ யாருக்கோ தகவல் சொல்வது போலத் தோன்றியது, சத்தம் போட்டு சிரித்துக் கொண்டான். இவனின் பேயரவம், இருளின் திரைகளை கிழிக்கத் தொடங்கியிருந்தது. உறங்கிக் கொண்டிருந்த நாய் மாதிரி இருந்த எதையோ பதற்றத்துடன் எழுப்பியிருக்கவேண்டும். எழுந்தவுடன் ஏதோ விபரீதத்தை எதிர்பார்த்தது போல, அது ஓடிய தினுசில் பன்றிக்குட்டி மாதிரி இருந்தது, நாய்க்குட்டி மாதிரியும் இருந்தது. இது போல சத்தம் போடாமல் ஓடியது என்ன என்று இருட்டில் சரியாகத் தெரியவில்லை.குனிந்து கீழே பார்த்தவன் கல் எதுவும் தட்டுப்படாமல் போகவே, உடைத்த மரத்தின் கிளையை எடுத்து ஓடிய அதை நோக்கி எறிந்தான்.

 

         வளைந்த குச்சி நேராக போகவில்லை, இலக்கு தவறிவிட்டது அல்லது ஏய்ப்பு காட்டி ஓடிவிட்டது அது. இப்போதும் அவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டான். யாரைப்பற்றியும் கவலை கொள்பவனாய்த் தெரியவில்லை ஆனாலும் யாருமில்லை என்பதை உறுதி செய்து கொள்வது போல சுத்திமுத்தி பார்த்தான். திரும்பவும் சத்தமாக சிரித்தான்.மேல்சட்டை ஏதும் இல்லை அவன் மேல், ஒரு காவி நிறத்தில் அல்லது அழுக்கேறிய வேஷ்டி சுருட்டி சுருட்டி, தொடைக்கு மேலாய் கட்டியிருந்தான். அதை கட்டியிருந்தான் என்று எப்படி சொல்வது? இடது முழங்காலில் புண் இருந்தன. சுற்றியும் பக்குத் தட்டிப் போய் ஈக்கள் எங்கும் போகாமல் அங்கேயே உட்கார்ந்து சாவதானமாக உறிஞ்சி கொள்ளும் போல. குழியாய் இருந்தது காயம். நல்ல உயரமாய், ஒல்லியாய் இருந்தான், புழுதியில் புரண்டது போல இருந்தது அவன் உடம்பு. காட்டு மூங்கில் மாதிரி நீண்டு, மண்ணோடு கலந்து இருந்தது அவனுடைய தோல். நெஞ்சில் கொஞ்சூண்டு மயிரும் இருந்தது.

 

        தலை முடி சுருட்டை சுருட்டையாய், கொஞ்ச இடத்தில் பிரிபிரியாய் சடையும் பிடித்திருந்தது. குறுந்தாடி போன்று வளர்ந்த மயிரிலும், மீசையிலும், ஏதோ ஒட்டியிருந்தது போல ஒரே புழுதி பிசுக்குடன் இருந்தது. சிரிக்கும் போது தெரிந்த பற்களில் அழுத்தமான காவிக்கறையும், ஓரங்களில் வெள்ளை பூத்தும் இருந்தது.நடந்து கொண்டே வந்தவனுக்கு, பிள்ளையார் கோயில் திண்டில் உட்காரவேண்டும் என்று தோன்றியதும், திடீரென்று நின்றான். இடது பக்கம் திரும்பி பிள்ளையார் கோயில் இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினான். பிள்ளையார் கோயில் என்று நினைத்ததும் அவனுக்கு பசிக்கிற மாதிரி தோன்றியது. பிள்ளையார் கோயில் அரசமரத்துக்கு பின்னால் இருக்கும் நாகர் சிலைகளுக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்தான். அங்கு முட்டை வைத்திருப்பார்கள் அல்லது யாராவது கொட்டாங்குச்சியில் பால் ஊத்தி வைத்திருப்பார்கள் என்று அவனுக்குத் தோன்றியிருக்க வேண்டும். வயித்தை தொட்டுக் கொண்டான். உடனே அதிகம் பசிக்கத் தொடங்கியது மாதிரி இருந்தது. கொள்ளைக்கு போகவேண்டும் போலவும் இருந்தது, இது அவனுக்கு அவ்வளவாய் புரியவில்லை.

