மோட்டூர், சாலியமங்கலம் கிராமங்களில் பிரகலாத சரித்திரம் நாடகம் நடத்தப்படுவதே பாகவத மேளா என்பதாகும். தற்போது காவேரி கல்யாணம், வள்ளி திருமணம் போன்ற நாடகங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கலை கோவிலும், வழிபாடும் சார்ந்த கலையாகும். நிகழ்ச்சி தொடங்கும் போதும், முடியும் போதும் கோவிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொள்வது, விநாயகர் முகமுடிகளை புனிதமாக கருதுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பாகும். மிருதங்கம், தாளம் போன்றவை இதில் இசைக்கப்படும்.
|