LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

அவரவர் அகராதிகள் - சேயோன் யாழ்வேந்தன்

நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.

நான் மகிழ்ச்சித் துள்ளலுடன் நடப்பதை 
நீ கடைக்கண்ணால் பார்த்தாய்.
நான் மகிழ்ந்தது 
உனக்கு கொடை கொடுக்க முடிந்ததற்காக அல்ல;
குடை இருந்தும்
நான் நனைய முடிந்தற்காகவே.

உன் கூந்தலிலிருந்த ரோஜா
கீழே விழுந்ததை
நான் வருத்தத்துடன் பார்த்ததை 
நீ ஓரக்கண்ணால் பார்த்தாய்.
நான் வருந்தியது 
உன் கூந்தலிலிருந்து
ரோஜா விழுந்ததற்காக அல்ல,
அது விழுந்ததற்காகவே.


என் மகிழ்ச்சியையும்
வருத்தத்தையும் 
உனது அகராதியில் 
அர்த்தப்படுத்திக்கொண்டு,
ஓர் ஏளனப் பார்வையோடு
எனக்குக் குடையும் விடையும் தந்து
நீ நிழற்குடையில் ஒதுங்கினாய்.
அப்படி ஒரு பார்வை பார்த்ததனால் 
உனக்கு
என்ன கிடைத்தது?
எனக்கு -
ஒரு கவிதை.


- சேயோன் யாழ்வேந்தன்

 

 
by Swathi   on 28 Jan 2015  0 Comments
Tags: Avaravar Agarathigal   அவரவர் அகராதிகள்   அகராதிகள்   Agarathigal   Seyon Yazhvaendhan   Seyon Yazhvaendhan Kavithaigal   சேயோன் யாழ்வேந்தன்  
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன் நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன்
கவி ருது வான போது - சேயோன் யாழ்வேந்தன் கவி ருது வான போது - சேயோன் யாழ்வேந்தன்
எனக்குப் பேய் பிடித்திருக்கிறது - சேயோன் யாழ்வேந்தன் எனக்குப் பேய் பிடித்திருக்கிறது - சேயோன் யாழ்வேந்தன்
மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன் மணல் இட்லி - சேயோன் யாழ்வேந்தன்
மலரின் பாரம் - சேயோன் யாழ்வேந்தன் மலரின் பாரம் - சேயோன் யாழ்வேந்தன்
அவரவர் அகராதிகள் - சேயோன் யாழ்வேந்தன் அவரவர் அகராதிகள் - சேயோன் யாழ்வேந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.