 

       பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இருக்கும் சாக்கடையில் வேட்டியைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டான். வெளிக்கு வரவில்லை. எழுந்தவன் சாக்கடைக்கு அருகில் கிடந்த கல்லை எடுத்து சாக்கடைக்குள் எறிந்தான், க்ளக் என்று சத்தத்தில் முழுகியது கல். தண்ணி ஏதும் தெறிக்கவில்லை. அந்த சத்தம் அவனுக்கு கிளர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும். அந்த சத்தத்தை மேலும் கேட்க ஆசைப்பட்டு, இன்னும் ஏதாவது போடலாம் என்று யோசித்துக் கொண்டே கற்களைத் தேடினான். நாலு அடி தாண்டி இருந்த கல்லை எடுத்தவன், அங்கிருந்து பார்த்தபோது இன்னொரு கல் தெரிய அப்படியே நகர்ந்து நகர்ந்து கற்களை பொறுக்கினான். கையில் பிடிக்கமுடியாததால், வேட்டியில் கட்டிக் கொண்டான். இன்னும் கற்கள் அங்கங்கே தெரிய எடுத்துக் கொண்டே போனான்.திரும்பி பார்த்தபோது எதுக்கு இங்கே வந்தோம் என்று அவனுக்கு சரியாக புரிபடவில்லை. திரும்பவும் மேற்கொண்டு நடந்தான். ரயில் வந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. கூ கூ என்று, அவனும் ரயில் மாதிரியே சுப்பிரமணியபுரம் ரயில்வே கிராஸ் நோக்கி ஓடினான். மடியில் கட்டி வைத்திருந்த கற்கள் ந்டொர ந்டொர என்று கனமாய் ஆடியது. நின்றவன் ரயிலைப் பார்த்ததும் கூவென கத்தியவன்.கற்கள் உராயும் சப்தத்தில் குஷியாகி, மடியில் கட்டியிருந்த வேட்டியை பிரிக்க ஆரம்பித்தான்.

 

          ரயில் தடதடவென ஓடியது, பக்கத்தில் நின்றவனுக்கு அந்த அதிர்வு பிடித்திருக்க வேண்டும். இன்னும் பக்கமாய் உடைந்த ரயில்வே தண்டவாளத்தில் நட்டிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு ஒரு வலது கையில் கற்களை எடுத்து எறிய ஆரம்பித்தான். இலக்கில்லாமல் எறிந்த கற்கள் ஒன்றிரண்டு தெறித்து அவன் இடது முழங்கால் புண்ணில் பட்டு, ரத்தம் கொட்டியது. ஆ வென்று கத்தியவன், துடைக்க துடைக்க ரத்தம் வழிந்தது. மடியில் இருந்த பெரிய கற்களை கீழே விட்டான், சின்ன கற்களை திரும்பவும் கட்டிக் கொண்டான்.ரத்தம் வழிவது நின்ற மாதிரி இருந்தது. கையில் இருந்த ஒரு கல்லை எடுத்து தண்டவாள துண்டில் தட்டினான். இப்போது ரயில் போயிருந்தது. அந்த சத்தம் நல்லாயிருந்தது. தட்டிக் கொண்டே இருந்தான் சிறிது நேரம், அப்புறம் என்ன நினைத்தானோ, ரயில்வே லைனைத் தாண்டி நேராக கிரைம் பிராஞ்ச் பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.தமிழக எண்ணெய் பலகாரக்கடையைத் தாண்டும் போது பலகார வாசனை வெளியே அடித்திருக்க வேண்டும். கொஞ்சம் ஏதோ யோசிப்பது போல நின்றான்.

 

          மூடியிருந்த கதவைப் போய் பார்த்தவன் இரண்டு மூன்று முறை தட்டினான். கடையை ஒட்டியிருந்த சந்தை மூடியிருக்கும் தகரக்கதவு. பெரிதாக சத்தம் போட்டது, சத்தத்தை கேட்டதும் சிரித்தான். ஒன்றும் சலனமில்லாமல் போகவே.. மூடிய கதவைப் பார்த்து ஏதோ கெட்டவார்த்தையில் சத்தம் போட்டுவிட்டு திரும்பவும் நடந்தான்.கிரைம் பிராஞ்ச் பஸ் ஸடாப்பை ஒட்டியிருந்த அரசமரத்தினடியில் போய் உட்கார்ந்தான்.உட்கார்ந்த இடத்தில் ஒரு பிள்ளையாரும், சில நாக தெய்வங்களின் சிலைகள் அங்கும் இருந்தன. அதைப் பார்த்ததும், அவனுக்கு சுப்பிரமணியபுரம் பிள்ளையார் கோயில் ஞாபகம் வந்தது. அந்த பிள்ளையார் கோயிலில் இருப்பது போல, முட்டைகளும், பாலும் இருக்கும் என்று தோணவே அதைத் தேடினான். எதுவும் கிடைக்கவில்லை. பசி அவனுக்கு அதிகமாகிக் கொண்டே வந்தது.கொஞ்சம் கொஞ்சமாக விடியத் தொடங்கியிருந்தது. பஸ் ஸ்டாண்டிற்கு ஆட்கள் வர ஆரம்பித்தனர். பஸ் ஸ்டாண்ட் பட்டியக்கல் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு காலை நீட்டிக் கொண்டான். விலகிய சருகின் பின்னால் இருந்த பீடித்துண்டு அவனுக்கு திடீரென்று பீடி குடிக்கும் இச்சையைத் தூண்டியிருக்க வேண்டும். மண்ணில் பதிந்து போயிருந்த பீடியை, மெதுவாய் எடுத்து, மண்ணைத் தட்டினான். பற்றவைக்க என்ன செய்வது என்பது போல பார்த்தவன், பஸ் ஸ்டாப்பில் நின்றவரைப் பார்த்தான். அவரிடம் கை நீட்டினான், அவர் பேண்ட் பையில் துழாவி, ஒரு ரூபாயைக் கொடுத்தார். பக்கத்தில் இருந்த அம்மாள், ஒரு வயர்கூடை வைத்திருந்தாள், இவனைப் பார்த்ததும் கொஞ்சம் பின்னால் சென்றாள். அவனுக்கு சிரிப்பு வந்து, அவளை கை நீட்டி ஏதோ சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டான்.ரோட்டை கிராஸ் செய்து மெடிக்கல் ஷாப்பின் அருகே இருந்த பெட்டிக்கடையில் இருந்த சிமினி விளக்கில், வெட்டிய சிகரெட் அட்டையில் ஒன்றை எடுத்து பற்ற வைக்க முயன்றான்.

