LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- பல் பராமரிப்பு(Dental Care)

ஆயுர்வேதம் சொல்லும் பற்கள் பராமரிப்பு டிப்ஸ்

பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நம்மால் பல பல் வியாதிகளை தடுக்க முடியும். பற்கள் இயற்கையாகவே சிலருக்கு அழகாய், வெண்மையாய், வரிசையாய், உறுதியாய், கடினமான பொருட்களையும் உடைத்து கூழாக்கும் சக்தியுடன் அமைகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பலவித கோணல்களுடன் வீபரீதமாக அமைந்துள்ளன. பல் அழகாக வரிசையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல் கிளிப்புகள் அணிகின்றனர். துருத்தி நிற்கும் பற்களை பலமாக உள்ளே இழுக்கும் இது போன்ற கிளிப் முறைகளால் முகத்தில் அமைந்துள்ள நரம்புகளிலும் ரத்தக்குழாய்களிலும் அழுத்தம் அதிகமாகி மிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வகை வைத்ய முறையை தவிர்ப்பது நலம்.

பற்களின் பராமரிப்பில் குழந்தைப் பருவம் முதலே முழு கவனமும் செலுத்தினால் பற்கள் அழகாகவும் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். அதைப் பெறுவதற்கு உள்ளும் வெளியுமாக உணவும் மருந்துகளும் உதவுகின்றன.எலும்பு தாதுவிலிருந்துதான் பற்கள் வலிமை பெறுகின்றன. அதனால் நமது உடலில் எலும்பை பலப்படுத்தும் உணவும் பானமும் மருந்துகளும் சிறுவயது முதலே உட்கொள்ளத் தொடங்கினால் எலும்புடன் பற்களும் உறுதிப்படுகின்றன. உணவில் பால் - தயிர் - மோர் - வெண்ணெய் - நெய் மருந்துகளில் - மான் கொம்பு - பவிழம் - முத்து - முத்துச்சிப்பி - சோழி - அப்ரகம் - இரும்பு ஆகியவற்றை புடம் மற்றும் பாவன முறைகளாக சுத்தி செய்து உள்ளுக்குச் சாப்பிட பற்கள் விரைவில் பலம் பெறுகின்றன.

வெளிவழியாக பற்களை நம்மால் இருவழிகளில் பாதுகாக்க முடியும். அவை

1. சுத்தி முறைகள்
2. வாய் கொப்பளித்தல்

பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. தொடர்ந்து இதை உபயோகிப்பதன் மூலம் பற்கள் தேய்வை அடையாமலும், ஈறுகளும் வேர்களும் உறுதியும் பெறுகின்றன. வலி வராமலும், புளிப்புச் சுவையினால் ஏற்படும் கூச்சமும் உண்டாகாது. கடினமான உணவுகளையும் எளிதில் உடைத்து சுவைத்துச் சாப்பிட நல்லெண்ணெய் கண்டூஷம் உதவுகிறது.பல் துலக்கும் முறையும், எப்போதெல்லாம் பல் துலக்க வேண்டும் என்ற விஷயத்தையும் சிரத்தையுடன் அனுஷ்டிப்பதன் மூலம் ஊத்தை அழுக்கு ஆகியவற்றை முழுமையாக அகற்ற முடியும். அவ்வாறு சுத்தமாக வைத்திருந்தால்தான் உணவின் சாரத்தை பற்கள் முழு அளவில் பெற்று பயனடையும்.

காலையில் கண்விழித்ததும் மலஜலங்களை போக்கி வாயை நன்கு தண்ணீரினால் கொப்பளித்து பிறகு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்டதும் பல் துலக்க வேண்டும். ஆனால் இன்று அது நடைமுறை சாத்யம் அல்லாததால் இரவில் படுக்கும்முன் பல் துலக்குவது நல்ல பழக்கமாகும். இரவில் பல் தேய்த்த பிறகு கால்சியம் சத்து நிறைந்த பால், பழ ரஸங்களை அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் பற்களில் சத்து படிவதால் பலவித பல்நோய்களும் பசியைத் தூண்டும். நெருப்பும் கெட்டுவிடும். ராத்திரி முழுவதும் வாயில் பற்களின் இடுக்குகளில் எவ்வித பண்டமும் தங்கும்படியாக விடக்கூடாது.இன்று நாம் பிரஷ்தான் பல் தேய்க்க பயன் படுத்துகிறோம். நம் முன்னோர்கள் ஈரமுள்ள ஆல், அத்தி, எருக்கு, கருவேல், இலந்தை மரக்குச்சிகளை உபயோகித்து பற்களை பாதுகாத்தனர். இவ்வகை குச்சிகள் துவர்ப்பு, கசப்பு, காரம் போன்ற சுவை நிரம்பியவை, வாய் மற்றும் பற்களில் அழுக்கு சேராதபடி பாதுகாப்பதில் இச்சுவைகள் பெரிதும் உதவுகின்றன. ஆலங்குச்சியினால் காந்தி, புங்கங் குச்சியினால் விஜயம், இச்சியினால் பொருள் விருத்தி, இலந்தையினால் இனிமையான குரல்வளம், கருங்காலியினால் நல்ல வாஸனை, அத்தியினால் வாக்ஸித்தி, இலுப்பையினால் திடமான செவி, நாயுருவியினால் தைர்யமும், புத்தி கூர்மையும், மருத மரத்தினால் ஆயுள் விருத்தி, தலைமயிர் நரையின்மை, போன்றவை ஏற்படுவதாக பழைய நூல்களில் காண்கின்றன.

