ஊரிலுள்ள ஆண்களில் பலர் ஊர் பொதுவிடத்தில் ஒன்று கூடி ஒரு குழுவாக சங்கு, சிங்கி, போன்ற இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று பஜனைப் பாட்டு பாடுவர். பஜனைப்பாட்டுக்குச் செல்லும்போது கை விளக்குகளையும், தென்னை ஓலை, பனையால் செய்யப்பட்ட தீப்பந்தங்களையும் ஏந்திச் சென்று வெளிச்சமேற்றி சங்கொலி எழுப்பி நோய் பரப்பும் பேய்களை விரட்டுவதே இந்நிகழ்ச்சியாகும். தற்போது புராணக் கதைகளுடன் மார்கழி மாதங்களில் பஜனைப்பாட்டுகள் நடைபெற்று வருகின்றன.காலரா நோய்த் தடுப்பிற்காக குமரி மாவட்டத்திலுள்ள கல்குளம், விளாங்கோடு வட்டங்களில் இரவு 7 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.
|