LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மோடி அரசு மீது சிஏஜி புதிய குற்றச்சாட்டு !!!

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி, மற்ற மாநிலங்களை பொறாமை பட வைத்திருக்கிறது என பாரதிய ஜனதா கட்சி மார்தட்டி பேசிக்கொண்டிருக்கும் இந்நிலையில், அம்மாநிலத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

 

இந்த விவகாரம் குறித்து, மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

 

1. குஜராத் மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குரையினால் காணப்படுவதாக கண்டறியப்பட்டதை அடுத்து, அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ஒன்றை உருவாக்கியது. 

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் பயனாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 63.37 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்றும், அதற்கு போதுமான அங்கன்வாடி மையங்களை அரசு அமைக்காததே காரணம் என்றும் சிஏஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

2. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தது 300 நாட்களாவது பயனாளிகளாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 96 நாட்கள் மட்டுமே ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைந்த, ஊட்டச்சத்து குன்றிய குழந்தையாக காணப்படுகிறது. 

 

3. குஜராத் மாநிலம் முழுவதும் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவையாக உள்ள நிலையில், 52,137 மையங்களுக்கு மட்டுமே மாநில அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. இதிலும் 50,225 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 

 

4. கூடுதல் மையங்கள் அமைக்க மத்திய அரசு தரப்பில் கூறியபோதும், மாநில அரசு அதில் அக்கறை காண்பிக்கவில்லை என சிஏஜி குற்றம் சாட்டுகிறது. மேலும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த 2008 ஆம் ஆண்டே மத்திய அரசு, குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியபோதிலும், குஜராத் அரசு அது தொடர்பாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

by Swathi   on 05 Oct 2013  0 Comments
Tags: மோடி   நரேந்திர மோடி   குற்றசாட்டு   சி.ஏ.ஜி   ஊட்டசத்து குறைபாடு   CAG   Criticises Modi  
 தொடர்புடையவை-Related Articles
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !! பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !!
மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !! மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!
பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !! பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !!
பாட்னா குண்டுவெடிப்பு : அல் கொய்தா இயக்கத்திற்கு தொடர்பா !!! பாட்னா குண்டுவெடிப்பு : அல் கொய்தா இயக்கத்திற்கு தொடர்பா !!!
மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் !! மன்மோகன் சிங்கும், நரேந்திர மோடியும் ஒரே மேடையில் !!
கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல்தலைவர்களில் : மோடிதான் முதலிடம் !! கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல்தலைவர்களில் : மோடிதான் முதலிடம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.