முன்னுரை திருக்குறள் உயர்ந்த சிந்தனைகளைப் பாடுவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் வாழ்வியல் சார்ந்த கருத்துக்கள் இவற்றுள் குவிந்துள்ளன. குடும்பம், அரசு, சமூகம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளுக்கும் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்த எழுதப்பட்ட ஓர் அறிவுத் தொகுப்பு. வணிகம் குறித்த புரிதலையும். வணிக மேலாண்மையின் முக்கியத்துவத்தையும் வணிகத்தின் இன்றியமையாமையையும் வணிக நோக்குக் குறித்த பார்வையையும், வள்ளுவரின் கருத்துக்கள் வழிக் காண்போம்.
வணிகம்-ஓர் அறிமுகம் பொருளாதார நடவடிக்கைகளை வணிகம் என்பர். மனிதனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வணிகம் தேவைப்படுகிறது. உற்பத்தி (அ) விற்பனைப் பொருள் மீதான இலாப நோக்கு, நுகர்வு வாழ்க்கை என இவை இரண்டும் வணிகத்தின் முதன்மைக் காரணங்களாகும். பொருள் வாழ்வின் இன்றியமையாத தேவையாக இருக்கிறது. பொருளில்லாமல் வாழ்வின் இயக்கம் சீராக இருப்பதில்லை. பொருளின் முக்கியதுவத்தை வள்ளுவர்.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்கிறார் (Devaneya Pavanar, 2017).
வணிகத்தின் சிறப்பு பொருளீட்ட உதவியாக இருக்கும் செய்தொழில்கள் எதுவாயினும் அதை வேற்றுமைப்படுத்த வேண்டியதில்லை. எல்லா உயிர்களின் பிறப்புக்கும் வாழ்வதற்குரிய பொருள் தேவை. பொருளீட்டுதல் உலகப் பொதுவான ஒன்று. அவரவர் அவரவர்க்குத் தெரிந்த தொழில்கள் மூலம் தம் வாழ்வுக்குத் தேவையான பொருளை உருவாக்க வேண்டும் என்னும் சமத்துவ சிந்தனை கொண்டதாக வள்ளுவரின் பார்வை பரந்து விரிந்துள்ளதை, (Gnanasundaram, 2020)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"
என்னும் குறள்வழி அறியலாம் (Devaneya Pavanar, 2017).
வணிக மேலாண்மை எச்செயலயையும் செய்வதற்கு முன்பு யோசித்து முடிவெடுப்பதம் தெளிவடைந்த பின்பு அதற்குத் தேவையான பொருள்களை உடன் வைத்துக் கொள்வதும் இடம், கருவி, காலம் முதலானவற்றை யூகித்து தேர்ந்து கொள்வதும் வணிகத்தில் இன்றியமையாதது என்பதை.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்" (Devaneya Pavanar, 2017).
வணிகத்தைத் தொடங்கும் முன் வினை, பொருள், காலம், கருவி, இடம் ஆகியவற்றை ஆராய வேண்டும்.
வினை எதை ஒருவனால் செய்து முடிக்க முடியுமோ அதற்குரிய செயலில் அவன் இறங்க வேண்டும். அந்தச் செயலை வெற்றிகரமாக முடிக்கத் தேவையான வலிமையைச் சோதித்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபடுகின்ற வினை குறித்தும் அதற்குத் தேவையான தன்வலிமை குறித்தும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதிலிருந்து பின்வாங்கக் கூடாது வினையை முடிப்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். முயற்சியும், தெளிவும் சேர்ந்திருந்தால் எத்தகைய வினையும் சிறப்புற அமையும் என்பதை
'ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்" (Devaneya Pavanar, 2017).
பொருள் பொருளியல் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டது தொழில் அதில் கவனிக்க வேண்டியது முதலீடாகும். தேர்ந்து கொண்ட தொழிலுக்கு ஏற்றவாறு முதலீடு அமைய வேண்டும் என்பதை
'முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை (Devaneya Pavanar, 2017).
