|
|||||
வெத்தலையின் மருத்துவ குணங்கள் !! |
|||||
கோவில் விஷேசமாக இருந்தாலும் சரி, வீட்டு விஷேசமாக இருந்தாலும் சரி முக்கியமாக இடம் பெரும் பொருட்களில் வெற்றிலையும் ஒன்று. விருந்தில் எவ்வளவு தான் நிறைய சாப்பிட்டாலும் வெற்றிலையை போட்டால் போதும், ஹெவியான விருந்து சாப்பாட்டை வெத்தலை சுலபமா செரிக்க வைக்கும். இதுமட்டுமில்ல, வெத்தலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு அவற்றைப் பற்றி இங்கு காண்போமா... டென்சனால் உண்டான தலைவலி குணமாக : டென்சன் காரணமாக உண்டான தலைவலியை விரட்ட, ஆறு வெத்தலையை அரைத்து, அந்த விழுதை நெத்தியில பத்து போட்டு, சுமார் அரைமணி நேரம் கண்ணை மூடி படுத்திருந்தால் போதும்... தலைவலி தானாக சரியாகி விடும். குழந்தைகளின் சளி இருமல் குணமாக : தீராத சளி மற்றும் இரும்பலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, வெற்றிலையிலையை, சிறிது கடுகு எண்ணெயில் தேய்த்து, லேசாக நெருப்பில் வாட்டி நாலைந்து முறை வைத்தால் சளி, இருமல் உடனடியாக குணமாகும். கபம் கரைய : வெத்தலைச் சாறும் இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து தொடர்ந்து குடித்து வர கபம் கரையும். தாய்ப்பால் அதிகமாக சுரக்க : போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள், வெத்தலையில் ஆமணக்கு எண்ணெய் பூசி, லேசா வாட்டி, மார்புல வெச்சு கட்டிக்கிட்டு இரவு படுத்து எழுந்தா, மறுநாள் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். சில அம்மாக்களுக்கு மார்பகத்துல பால் கட்டிக்கிட்டு வலியும் வீக்கமும் ஏற்படும். அதுக்கு, வெறும் வாணலில வெத்தலையை போட்டு லேசா வதக்கி, பொறுக்கும் சூட்டுல மார்பகங்கள்ல கட்டினால் வலியும் வீக்கமும் குறையும். பசி எடுக்காத குழந்தைகளுக்கு : சரியா பசியெடுக்காம, சாப்பிடவே கஷ்டப்படுகிற குழந்தைகளுக்கு மூன்று வெற்றிலை சாறோடு, சிறிது மிளகுத்தூள் போட்டு கஷாயம் காய்ச்சி குடிக்க கொடுத்துப் பாருங்க. குழந்தைகளுக்கு கபகபன்னு பசி எடுக்கும். நரம்பு தளர்ச்சி குணமாக: ஒரு டேபிள் ஸ்பூன் வெத்தலைச் சாறும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் கலந்து தினம் இரண்டு வேளை அருந்தி வந்தால், உடல் பலவீனமும் நரம்புத் தளர்ச்சியும் தானாகவே சரியாகி விடும். |
|||||
by Swathi on 25 Sep 2014 7 Comments | |||||
Tags: நரம்பு தளர்ச்சி குணமாக தாய்ப்பால் அதிகமாக சுரக்க தலை வலி குணமாக வெத்தலை மருத்துவ குணங்கள் வெத்தலை பயன்கள் வெத்தலை பாட்டி வைத்தியம் Betel Leaf Medical Benefits | |||||
Disclaimer: |
|||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|