|
||||||||
அறிவியற்கல்வியை முழுமையாக தமிழ்ப்படுத்திவிட முடியுமா? |
||||||||
அறிவியலென்பது வேறு, மொழியென்பது வேறு. அறிவியற்கலைச்சொற்களை தமிழில் மொழிபெயர்த்துத்தானாகவேண்டுமென்பது தேவையற்றதெனச்சொல்லமுடியாதென்றாலும், அத்தனைச்சொற்களையும் மொழிபெயர்த்துத்தான்கொள்ளவேண்டுமென்பதில் நாம் உறுதியாயிருப்போமானால், உலகத்தோடொட்டவொழுகல் இயலாததாகிவிடும். 'அல்லிவட்டம்' 'புல்லிவட்டம்' 'மகரந்தம்' போன்ற தமிழ்ச்சொற்களை பள்ளியில் கற்பிக்கிறோம். இந்த சொற்கள் பள்ளியிற்பயன்படுமேயன்றி, ஒரு மாணவன் உலகளவில் பேர்பெற்று கட்டுரைகளை உலகளவில் வெளியிடும்போது இந்த சொற்களை பயன்படுத்தமுடியாதாகையால் அப்போது அவன் ஆங்கிலச்சொற்களையேகொள்ளவேண்டியிருக்கும். இதுபோல் இயற்பியல், வேதியியல், வானியல், மின்னியல், எந்திரவியல், கணிணியியல் என எல்லாத்துறைகளிலும் தமிழர்கள் உலகளவில் பேர்பெற்றுவிளங்கவேண்டுமானாலும் உள்ளூரில் ஒரு வேலையிலமரவேண்டுமானாலும் ஆங்கிலத்திற்கற்றிருப்பதே மேல். சில பொறியியற்படிப்புகளை தமிழ்ப்படுத்திவிட்டதாகவும் தமிழில் அவை கற்பிக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். இப்போது மருத்துவக்கல்வியையுங்கூட தமிழ்ப்படுத்துவதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறையில் கையாளப்படும் பலசொற்கள் ஆங்கிலச்சொற்களேயல்ல. ஆனாலும் அவை இன்று ஆங்கிலச்சொற்களே. அதுபோல் அவற்றையெல்லாம் தமிழ்ச்சொற்களாகவுங்கொள்வதே அறிவுடைமை. தமிழ்ப்படுத்துவோமெனப்புகுந்து அத்தனைச்சொற்களையுந்தமிழ்ப்படுத்தமுனைவது குழப்பத்தையேயுண்டாக்குவதாயிருக்கும். ஒருவேளை எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்திவிட்டோமென்றால் உலகளவில் மருத்துவத்துறைவல்லுனர்களோடு நம்முடைய தமிழ்மருத்துவர்கள் (தமிழிற் கற்ற மருத்துவர்கள்) தொடர்புகொள்ளக்கூடமுடியாதவர்களாகவேயிருப்பார்களென்பதே உண்மைநிலையாயிருக்கும்!
-மருத்துவர் பொன்முடி வடிவேல் |
||||||||
by Swathi on 26 Jun 2014 2 Comments | ||||||||
Tags: அறிவியல் - தமிழ் Science - Technology | ||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|