காலம் காலமறிந்து ஒரு செயலலைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். திருவள்ளுவர் காலத்தைக் கணிக்கும் மேலாண்மைப் பண்பு வணிகத்துக்கு இன்றியமையாதது தொழிலில் வெற்றி பெறுவதற்கும் இலாபம் ஈட்டுவதற்கும் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் காலத்தைக் கவனிக்க வேண்டியது முக்கியமாகும். தொழிலின் வெற்றியும், தோல்வியும் காலத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. இதனை.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு" (Devaneya Pavanar, 2017)
செயலைச் செய்யும் முறைகளை அறிவதோடு அல்லாமல் காலத்தையும் கணித்துச் செயல்படுதல் வணிகத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும். இதனை
அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் (Devamrya Pavanar, 2017)
கருவி வணிகம் மட்டுமின்றி சமுதாயம், குடும்பம். அரசு, வேளாண்மை போன்ற அனைத்துத் துறைகளுக்கும் ஆக்கக் கருவியாகப் பயன்படுத்துவது அறிவு அதனைக் கொண்டு இலாபத்தைப் பெற முடியம் ஒற்றுமையை நிலை நாட்ட முடியும் அமைதியை உருவாக்க முடியும் ஆட்சியைத் தக்க வைக்க முடியும். இத்தனை நன்மைக்கும் அறிவு' கருவியாக அமைகிறது என்பதனை,
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் என்ற குறள் மூலம் தெளிவுபடுத்துகிறார் (levaneya Pavanar, 2017) அறிவோடு சிந்தித்து அறச் செறிவோடு வணிகம் செய்பவர் வெற்றி பெறுவர்
இடம் வணிகத்தைப் பொறுத்தளவில் முதலீடாக வைக்கும் பொருள் வலிமை தொழிலில் வெற்றி பெறுவதற்கான காலச்சுழல் அதை நோக்கி நகரும் அறிவு எந்தளவுக்கு இன்றியமையாததோ அதே அளவுக்கு இடமறிந்து செயல்படும் நுட்பமும் முக்கியமானது. எத்தகைய செயல்பாடும் விரும்பும் வகையில் முற்றுப் பெற வேண்டுமெனில் இடனறிந்து செயல்படுவது இன்றியமையாதது.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற என்ற குறள் இடமறிந்து செயல்படுவதின் அவசியம் பற்றி எடுத்துரைக்கிறது (Devaneya Pavanar,2017
மேலாண்மை நடவடிக்கைகள் வணிகத்தைப் பொறுத்தளவில் நிர்வாகத்தின் சிறப்புக் கூறுகளில் ஒன்று மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகளைத் தெளிவதும் தேர்வதுமாகும் செயல் குறித்தும், செயல்படும் வினை குறித்தும், செயல்படும் விதம் குறித்தும் முதலீடு குறித்தும், உற்பத்தி குறித்தும் தொழிலாளர் குறித்தும். இலாப
நோக்கு குறித்தும் வகுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் அறிவார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் (Arangarasan, 2015).
உறுதியான செயல்பாடு வணிகத்தில் முக்கியமானது துணிச்சலான முடிவு, முடிவெடுக்கும் ஆற்றல் ஆற்றலைப் பெறுவதற்குரிய எண்ணம், இம்மூன்றும் வினைத் திட்பங்கள் ஆகும். (Ponnambalattar 2011) சிறுவணிகமோ, பெருவணிகமோ எதுவாக இருப்பினும் எண்ணமும் துணிவும் கொண்டு ஆற்றலோடு தொடங்கினால் அது வெற்றியில் முடியும். செய்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்கலாம் முடிவெடுத்தபிறக ஒருமுறை கூட அதைக்குறித்து எதிர்மறையாக யோசிக்கக் கூடாது என்பது வணிக முயற்சியில் முக்கியமான பண்பு இதனை வள்ளுவம்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இருக்கு" ) (Devaneya Pavanar, 2017)
தெரிந்து செயல்படும் முறை ஒரு செயல் செய்வதற்கு முன்பு அதற்குரிய விளைவை முன்னறிதல் முக்கியமான மேலாண்மைப் பண்பு செயல் எத்தகையதாக இருப்பினும் அதைக் குறித்த தெளிவோடு அவற்றை அணுக வேண்டும் செயல்கள் விளைவுகளைத் தரக்கூடியவை ஆக்கமும் வரலாம் அழிவும் வரலாம் இதனை வள்ளுவரின்
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்"
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் என்னும் குறள்கள் உணர்த்துகிறது (Devaneya Pavanar, 2017)
வல்லுநர் கருத்தறிதல் ஒரு தொழிலை வணிகத்தை, நிறுவனத்தை நடத்தும்போது சில நடைமுறைச் சிக்கல்கள் வருவது இயல்பு அத்தகைய சூழலில் அவற்றைச் சரிசெய்வதற்கு அவை குறித்தனுபவம் மற்றும் அறிவுடைய வல்லுநரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பயன்கொள்வது சிறப்பான மேலாண்மைப் பண்பாகும் இதனை.
