LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

பீர்பால் வீடு எது

     நண்பர் ஒருவருடைய வீட்டுக்குப் பீர்பால் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒருவர் அவரைப்பார்த்து, ‘அமைச்சர் பீர்பால் வீடு எது?” என்று கேட்டார்.அந்த மனிதர் பீர்பாலை பார்த்ததே இல்லை. ஆனால், அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஏதோ அவசர காரியமாக அவரிடம் ஆலோசிப்பதற்கு விரும்பினார்.பீர்பால் அவரைப் பார்த்தார். பிறகு, ‘அதோ தெரிகிறதே மாடி வீடு, அதுதான் பீர்பால் இல்லம்’ எனச் சுட்டிக்காட்டினார்.


     அந்த மனிதர் பீர்பாலுடைய வீட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கே பீர்பால் இல்லை, வெளியில் சென்றிருப்பதாகவும் சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிடுவார் எனவும் காவலாளி கூறினான். வந்தவர் காத்திருந்தார். சிறிது நேரத்தில் பீர்பால் வீட்டுக்குத் திரும்பினார். அவரைப் பார்த்ததும், வழியில் தான் பார்த்தவரே பீர்பால் என்பதை உணர்ந்து கொண்டு, ”உங்களை வழியில் பார்த்து ”பீர்பால் வீடு எது? என்று கேட்டபொழுது, ”நான்தான் பீர்பால் என்று சொல்லியிருக்கக் கூடாதா?” என்று கேட்டார். ”அமைச்சர் பீர்பால் வீடு எது?” என்றுதான் நீர் என்னிடம் கேட்டீர். நான் வீட்டைக்காண்பித்தேன். ”பீர்பால் எங்கே?” என்று கேட்டிருந்தால், ”பீர்பால் உம் எதிரில் நின்று கொண்டிருக்கிறார்’ என்று கூறியிருப்பேன் என்றார்.

by kalaiselvi   on 07 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.