தேவையானவை :
1. அவரைக்காய் - 200 கிராம்
2. பாசிப்பருப்பு - 100 கிராம்
3. தேங்காய்த்துருவல் - ஒரு கப்
4. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
5. சீரகம் - ஒரு டீஸ்பூன்
6. காய்ந்த மிளகாய் - ஒன்று
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. தேங்காய்த்துருவல், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
2. பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
3. இதனுடன் பாசிப்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த கூட்டை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
|