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்' என்னும் குறள் புலப்படுத்துகிறது (Devaneya Pavanar 2017)
முதலீடு செய்தல் முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை என்கிறார் பொய்யில்புலவர் வணிகத்தில் முதன்மையான செயல்பாடு முதலீடு செய்தல் முதலீடு இல்லாத வணிகத்தில் பெருவாரியான லாபமும் வருவாயும் ஈட்ட முடியாது. முதலீடு செய்யும்போது தான் வணிகமும் அதன் பொருட்டு உருவாகும் உற்பத்தியும் லாபமும் குறித்து எதிர்பார்க்க முடியும் என்பது வள்ளுவத்தின் வரையறை
பொருள் இல்லாமல் செய்யப்படும் செயல் எளிதில் முடிவடைவதில்லை. தாம் போடும் முதலீட்டில் பாதுகாப்பு வேண்டுமென்றால் தேர்ந்தெடுத்த வணிகம் செய்ய முனைவோர் தம் கையிலுள்ள பொருளைப்போட்டு வணிகத்தை தொடங்க வேண்டும் என்பதை,
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை (Devaneya Pavanar, 2017)
பணியாளர் தேர்வு பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சிறப்பான பணியாளர்களைத் தேர்வதன் மூலம் கிடைக்கும் வளம் குறித்தும் சிறப்பு வாய்ந்த பணியாளரின் தகுதிகள் குறித்தும் செயற்கரிய செயலாற்றும் அத்தகையோரின் முக்கியத்துவம் குறித்தும் தெளிவான கண்ணோட்டம் கொண்டவராகத் திருவள்ளுவர் விளங்குகிறார் என்பதனை.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவல்பாற் றன்று
என்ற குறள்கள் மூலம் அறியலாம் (Devaneya Pavanar, 2017)
வணிகம் பேணுதல் வணிகத்தின் மேன்மைகளுள் ஒன்று பிறர் பொருளதை தம் பொருள்போல் மதிப்பது. தம் பொருளுக்குண்டான மதிப்பு பிறருடைய பொருளுக்கும் உண்டென்றும் பேணிக் காக்கும் அரிய குணம் வணிகத்தில் இது இன்றியமையாத கூறாக இருக்க வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். இதை. வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் ) (Devameya Pavanar, 2017)
முடிவுரை வணிக மேலாண்மைச் செயல்முறைகளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பி பழந்தமிழரின் நிர்வாக அறிவினை வெளிப்படுத்தி நிற்கிறது. தமிழ் செம்மொழி இலக்கியமான திருக்குறள். மேலாண்மை குறித்து கற்பதும் கற்பிப்பதும் அறிவு சார்ந்த சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதனை நிறுவுகின்றது வள்ளுவரின் திருக்குறள்.
References Arangarasan, V. (2015) Thirukural Vanigaviyal Kotpadukal, Chennai, India. Devaneya Pavanar, (2017) Thirukural Tamil Maraburai, Sri Indhu Pathippagam, Chennai, India Gnanasundaram, T. (2020) Thirukural Katturaikal, Poompavai Pathippagam, Chennai, India. Ponnambala Adikalar, (2018) Kundrakudi Adigalar Nool Varisai, Manivasakar Pathippagam, Chennai, India,
|