|
|||||
காரட் பாயசம் |
|||||
தேவையானவை : காரட் - 1 கிலோ எல்லோ பவுடர் - சிட்டிகை பால் - லிட்டர் சர்க்கரை -100 கிராம் முந்திரிப்பருப்பு - 25 கிராம் நெய் - 2 ஸ்பூன் செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் காரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, அதை அவித்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் நன்றாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறி சர்க்கரை சேர்க்கவும். 2.சர்க்கரை கரைந்து காரட் நன்கு சூடானதும் இறக்கி விடவும். பாலை நன்கு காய்ச்சி ஆறவிட்டு, ஆறிய காரட் கலவையுடன் கலந்து விடவும். 3.ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரிப்பருப்பு பொடியாக உடைத்ததை சிவக்க வறுத்து. பாயசத்தில் சேர்க்கவும். ரோஸ் எஸன்ஸ் 5 சொட்டு ஊற்றிக் கலக்கி எல்லோ பவுடரையும் சேர்த்து கலக்கி குளிர் சாதனப பெட்டியில் வைத்து எடுக்கவும். |
|||||
by sridevi on 21 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|