|
||||||||
கத்தரிக்காய் வற்றல்(brinjal fry) |
||||||||
தேவையானவை : கத்தரிக்காய் - 1 கிலோ மஞ்சள்பொடி - ஒரு டீஸ் ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : 1.முதலில் கத்தரிக்காய் காம்பினை கிள்ளிவிட்டு நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் பொடி மற்றும் உப்பினைக் கலந்து கொள்ளவும். நீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு கரைத்து கத்தரிக்காய் உள்ள பாத்திரத்தில் ஊற்றவும். கத்தரிக்காய் துண்டங்கள் மூழ்கும் அளவிற்கு புளி நீர் ஊற்றவும். 2. அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்த நிலையில் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைக்கவும். சுமார் ஒரு மணி நேரம் சென்ற பிறகு நீரை வடித்து விட்டு கத்தரிக்காய் துண்டங்களை எடுத்து வெய்யிலில் உலர்த்தவும். வெய்யிலில் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நன்கு உலர்த்தி பிறகு எடுத்து பத்திரப்படுத்தவும். காரக் குழம்பு, வற்றல் குழம்புகளில் இதனை பயன்படுத்தலாம். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|