|
||||||||
கோஸ் பக்கோடா(cabbage pakoda) |
||||||||
தேவையானவை: முட்டைக்கோஸ் – 200 கிராம் பெரிய வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 2 மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் பச்சைக்கொத்தமல்லி – ஒரு கைப்பிடி பூண்டு – 2 பல் கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – ஒரு கைப்பிடி சோடா உப்பு – ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு சமையல் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை 1.முதலில் கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். 2.பிறகு கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும். 3.சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணையை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். 4.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|