 

         ஈரமாய் இருந்த பீடி, பற்றிக் கொள்ளவில்லை. அதை எடுத்து வேட்டி மடிப்பில் சொருகிக் கொண்டான்.மடியில் கட்டி வைத்திருந்த மிச்ச கற்களின் சத்தம் அவனுக்கு கிசுகிசுப்பாய் இருந்தது போல. அந்த சத்தம் கேட்டதும் ஒரு மாதிரி சிரித்தான். பஸ் ஸ்டாண்டில் ஒரு ஆள் கொடுத்த சில்லரையை வாங்கிக் கொண்டு, அவனையே கவனித்துக் கொண்டிருந்த கடைக்காரன் நாலு பீடிகளை எடுத்துக் கொடுத்தான். கடை முனையில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப்பழத்தார் கண்ணில் பார்த்ததும், அவனுக்கு பசி ஞாபகம் வந்தது.வாழைப்பழத்துக்கு கை நீட்டினான். கடைக்காரன் பீடியைக் கொடு, வாழைப்பழம் தர்றேன் என்றான். அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய வேட்டி மடிப்பைக் காட்டி, சைகை செய்தான். அவன் வேட்டி மடிப்பை பிடித்துக் கொண்டு முடியாது என்று பலமாய் தலையாட்டினான். கடைக்காரன் போறியா உதை வாங்கிறியா? என்று விரட்டுவது போல கையை ஓங்கினான். வாழைப்பழத்தை பார்த்துக் கொண்டு நின்றவன், ஒன்றுமே செய்யமுடியாமல் நின்று கொண்டிருந்தான்.பசி அவனுக்கு வயித்தை பிசைந்தது. வயிற்றின் சுருக்கங்களை அழுந்த பிடித்துக் கொண்டு நின்றான். கண்களால் இறைஞ்சுவது போல கடைக்காரனைப் பார்த்தான்.

 

           கடைக்காரனுக்கு இது ஏற்கனவே பழக்கமானது தான் என்பது போல, கடைக்கு வந்து வாரப்பத்திரிக்கை கேட்டவர், இவனை வினோதமாக பார்த்தபடியே சில்லரையை, பாட்டில் மூடியில் வைத்தார். எடுத்துக் கொண்டு புத்தகத்தைக் கொடுத்தான் கடைக்காரன்.அப்போது ஒரு சின்னப்பையன் வந்து வாழைப்பழம் கேட்டான். கடைக்காரன் அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே வாழைப்பழத்தை எடுத்து சின்னப் பையனிடம் கொடுத்தான். வாழைப்பழத்தை அவன் கையில் பார்த்ததும், பிடுங்கிக் கொண்டு ஓடத்தொடங்கினான் அவன். கடைக்காரன் அவசரமாக வெளியே வந்து துரத்த முயல முன்னால் வைத்திருந்த சீசா விழுந்தது. உள்ளே இருந்த கடலைமிட்டாய் எல்லாம் பிளாட்பாரத்தில் சிதறி உடைந்து போன சீசாத் துண்டுகள் மத்தியில் கலந்து கிடந்தது.கையிலிருந்த வாழைப்பழத்தை பிடுங்கிய அதிர்ச்சியில், சின்னப்பையன் அழத்தொடங்கினான்.

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.