LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

தியானத்தின் நன்மைகள்

விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். உடளவில் ஏற்படும் நன்மைகள் :

... 1) தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்பு குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது. 

2) (Blood pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.

3) எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

4) உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்து பிறகு படிப்படியாகக் குறைகிறது.

5) உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.

6) ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகின்றன. 


இனி உள்ளத்தளவில் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:


1) மனம் குவிகிறது. இதனால் மன ஆற்றல் அதிகரிக்கிறது.

2) மூலையில் உள்ள பல புதிய நூற்றுக்கணக்கான செல்கள் தியானத்தினால் ஊக்குவிக்கப்பட்டு இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் அறிவு கூர்மை பெறுகிறது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கிறது.

3) "As a man thinketh, so he becomes it," "A man is what he thinks all day long" என்பது இன்றைய மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. அந்தக் கூற்றுப்படி நாம் துரியாதீத தவத்தில் சுத்த வெளியை நினைப்பதினால், நாம் நாளடைவில் சுத்தவெளியாக, பிரம்மமாக மாறி விடுகிறோம்.

4) விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமான அணுவை ஆராய்கிறார்கள். அதே நேரத்தில் கோடானு கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எண்ணுகிறார்கள். அதிலேயே தோய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதனால் அவர்கள் "பீட்டா" wave-ல் இருக்க முடியாது. "ஆல்பா" wave -க்கு பக்கத்தில் வருகிறார்கள். "விஞ்ஞானிகள் பரம்பொருளுக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்". ஆக தியானத்தின் மூலம் உடல் அளவிலும், உள்ளத்தளவிலும் பல நன்மைகள் உண்டு என்பது தெளிவாக விளங்குகிறது.

by Swathi   on 20 Jan 2014  1 Comments
Tags: Meditation   Meditation Benefits   Meditation Tamil   Meditation Benefits Tamil   தியானம்   தியானத்தின் நன்மைகள்     
 தொடர்புடையவை-Related Articles
தியான யுக்தி தியான யுக்தி
தியானம் என்பது ஒரு செயலல்ல தியானம் என்பது ஒரு செயலல்ல
இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது இசை தியானத்திற்கு வெகு அருகில் உள்ளது
தூக்கத்தில் தியானம் தூக்கத்தில் தியானம்
பிரமிட் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால் சக்தி பெருகும் என்கிறார்களே அது உண்மையா !! ஹீலர் பாஸ்கர் பிரமிட் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால் சக்தி பெருகும் என்கிறார்களே அது உண்மையா !! ஹீலர் பாஸ்கர்
தியானம் மற்றும் யோகாவிற்கு சிறந்த நேரம் எது? ஹீலர் பாஸ்கர் தியானம் மற்றும் யோகாவிற்கு சிறந்த நேரம் எது? ஹீலர் பாஸ்கர்
நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா? நீங்கள் இது வரை தூங்கியிருக்கிறீர்களா?
அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர் அக ஒளி தியானம் - ஹீலர் பாஸ்கர்
கருத்துகள்
01-Mar-2015 03:49:16 வீரபாண்டி said : Report Abuse
எனக்கு ஒரு சந்தேகம் நான் உட்காரும் பொது என் பின் தண்டுவடம் சுவற்றில் படும் படி சாய்ந்து உட்ட்கரலமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.