LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் !

1 டிரேடரஸ் - வணிக மையம்

2 கார்ப்பரேஷன் - நிறுவனம்

3 ஏஜென்சி - முகவாண்மை

4 சென்டர் - மையம், நிலையம்

5 எம்போரியம் - விற்பனையகம்

6 ஸ்டோரஸ் - பண்டகசாலை

7 ஷாப் - கடை, அங்காடி

8 அண்கோ - குழுமம்

9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி

10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி

11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்

12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்

13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை

14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்

15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை

16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்

17 டிம்பரஸ் - மரக்கடை

18 பிரிண்டரஸ் - அச்சகம்

19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்

20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்

21 லித்தோஸ் - வண்ண அச்சகம்

22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்

23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்

24 காபி பார் - குளம்பிக் கடை

25 ஹோட்டல் - உணவகம்

26 டெய்லரஸ் - தையலகம்

27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்

28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்

29 சினிமா தியேட்டர் - திரையகம்

30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்

31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்

32 சிட் பண்ட் - நிதியகம்

33 பேங்க் - வைப்பகம்

34 லாண்டரி - வெளுப்பகம்

35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்

36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்

37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி

38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி

39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்

40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்

41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்

42 ஆட்டோ - தானி

43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்

44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்

45 பேக்கரி - அடுமனை

46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்

47 பசார் - கடைத்தெரு, அங்காடி

48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்

49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை

50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி

51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி

52 பாய்லர் - கொதிகலன்

53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்

54 கேபிள் - கம்பிவடம், வடம்

55 கேபஸ் - வாடகை வண்டி

56 கபே - அருந்தகம், உணவகம்

57 கேன் ஒர்கஸ் - பிரம்புப் பணியகம்

58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை

59 சிமெண்ட் - பைஞ்சுதை

60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்

61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி

62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி

63 கிளினிக் - மருத்துவ விடுதி

64 காபி ஹவுஸ் - குளம்பியகம்

65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,

66 கம்பெனி - குழுமம், நிறுவனம்

67 காம்ப்ளகஸ் - வளாகம்

68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்

69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி

70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்

71 கூரியர் - துதஞ்சல்

72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்

73 சைக்கிள் - மிதிவண்டி

74 டிப்போ - கிடங்கு, பணிமனை

75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்

76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்

77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்

78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்

79 எம்போரியம் - விற்பனையகம்

80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்

81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்

82 பேக்டரி - தொழிலகம்

83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்

84 பாஸ்ட் புட் - விரை உணா

85 பேகஸ் - தொலை எழுதி

86 பைனானஸ் - நிதியகம்

87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி

88 கார்மென்டஸ் - உடைவகை

89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்

90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை

91 ஜூவல்லரி - நகை மாளிகை

92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்

93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி

94 மார்க்கெட் - சந்தை அங்காடி

95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்

96 பேஜர் - விளிப்பான், அகவி

97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு

98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்

99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு

100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்

101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்

102 பார்மசி - மருந்தகம்

103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிபட நிலையம்

104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்

105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்

106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை

107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்

108 பவர்லும் - விசைத்தறி

109 பவர் பிரஸ் - மின் அச்சகம்

110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்

111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்

112 ரப்பர் - தொய்வை

113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்

114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்

115 ஷோரூம் - காட்சிக்கூடம்

116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை

117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்

118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்

119 சப்ளையரஸ் - வங்குநர்,

120 ஸ்டேஷனரி - தோல் பதனீட்டகம்

121 டிரேட் - வணிகம்

122 டிரேடரஸ் - வணிகர்

123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்

124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்

125 டீ ஸ்டால் - தேனீரகம்

126 வீடியோ - வாரொளியம், காணொளி

127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு

128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்

129 எக்ஸ்ரே - ஊடுகதிர்...

by Swathi   on 10 Jul 2013  5 Comments
Tags: நிறுவனங்கள்   தமிழ் பெயர்கள்   Business   Organisation   Tamil Names        
 தொடர்புடையவை-Related Articles
உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!! உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்!!
கடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி கடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி
வியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா? வியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா?
நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் நல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் ! உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் !
தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் ! தெரிந்து கொள்ளுங்கள்! வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் !
கருத்துகள்
06-Mar-2021 07:31:18 கியாசுதீன் said : Report Abuse
நான் கவரிங் கடை உள்ளேன் தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்
 
13-Jun-2019 08:33:13 விஜயசேகர் said : Report Abuse
வணக்கம் நண்பர்களே என்னுடைய சலூன் கடைக்கு அழகான தமிழ் பெயர் வைக்க விரும்புகிறேன் உங்களுக்குத் தெரிந்த தமிழ் பெயர்களை எனக்கு மெயில் பண்ணவும் என்னுடைய whatsapp நொ௯௫௨௪௪௧௯௯௨௧ எடுத்துக்காட்டாக உணவகத்தின் பெயர் திணை அமுது ஒரு முறுக்கு சிப்ஸ் வைக்கும் கடையின் பெயர் நொறுக்ஸ் இதுபோன்று என்னுடைய சலூன் கடைக்கு பெயர் வைக்க விரும்புகிறேன் எனக்கு வாட்ஸ் அப் அல்லது மேல் பண்ணவும் ப்ளீஸ் நன்றி
 
06-Nov-2015 04:43:35 கிருபா said : Report Abuse
இவற்றை நடைமுறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் அடுத்தடுத்த தலைமுறைளையும் சென்றடையும்.
 
25-Jan-2015 03:37:21 manikandan said : Report Abuse
நித்யா மற்றும் மணிகண்டன் இந்த 2 பெயருக்கும் உண்டான தமிழ் மீனிங் என்னுடைய மெயில் கு செண்ட் pannavum
 
19-Dec-2013 08:42:50 மு.தாமரைச் செல்வன் said : Report Abuse
வலைத்தமிழ்-ன் படைப்புகள் ஒவ்வொன்றும் பாரதியின் வேதனையை (தமிழ் இனி மெல்ல சாகும்) துடைக்கும் மாற்று மருந்தாக இருக்கின்றது. எம்மொழி செம்மொழி அதை மேலும் சுவையாக்குகிறது உங்களின் சேவை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.