|
|||||
கேரட் கீர் |
|||||
தேவையானவை : கேரட் - 1/2 கிலோ தேங்காய் - 1/2 மூடி (அ) துருவல் 1 கோப்பை ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை - 150 கிராம் முந்திரி - 5 செய்முறை : 1. முதலில் கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே துருவி வைத்துக் கொள்ளவும். 2. அடுத்ததாக துருவிய கேரட் மற்றும் தேங்காயை தனித்தனியே (மிக்ஸியில்) அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். 3. ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு சாற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலக்கவும். 4. முந்திரியை மெல்லிய சீவலாக சீவி அதனுடன் கலந்து கொள்ளவும். |
|||||
by srikarthika on 22 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|