ஆண் பெண் இருவரையும் 10 வயதுக்குள் சரி செய்தால் உண்டு. 10 வயதுக்குப் பிறகு வளைக்க முடியாது. சரி செய்தல் என்றால் என்ன? 1. பெற்றோர்களிடம் பணிவாக இருத்தல். 2. பெரியவர்களுடன் அன்பாகப் பழகுதல். 3. நண்பர்களோடு இணக்கமாக இருத்தல். 4. சிக்கனமாக வாழ்தல். 5. வீணாக்காமல் பயன் படுத்துதல். 6. புதிய செய்திகளை அறிந்து கொள்ளுதல். 7. நல்ல செயல்களைக் கற்றுக் கொள்ளுதல்.
இன்றைய சூழல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... என மகிழ்வான அடித்தளத்தை அமைத்து... அதல பாதாளத்தை நோக்கி வேகமாகச் செல்வதற்கு வழி காட்டுகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமுதாயமும் இதை கவனத்தில் கொண்டு அடுத்த தலைமுறையாவது ஆற்றல் உள்ள நல்ல தலைமுறையாக வளர்வதற்கு வழி அமைத்து இயங்க வேண்டும். இதுவே இன்றைய மக்களின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக உள்ளது.
|