அரச மரக்குச்சி மங்களகரமானது. பல் தேய்க்க பயன்படுத்தக்கூடாது. ஆலம் விழுதுகள் பல் தேய்ப்பதற்கு உத்தமமானது. பற்களை உறுதிப்படுத்துவதில் நிகரற்றது. நகர வாழ்க்கையில் குச்சிகள் சாத்தியமில்லை என்ற எண்ணம் உள்ளது. பிரஷ் உபயோகிப்பதால் குச்சிகளின் நன்மை எதுவும் கிடைக்காதென்றாலும் வேறவழியில்லாது பயன்படுத்துபவர்கள் அதில் அழுக்கு சிறிதும் சேராதவாறு அடிக்கடி வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும்.பல்பொடிகளை பற்களில் தேய்க்கும் போது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிகவும் அவஸர ஸமயங்களில் மட்டுமே விரலை பல் தேய்க்க பயன்படுத்தலாம். வைத்ய சாஸ்திரம் மட்டுமல்ல, தர்ம சாஸ்திரங்கள் கூட விரலினால் பல் துலக்குவதைப் பாபம் என்று கண்டிக்கின்றன.பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்ப் பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு கொப்பளிக்க வேண்டும்.ஆயுர்வேத மருந்துகளில் பல் பாதுகாப்பிற்கு அரிமேதஸ் தைலம், 10 சொட்டு வெந்நீருடன் காலை, இரவு பல் தேய்த்த பிறகு கொப்பளிக்க பயன்படுத்துதல் நலம் தரும்.

by Swathi   on 10 Dec 2012  13 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
21-Sep-2018 04:48:21 Pradeep said : Report Abuse
Nan vettrilai sapidren athigama itha niruththa konjam tips kodukka mudiyuma plzz romba naala try panren ennala mudiyama poguthu plzz
 
05-Jun-2018 14:24:30 Tamil said : Report Abuse
Sir yanaku mouth gum lower la skin colour dark white ta irukku appram skin light ta irukku but upper gum la black colour la irukku sir but nan yantha tobacco la use panarathu illa silla peru mouth oral cancer nu solaranga sir . Intha problem Ku oru solutions sollunga sir apram intha gum colour change agarathuku medicine iruntha sollunga sir.
 
23-Aug-2017 07:19:07 arunadevi said : Report Abuse
எனக்கு பல் சொத்தை உள்ளது அது மிகுந்த வலியும் உள்ளது எனக்கு ஒரு நல்ல வைத்தியம் சொல்லுக ப்ளசிஸ்
 
27-Apr-2017 07:30:50 Rojaramani said : Report Abuse
வாய் நடுக்கமாக உள்ளது பல் பிடுங்கி ௨ ௧/௨ வருடம் ஆகுது இப்போ வாய் பகுதி வலிக்குது நடுங்குது எனக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
 
07-Mar-2017 06:03:57 ramesh kumar said : Report Abuse
Friend teeth was gape in side
 
02-Mar-2017 05:04:14 lavanya said : Report Abuse
கேவிட்டிஸ் ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்கு எதுக்கு சொலுஷன் சொல்லுக ப்ளீஸ்
 
08-Feb-2017 03:17:23 sinju said : Report Abuse
பற்களில் உள்ள மஞ்சள் நிறம் கரை நீங்க டிப்ஸ் தாருங்கள்
 
20-Jan-2017 04:38:11 sheik said : Report Abuse
மஞ்சள் கரை பற்களை சுத்தம் செய்யவும் ,பல்லுக்கு பின்னல் உள்ள கறைகளை எடுக்கவும் டிப்ஸ் கொடுங்க
 
30-Dec-2016 11:55:32 Sangeetha said : Report Abuse
பல்லில் சி வருகிறது .. மருந்து சொலுஷன்...தாருங்கள் ...சார்..
 
22-Jun-2016 13:11:33 செந்தில் said : Report Abuse
நல்ல டிப்ஸ்
 
20-Mar-2016 11:42:33 Rizatha said : Report Abuse
Vaayel thunaartam varutu 2days enna seirathu bt, soothaip patkak ullana bt, daily 2 days prash panrean
 
11-Mar-2016 08:44:37 சிவனைத் said : Report Abuse
என்க்குபூகோளம் தகோலம்என்றல் என்ன பற்றிசொல்லுங்க அதன் வரைபடமும் என்னக்குவேண்டும்
 
11-Jan-2014 03:56:19 சுகன்யா said : Report Abuse
லிப்ஸ் கருப்பாக உள்ளதை சிவப்பாக மாற்ற தீர்வு வேண்டும்.....,
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.